Author: Editor TN Talks

அதிமுகவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீடு இருக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையனின் சர்ச்சையால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி சந்தித்து பேசியது கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பிய எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது வெளிப்படையானது. அரசு காரில் சென்று தான் அவரை சந்தித்தேன். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். என் எழுச்சி பயணம் சிறப்பாக இருப்பதாக கூறி அமித்ஷா பாராட்டினார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நான் அமித்ஷாவிடம் பேசவில்லை. அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இருக்காது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று அமித்ஷாவே…

Read More

வாக்குத்திருட்டு செய்ததற்கான நூறு சதவீத ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராகுல்காந்தி பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். அதை தொடர்ந்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில், வாக்கு திருட்டில் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது. இளைஞர்கள் தேர்தல்களில் எவ்வாறு மோசடிகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதை நிரூபிப்பதில் இது ஒரு மைல்கல். ஜனநாயகத்தை சீர்குலைப்பவரை தேர்தல் ஆணையம் காப்பாற்ற முயற்சிக்கிறது. தேர்தல்களின் போது லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்க யாரோ ஒருவர் முயற்சிக்கிரார். கர்நாடக மாநிலத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ஆலந்தில் 6018 வாக்குகள் நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிப்பட்டார். இப்படி தேர்தலின்போது வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையில் யாரோ ஒருவருக்காக சில சக்திகள் செயல்படுகின்றன. வாக்குத்திருட்டு தொடர்பான இந்த குற்றச்சாட்டுகளுக்கு 100 சதவீத ஆதாரம் உள்ளது. என்னுடைய புகார்கள்…

Read More

வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அதிக நீர் திறப்பு காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 69 அடியை எட்டியிருந்த நிலையில் தொடர் நீர்வரத்தால் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு மேல் உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் வைகை அணையில் நீர் இருப்பு அதிகம் இருந்ததன் காரணமாக வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் உள்ள பெரியாறு பாசனப்பரப்பில் ஒருபோக பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து இன்று நீர் திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக்…

Read More

செங்கல்பட்டில் மது அருந்த பணம் தராததால் தாயை கொளுத்திய கொடூர மகனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நத்தம் கெங்கையம்மன் கோயில் தெருவை  சேர்ந்தவர் எஸ்தர் (65). இவரது மகன் விக்டர் ராஜேந்திரன் (45). திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரசு ஊழியராக பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விக்டர் ராஜேந்திரன் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆத்தூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வரும் நிலையில் விக்டர் மட்டும் தனது தாயோடு செங்கல்பட்டில் இருந்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையான விக்டர் ராஜேந்திரன் தினமும் மதுபோதையில் தனது தாயை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  வழக்கம் போல் தன் தாயிடம் மது அருந்த  பணம் கேட்டு விக்டர் ராஜேந்திரன் சண்டையிட்டுள்ளார். அவர் பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம்…

Read More

சென்னையில் பிரபல தங்க நகை வியாபாரி வீடு, மார்க் ப்ராப்பர்ட்டீஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாகத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது வழக்கமாகி வருகிறது. அரசியல் தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்து வரும் சுழுஅலில் தற்போது நகை வியாபாரிகளிடமும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க நகை விற்பனையில் ஈடுபட்டு வரும் மோகன்லால் காத்தாரி என்பவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கம் தம்புசாமி தெருவில் வசித்து வரும் மோகன்லால் காத்தாரி என்பவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு போலீசாரின் பாதுகாப்போடு சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல்…

Read More

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு No Entry என்றும், தமிழ்நாட்டில் திராவிட மாடல் 2.0 வெற்றி உறுதி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கபப்ட்ட நாளை ஒன்றாக இணைத்து முப்பெரும் விழாவை திமுக கரூரில் பிரமாண்டமாக நடத்தியது. கோடங்கிபட்டியில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, டெல்லி நம் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கும், அடக்குமுறைக்கும் திணிப்புக்கும், பாஜகவுக்கு அன்றும், இன்றும் நோ எண்ட்ரி தான். 2019ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் எதிரிகளை கலங்கடிக்கும் வகையில் தொடர் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்து திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். உங்களை போன்ற தொண்டர்கள் இருப்பதால் திமுகவை யாராலும் அழிக்க முடியாது. உங்களுக்கு தலைமை தொண்டனாக நான் இருப்பது வாழ்க்கையில் பெற்ற பெரும்பேறு. எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…

Read More

“காந்தி கண்ணாடி” படத்தில் பிரதமர் மோடி குறித்து இழிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கேபிஒய் பாலா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கேபிஒய் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் “காந்தி கண்ணாடி”. சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை செரீப் இயக்கி இருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனம் எழுந்துள்ள நிலையில்  படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவசேனா கட்சி (தமிழ்நாடு) மாநில அமைப்பாளர்  வேணுகோபால்ஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “காந்தி கண்ணாடி”  திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியிலும், வசனத்திலும், பாடல்களிலும் பிரதமர் மோடி குறித்து இழிவுப்படுத்துவதாக உள்ளது. திரைப்படத்தின் இயக்குநர், பிரதமரை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார். இது மக்களை குழப்பத்தில் தள்ளும் செயல். ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்து பொருளாதார மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி வழிவகுத்துள்ளார். ஆனால்…

Read More

மயிலாடுதுறை இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் தாய் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்து வீட்டிற்கு அருகே சிலரா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வைரமுத்து கொலைக்கு அவர் காதலித்த பெண் வீட்டாரே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இருவரும் வேறு சாதி என்பதால் தன் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணின் குடும்பத்தார் வைரமுத்துவை கொலை செய்ததாக கூறி அவரது தாய் ராஜலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வைரமுத்து மரணம் கொலை வழக்காக 6பேர் மீது பதிவு செய்யப்பட்டது. கொலை குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின் நேரில் விசாரணை மேற்கொண்டார். இக்கொலை சம்பந்தமாக மயிலாடுதுறை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார்…

Read More

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம்  அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் மாலினி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் திருமணம் செய்ய வைரமுத்து குடுபத்தார் ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு தனது வீட்டுக்கு வந்த வைரமுத்துவை அடையாளம் தெரியாத சிலர் ஓட ஓட விரட்டி சென்று  வெட்டி படுகொலை செய்தனர். காதல் விவகாரத்தில் மீண்டும் ஒரு படுகொலை அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, வைரமுத்துவின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாதி வன்கொடுமை காரணமாக வைரமுத்துவின் கொலை நடந்திருப்பதால் இதனை ஆணவ படுகொலையாக கருத வேண்டும் என்றும், காதலியின் பெற்றோர் மீது ஜாதியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு…

Read More

மயிலாடுதுறை அருகே 10 வருட காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார் காதலனை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதியில் பெரியகுளம் அருகே உள்ள பக்கத்து தெருவில் (காலணி தெரு) வசிக்கும் குமார் என்பவரின் மகளான மாலினி என்ற பெண்ணை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த மாலினி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். வைரமுத்துவின் காதலுக்கு மாலினி வீட்டார் எதிருப்பு தெரிவித்து வந்ததால்  இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார்…

Read More