Author: Editor TN Talks
GST அலுவலகம் மற்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள GST அலுவலகத்திற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில், ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. இதேபோல, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. இதனால் GST அலுவலகம் மற்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகிய அலுவலகங்களில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் தீவிர சோதனை கொண்டு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் பகவந்த் மான் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதன் பின்னணியில் இருப்பபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் ஆகியோர் இடையே அண்மையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிராக பொதுவெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளை தெரிவிப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் தனக்கு எதிரான அவதூறான, ஆதாரமில்லாத கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி, ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவில், இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரி…
புதிய ஜிஎஸ்டி வரி முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பைக், ஏசி உள்ளிட்டவைகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் அமலில் இருந்த சரக்கு சேவை வரிகளில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என 4 அடுக்கு முறையாக இருந்த ஜிஎஸ்டி வரியில் கடந்த 3ஆம் தேதி மாற்றங்கால் செய்யப்பட்டது. அதில் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் ஆடம்பர பொருட்களுக்கு 40% வரை வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரெடிமேட் பரோட்டா, சப்பாதிக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது. இதேபோல் நூடுல்ஸ், ரெடிமேட் பாஸ்தா, சாக்ல்ட் வரி 5% ஆக இருப்பதால் அவற்றின் விலையும் குறைய வாய்ப்புள்ளது. நெய், வெண்ணெய் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு கிலோவுக்கு…
திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நேற்று திண்டுக்கல் வந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காகவும் நவராத்திரி விழாவிற்காக பாரத பிரதமர் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைய இந்த முறையை கொண்டுவந்துள்ளார், இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் பாஜக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வந்துள்ளோம் எனவும் நாளையில் இருந்து ஜி எஸ் டி வரி குறைகின்றது, பெரும்பாலும் 5 சதவிகிதம் வரை குறைகின்றது, குறிப்பாக 5 சதவிகிதத்தை 0 வாக ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் இருந்தால் இருவரும் பயன்பெறும் வகையில் இருக்கும்… 28 சதவிகித கட்டுமான பொருட்கள் விலை 10 சதவிகிதமாக குறைவு. சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் குறைக்கப்படாமல் இருந்தால் அது குறித்து நுகர்வோர் புகார் அளித்தால் நடவடிக்கை…
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்ததராஜன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.. திமுகவின் இந்து எதிர்ப்பு பிரச்சனையினால் நாங்கள் கலாச்சாரப் போரில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கீழடி பொறுத்தவரை நாங்கள் தமிழர்களின் தொன்மையை மறைப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் தொன்மையை வெளிக் கொண்டு வருவதற்கு அதிக நிதி கொடுத்தவர் பாரதப் பிரதமர். நாங்கள் கோட்டைக்கு செல்லும்போது இரட்டை இலையுடன் தாமரை மலரும். கலாச்சார போரை நிலை நிறுத்துவோம். திமுக மக்களுக்கு எதிர்ப்பாக இருக்கிறது நாங்கள் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதற்கு உதாரணம் ஜிஎஸ்டி. வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார் இது குறித்த கேள்விக்கு:- வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். ஹைட்ரஜன் பாம் போடுகிறேன் என்று சொல்கிறார்கள். பாரதப் பிரதமர் ஆப்ரேஷன் சிந்தூரே நடத்திக் காண்பித்தவர். எந்த ஹைட்ரஜன்…
இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் சென்னை ஒன்று மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார் இந்த செயலி மூலம் மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் Cab, ஆட்டோக்களில் ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2 ஆவது ஆணைய கூட்டமானது சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2 வது ஆணைய கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR (Quick Response) பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சென்னைப் பெருநகரப் பகுதிக்கான (5,904 சதுர கி.மீ) விரிவான…
அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளையை பணியிட மாற்றம் செய்த அரசின் உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொண்டதற்காக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். தமிழக மருத்துவமனைகளின் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை, சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி, கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பாதயாத்திரை மேற்கொண்டார். இந்நிலையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவரை, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே…
மாநிலங்களில் சம்பளம் மற்றும் வருவாய் இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டில் நாட்டின் மொத்த வருவாய் செலவினம் ரூ.35.95 லட்சம் கோடியாக இருந்தது. இதில் சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றின் செலவு மட்டும் ரூ.15.63 கோடியாக இருந்தது. மானிய செலவு ரூ.3.9 லட்சம் கோடியாகவும், மானிய உதவி செலவு மட்டும் ரூ.11.26 லட்சம் கோடியாகவும், இருந்தது. மொத்தமாக செலவு தொகை ரூ.29.99 லட்சம் கோடியாக இருந்தது. இது வருவாயின் மொத்த செலவினத்தில் 83 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளடு. இந்த செலவினம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.6.26 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் செலவின தொகை மட்டும் 2.49 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் 2013-14 நிதியாண்டில் ரூ.96.479 கோடியாக இருந்த மானிய செலவு தற்போது ரூ.3.9 லட்சம் கோடியாக அதாவது 3.21 மடங்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் வருவாய் செலவினம் மட்டும் 2.66 மடங்கு உயர்ந்துள்ளதாக…
கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதால் அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் பகுதிகளில் அமீபா மூளைக்காய்ச்சல் நோய் தொற்று அதிகமாக பரவி வருகிற்து. இந்த காய்ச்சலால் கோழிக்கோட்டில் 9 வயது சிறுமி, 3 மாத குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதேபோல் திருச்சூர் மாவட்டத்தில் 59 வயதானவர் கடும் காய்ச்சல், தலைவலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகளை சோதனை செய்ததில் அவருக்கு அமீபா மூளை காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் அந்த நபர் பணியாற்றி வந்த இன்னொருவரும் இறந்ததால் அவர்கள் வேலை செய்து வந்த ஹோட்டலை மூட மாநகராட்சி உத்தரவிட்டது. மேலும் ஹோட்டல் இருக்கும் பகுதியில் உள்ள கிணற்று நீரை எடுத்து சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.…
ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் சென்னை ஒன்றி சென்ற செயலியை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைபின் 2வது ஆணை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் பயணச்சீட்டு மற்றும் திட்டமிடல் செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதாவது இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் விதமாக ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்பட கூட சென்னை ஒன்று செயலி பயன்பாட்டுக்கு வ்ருகிறது. இதன் மூலம் மின்சார ரயில், மெட்ரோ ரயில், ஆட்டோ, கார்களை ஒரே கியூஆர் கோடு மூலம் இணைப்பதால் அதன் இயக்க நேரத்தை அறிந்து கொள்ள முடியும். மேலும் யுபிஐ அல்லது கட்டண அட்டைகள் மூலம் பயண சீட்டுகளை பெற்று ஒரே பதிவு மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்ய முடியும். இந்த…