Author: Editor TN Talks

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து டிடிவி தினகரனும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டுமென செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் அவரை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன் அங்கு மத்திய உள்துறை அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசியுள்ளார். அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே அமிஷ்தாவிடம் கூறியதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், செங்கோட்டையனை தொடர்ந்து டிடிவி தினகரனும் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செங்கோட்டையனுக்கு முன்னதாக டிடிவி தினகரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அது தள்ளிபோனதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று தினகரன் அமித்ஷாவை சதிக்கலாம் என்றும், அவரை தொடர்ந்து சசிகலாவும் அமித்ஷாவை சந்திக்கலாம்…

Read More

குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருணனுக்கு, சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, 15ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டார். இந்த தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமுள்ள 767 வாக்காளர்களில் 452 வாக்குகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாகவும், சுதர்ஷன் ரெட்டிக்கு ஆதரவாக 300 பேரும் வாக்களித்தனர். இதன்மூலம்  அதிக வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில், அவரது எண்ணம், செயல் வெற்றியடைய வாழ்த்துவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதால் அவர் அதிமுகவின் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில் ஹரித்துவார் செல்வதாக கூறி திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன், அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதையடுத்து இன்று பிற்பகல் மீண்டும் கோவை திரும்பிய செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ”அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை செங்கோட்டையனே என்னிடம் பேசியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக கட்சி இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என சொல்லிக்கொண்டு உள்ளேன். கழகம் ஒன்றிணைவதற்காக முழு முயற்சியை…

Read More

நேற்றைய தினம் ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டு, டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த சம்பவம் அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசுவதாக கூறி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை கூறினார். இதனால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற  செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் ஹரித்துவார் செல்வதாகவும், அங்கு ராமரை தரிசிக்க இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவை திரும்பிய செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு மீண்டும் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நேற்றைய தினம் ஹரித்துவார் செல்வதாக கூறி டெல்லி சென்ற…

Read More

நேபாளத்தில் நேற்று வெடித்த வன்முறை கருப்பு நாள் என நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். அண்டை நாடான நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததால் எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அங்கு கலவரம் ஏற்பட்டது. இந்த சம்வத்தில் 19 பேர் உயிரிழந்தனர். சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களை தன்னிச்சையாக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் நேபாளம் கலவரம் தொடர்பாக மனிஷா கொய்ராலா கண்டன கருத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட மனிஷா கொய்ராலா, வன்முறை நடந்த நாளை “கருப்பு நாள்” என பதிவிட்டுள்ளார். அதாவது போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், அரசின் அடக்குமுறையையும் கண்டிக்கும் விதமாக வன்முறை நாளை கருப்பு நாள் என குறிப்பிட்டுள்ள மனிஷா கொய்ராவுக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.

Read More

செப்டம்பர் 15-ஆம் நாள், 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் – அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களை அழைத்து, BLA, BDA, BLC-களின் கூட்டங்களை நடத்த வேண்டும். செப்டம்பர் 20-ஆம் நாள், ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை கழக மாவட்டங்கள் வாரியாக நடத்த வேண்டும். அரசின் திட்டங்களால், மக்களிடையே நமக்கு இருக்கும் ஆதரவு உணர்வை அப்படியே தேர்தல் வரைக்கும் எடுத்துச் சென்று அறுவடை செய்ய ஒவ்வொருவரும் களத்தில் தீவிரமாகப்பணியாற்ற வேண்டும். கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும்  சொல்கிறேன்… தேர்தல் முடியும் வரைக்கும்“ஓய்வு” என்ற சொல்லையே மறந்துவிடுங்கள் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (09-09-2025) காணொலிக் காட்சி வாயிலாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்,படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின்வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம்…

Read More

துணை குடியரசு தலைவர் தேர்தலில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இடையே போட்டி நிலவி வருகிறது. துணை குடியரசு தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நல குறைவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை துணை குடியரசு தலைவர் பட்டியலுக்கு போட்டியிடுவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபப்ட்டது. அதன்படி பாஜக கூட்டணியில் மகராஷ்டிர மாநில ஆளுஅர் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவை சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் இருவரும் துணை குடியரசு தலைவர் பதவிக்கு…

Read More

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் மீது பழிவாங்கும் நோக்குடன் வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். வரும் 13ம் தேதி திருச்சியில் விஜய் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளுக்காக திருச்சிக்கு புஸ்ஸி ஆனந்த் சென்றார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க தவெக தொண்டர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக கூறி புஸ்ஸி ஆனந்த் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள்…

Read More

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது. நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற உள்ளீடுகளை தடுப்பதற்காகவும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கியது. இதனை எதிர்த்து ‘ஜென் எக்ஸ்’ (Zen X) 1995 முதல் 2000ஆம் ஆண்டிற்குள் பிறந்த இளைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு போராட்டங்களின் அலை காத்மாண்டுவிற்கு அப்பாலும் பரவியுள்ளது. மேலும் போக்காரா, புட்வால், சித்வான், நேபாள்கஞ்ச் மற்றும் பிராட்நகர் ஆகிய நகரங்களுக்கு பரவியது. போராட்டத்தின் ஒரு வடிவமாக, இளைஞர்கள் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள்…

Read More

கரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் முப்பெரும் விழாவின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அண்மையில் ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் கட்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறர். திமுகவின் முப்பெரும் விழா குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சர் தலைமையில் இன்று மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி மூலம் திமுகவின் மாவட்ட செயலாலர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி திமுகவில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட செயலாளர்களின் கட்சி பணிகள், தேர்தல் பணிகள், தொகுதி நிலவரம் குறித்து முதலமைச்சர் கேட்க…

Read More