Author: Editor TN Talks
உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறக்கப்பட உள்ளதால் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்ச்சமூகம் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்கு காரணம் பெரியார்தான். அவரது சிந்தனையை உலகு தொழும் காட்சியை நாம் இந்த பயணத்தில் காண போகிறோம். உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்த புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப் படத்தை திறக்கப்பட உள்ளதால் பெருமை கொள்கிறேன்” என கூறியுள்ளார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே பெரியார் உருவப்படம் திறப்பு தொடர்ப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்…
தமிழ்நாட்டில் 46 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது, ஆனால் கோவில் சொத்துக்கள் மூலமாக வரக் கூடிய வருமானம் மட்டும் வெறும் 300 கோடி தானா என்று இந்து சமய அறநிலையத்துறையை நோக்கி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் வடக்கு பகுதியில் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று நீரில் கரைக்கப்படும் நிலையில் துடியலூர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற உள்ள பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசும்போது :- கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் எந்த விதமான வெளிப்படை தன்மையும் இல்லை. மூன்று லட்சம் கோடி ஒரு அரசு பட்ஜெட் போட்டும், வருமானம் இல்லை கோவில் பக்தர்கள் கொடுத்த நகைகளை, பிரித்து அதில் வரக் கூடிய சில கோடிகளை வைத்து தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்று திமுக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக்…
மூளையை தின்னும் அமீபாவின் பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செப்ஹாலிடிஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கோழிக்கோடு, மூணாறு பகுதிகளில் இருக்கும் தூய்மையற்ற நீர்நிலைகளில் குளித்த சிறுமிக்கு அமீபா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நீர் நிலைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மூளைக்குள் நுழையும் அமீபா மெல்ல மெல்ல திசுக்களை அழிக்கும். இதனால் தலைவலி, காய்ச்சல், வாய்ந்தி ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நபர் கோமாவுக்கு கூட செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவரின் உடலில் அமீபா செல்லும்போது அது திசுக்களை உண்டு வளர்வதுடன், கழுத்தை இறுக்கும் என்றும் அதனால் பாதிக்கப்பட்ட நபர் கவனத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அமீபா ஒருவரது உடலுக்குள் நுழைந்த 18 நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மூளையை உண்ணும் அமீபாவின் பாதிப்பு அரிதானது என கூறும்…
செய்வினை நீங்க சொந்த பேரனையே நரபலி கொடுத்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய முதியவரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜ் அடுத்த கரேலி பகுதியை சேர்ந்தவர் அஜய் சிங் – காமினி தம்பதி. இவர்களின் 17 வயது மகன் பியூஸ் கரேலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அஜய் சிங் இறந்ததாக கூறப்படுகிறது. தாய் காமினி அரவணைப்பில் பியூஸ் இருந்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பியூஸ் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு போனதாகவும் மாலை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த காமினி அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சூழலில் மிர்சாபூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருக்கும் ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அங்கு விரைந்து சென்ற…
நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எளிமையாக வீட்டில் நடந்து முடிந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தற்போது மகுடம் படத்தில் நடித்து வருகிறார். 48 வயதை நெருங்கிய விஷாலுக்கு எப்போது திருமணம் என கேள்வி எழுந்த போது நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனக்கு திருமணம் என விஷால் உறுதியாக கூறி வந்தார். இந்த சூழலில் சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் பங்கேற்றனர். அப்போது விஷால் உடனான காதலை அனைவர் முன்னிலையிலும் அறிவித்த சாய் தன்ஷிகா, ஆகஸ்ட் 29 ஆம் தேதி இருவர்ம் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். தற்போது நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் நிறைவு பெறாத சூழலில், விஷால் சொன்னப்படி அவரது திருமணம் சொன்னப்படி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் விஷால் – சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் அவரின் குடும்பத்தார் முன்னிலையில்…
திருமணம் செய்துவிட்டு சேர்ந்து வாழ மறுப்பதாக பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிறிசால்டா புகார் தெரிவித்துள்ளார். சமையல் கலை நிபுணரும், திரையுலக பிரமுகருமான மாதம்பட்டி ரங்கராஜ் அனைவராலும் அறியப்பட்டவர். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் இல்ல விழாக்களில் சமையல் செய்து பெரும் பிரபலமடைந்தார். அவரது பாரம்பரிய உணவுகள் பொதுமக்கள் மத்தியிலும், சமையல் ஆர்வலர்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த மாதம்பட்டி ரங்கராஜ், ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். தொடர்ந்து, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசால்டாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை சமூக…
அதிமுக தொண்டர்கள் சார்பில் வழக்குத் தொடர அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர். அதிமுக கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே.சி. பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர் அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதிமுக கட்சி விதிகளை திருத்தம் செய்ததை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதற்கு ஏற்ப விதிகளை திருத்தம் செய்தது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அதிமுக தொண்டர்கள் சார்பாக கட்சி விதிகள் திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடர, ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார்.…
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து சத்துணவு ஊழியர்களையும் திமுக அரசு வஞ்சிக்கிறது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி எண் 313-ல் “சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாகப் பணியமர்த்துவோம்” எனப் பொய் வாக்குறுதி கொடுத்து அம்மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்த @arivalayam, அரியணை ஏறியதும் வழக்கம் போல அந்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. தூய்மைப் பணியாளர்களைப் போலவே நான்காண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்து இறுதியில் பொறுமையிழந்த சத்துணவு ஊழியர்கள் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆளும் அரசின் நிர்வாக அலட்சியத்தை எதிர்த்து தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் சத்துணவு ஊழியர்களுக்கு தமிழக பாஜக சார்பில் முழு ஆதரவு அளிக்கப்படும் எனவும், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு அம்மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…
இன்றைய தேதிக்கு இளைஞர்களின் ஒட்டுமொத்த ஹாட்ஸ்டார் யார் என்றால் அது பிரதீப் ரங்கநாதன் தான். அதுவும் ட்ராகன் படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் அதிரிபுதிரி உயரத்திற்கு சென்றுள்ளது. லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல இடங்களில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மமிதாவின் அசத்தல் நடனம்…
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போரை ஊக்குவிக்க இந்தியாவும் மறைமுகமாக உதவுவதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வர்த்தக ஆலோசகராக இருப்பவர் பீட்டர் நவர்ரோ. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய உதவியாளரான இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகின்றனர் என்றார். இந்தியாவின் அதிக வரி விதிப்புகளால், அமெரிக்காவில் தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர் என்றார். மோடியின் போருக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது என்றும் நேரடியாக பிரதமரின் பெயரை குறிப்பிட்டு விமர்சித்தார். அப்போது, புதினின் போர் என கூற விரும்புவதற்கு பதிலாக, தவறாக கூறி விட்டீர்களா? என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதற்கு, வேண்டும் என்றே தான் கூறினேன் என மீண்டும் அழுத்தம் திருத்தமாக பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்தார். அமைதிக்கான வழியானது புதுடெல்லியின் வழியேயும் செல்கிறது என பீட்டர்…