Author: Editor TN Talks
உற்பத்தித் துறையில் 2023-24 ஆண்டில் அதிக வேலைவாய்ப்புகளை தந்துள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற மத்திய அரசின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு.. திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ இதோ! சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் – போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது! #DravidianModel ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள்…
பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என நீதிபதி தெரிவித்ததை அடுத்து, இதுசம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பகுதியில் 5 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, காலி ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் கமலக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விமான நிலையம் அமைக்க கையகப்படுத்த உள்ள 5,747 ஏக்கர் பரப்பில், 26.54 சதவீதம் நீர்நிலைகள் என்றும், ஏகனாபுரம் மக்கள் தங்கள் பாசன வசதிக்காக காலி ஏரியை மட்டும் நம்பியுள்ளதாகவும்…
சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலம் குறித்து விசாரித்த பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 22ம் தேதி, வீட்டில் கீழே விழுந்த காரணத்தால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையிலும், இடது கை விரலிலும் காயம் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் CT SCAN அம்மருத்துவமனையிலேயே பரிசோதனையில் தலையில் உள்காயம் ஏதும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர் 24ம் தேதி மாலை உணவு அருந்தும் போது உணவுக் குழாயில் புரையேறியதால், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அதனால் மேல் சிகிச்சைக்காக, அன்று இரவு 10.30 மணி அளவில் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழுவின் பரிந்துரைப்படி, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உணவுப்பொருட்கள் சுவாசக் குழாயில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, Bronchoscopy…
விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாய் கருத்தடை மையம் அமைக்க தடை கோரிய வழக்கில், சென்னை மாநகராட்சி 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நேரு விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள கண்ணப்பர் திடலின் ஒரு பகுதியில் நாய் கருத்தடை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அன்னை கல்வி மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளை நிறுவனர் சிவ குணசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை, வேறு எந்த வித பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால், கண்ணப்பர் திடலில் நாய் கருத்தடை மையம் அமைக்கும் மாநகராட்சியின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில்,…
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புது விநாயகர் மண் சிலை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொலுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவற்றை படைத்து வழிபட்டு வருகின்றனர். அதேப் போல இந்து அமைப்பினர் பெரிய பெரிய சிலைகளை நிறுவி பூஜை செய்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ”வினைகளைத் தீர்த்து வெற்றிகளை வழங்கிடும் மங்கள நாயகன். கேட்கும் வேண்டுதலுக்கு செவிசாய்த்து அருள் பாலிக்கும் அருகம்புல் பிரியன். அனைத்திற்கும் முதலான தெய்வமாக வணங்கப்படும் கணபதியைச் சிறப்போடு கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்விலும் செல்வம், வளம், ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கிட விநாயகப் பெருமானை…
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, திண்டுக்கல்லில் உள்ள 32 அடி உயர மகா கணபதிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கோபாலசமுத்திரக் கரையில் ஒரே கல்லிலான 32 அடி விநாயகர் சிலை அமைந்துள்ளது. ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான இந்த மகா கணபதிக்கு சதுர்த்தியை ஒட்டி, பால், பன்னீர், தயிர், இளநீர் உட்பட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒளி ஊட்டும் வகையிலான பண்டைய கால பாரம்பரிய முறைப்படி 1008 காமாட்சி அகல் விளக்கு, ஐந்து முக குத்து விளக்குகளால் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேப் போல் கோயிலில் உள்ள 108 விநாயகருக்கும் அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை அடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வணங்கி சென்றனர்.
வாக்காளர் அதிகார் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் புறப்பட்டு சென்றார். பீகாரில் சமீபத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். தேர்தல் ஆணையத்தின் இந்த செயலை எதிர்த்து, வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 17-ம் தேதி சசாரம் நகரில் தொடங்கிய இந்த யாத்திரை, 16 நாட்கள் நடைபெற்று பாட்னாவில் வரும் 1-ம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரை 1,300 கிலோ மீட்டர் வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், பீகாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கவுள்ளார். இதற்காக சென்னையில்…
த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த 21-ம் தேதி விஜய்யின் தவெக கட்சி சார்பில் 2வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 2,500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அத்தோடு மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையில் விஜய் பவுன்சர்கள் புடைசூழ நடந்து வந்தார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் கட்சியின் துண்டை அவர் நோக்கி வீச, அதனை அணிந்து கொண்டார். அப்போது தடையை மீறி சிலர் விஜய்யை நெருங்க முயன்ற போது, அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை குண்டுகட்டாக மேடையில் இருந்து தூக்கி எறிந்தனர். அவ்வாறு தூக்கி எறியப்பட்ட நபர் ஒருவர் உடனடியாக எழ முடியாமல், தரையில் புரண்டு தவித்தார். அதேப் போல மற்றொரு நபரை பவுன்சர்கள் தூக்கி வீசும் போது, அவர் அங்கிருந்த மேடையின்…
தமிழ்நாட்டைப் போல பஞ்சாப்பிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார் நகர்ப்புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க பஞ்சாப் முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் விழாவில் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் நான் இங்கு இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் பசியுள்ள குழந்தையால் கற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் குழந்தை படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்றார். இந்தத் திட்டத்தை எனது அமைச்சரவையிலும் விவாதிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பஞ்சாப் இந்தியாவின் உணவுச் சுவர் என்றும் எங்களிடம் அரிசி மற்றும் கோதுமை பற்றாக்குறை இல்லை. எங்கள் விளைபொருட்களை மத்திய நிதிக்குழுவிற்கு வழங்குகிறோம் என்றார் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால்…
குடியரசு தலைவர், ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்த காலநிர்ணயம் செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் விசாரணை நான்காவது நாளாக நடந்துவருகிறது . இன்றைய தினம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு காலநிர்ணயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்துக்கு என்ன பதில் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி இரண்டாவதாக ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதனை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியுமா? ஆளுநருக்கு வீடோ அதிகாரம் உள்ளதா? நீதிபதிகள் கேள்வி மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்ப இயலுமா? அதன் விளைவுகள் என்ன? என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி