Close Menu
    What's Hot

    கண்களும் நர்த்தனம் புரியும் நாட்டியப் பேரொளி பத்மினி

    கோல்களை விட சிவப்பு அட்டைகள் அதிகம் ; 3 வீரர்கள் வெளியேற்றம் – பிஃபா முதல் போட்டியின் சுவாரஸ்யங்கள்

    இன்று தொடங்குகிறது 10-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நல்லக்கண்ணு உடல்நிலை – மா.சு விளக்கம்
    தமிழ்நாடு

    நல்லக்கண்ணு உடல்நிலை – மா.சு விளக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puthiyathalaimurai import uploads news
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலம் குறித்து விசாரித்த பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 22ம் தேதி, வீட்டில் கீழே விழுந்த காரணத்தால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையிலும், இடது கை விரலிலும் காயம் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் CT SCAN அம்மருத்துவமனையிலேயே பரிசோதனையில் தலையில் உள்காயம் ஏதும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

    பின்னர் 24ம் தேதி மாலை உணவு அருந்தும் போது உணவுக் குழாயில் புரையேறியதால், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அதனால் மேல் சிகிச்சைக்காக, அன்று இரவு 10.30 மணி அளவில் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழுவின் பரிந்துரைப்படி, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உணவுப்பொருட்கள் சுவாசக் குழாயில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, Bronchoscopy மூலமாக உணவுக் துகள்கள் அகற்றப்பட்டது. நோயின் தீவிர தன்மையை அறிந்து அவருக்கு Antibiotics மற்றும் பிற மருந்துகள் செலுத்தப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் 26ம் தேதி செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது. உறவினர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டது. நேற்று 27ம் தேதி இரவு வாயில் Secretion தேங்கியதால் மீண்டும் அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. எனவே, உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, மேலும் மருத்துவக் குழுவின் அறிவுரைப்படி, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். மேலும், உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் கைதேர்ந்த மருத்துவ குழுவோடு சேர்ந்து கூடுதலாக மருத்துவர்கள் பரிந்துரை மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் நல்லகண்ணு ஐயா அவர்களை பரிசோதிக்க உள்ளனர். கூடுமானவரை அனைத்து முயற்சிகளையும் மருத்துவ நிர்வாகம் செய்து வருகிறது.

    பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள். 101 வயதை கடந்தவர். மிகப்பெரிய தலைவர். அவருக்கு இப்போது தேவையே, தேவையான சிகிச்சை அளிக்கும் நேரத்தில் தனிமை. அவரது உடல்நிலை அக்கறை கொண்டு விசாரிப்பது, குறிப்பாக நேரில் வந்து விசாரிப்பதை கைவிட வேண்டும். அவரது உடல்நிலை பற்றி தகவல் தெரிந்து கொள்ள மருத்துவமனைக்கு வெளியே உள்ள குழுவிடம், நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து கொள்ளலாம். அவரை நேரில் பார்த்து நலம் விசாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.

    கேரள மாநிலத்தில் பரவி வரும் மூளையை தாக்கும் அமீபா வைரஸ் தொற்று நோய் கிடையாது. இது குறித்து மருத்துவ குழுவினருடன் ஆலோசித்து உள்ளேன். இதனால் பெரும் பாதிப்பு கிடையாது. ஆனால் இந்த அமீபா வைரஸ் அசுத்தம் நிறைந்த குளம், குடைகள் பகுதிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் நீண்ட நாட்கள் பயன்படுத்தாத நீச்சல் குளங்களில் சுத்தம் செய்த பின் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாய் கருத்தடை மையம் – சென்னை மாநகராட்சிக்கு் கேள்வி
    Next Article பரந்தூர் விமான நிலையத்திற்கு ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிரான மனு வாபஸ்
    Editor TN Talks

    Related Posts

    கண்களும் நர்த்தனம் புரியும் நாட்டியப் பேரொளி பத்மினி

    June 12, 2026

    கோல்களை விட சிவப்பு அட்டைகள் அதிகம் ; 3 வீரர்கள் வெளியேற்றம் – பிஃபா முதல் போட்டியின் சுவாரஸ்யங்கள்

    June 12, 2026

    இன்று தொடங்குகிறது 10-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடர்

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கண்களும் நர்த்தனம் புரியும் நாட்டியப் பேரொளி பத்மினி

    கோல்களை விட சிவப்பு அட்டைகள் அதிகம் ; 3 வீரர்கள் வெளியேற்றம் – பிஃபா முதல் போட்டியின் சுவாரஸ்யங்கள்

    இன்று தொடங்குகிறது 10-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடர்

    உலகக் கோப்பை கால்பந்து ; வெற்றிக் கணக்கை தொடங்கியது மெக்சிகோ

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.