Author: Editor TN Talks
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அமைச்சரவையில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தூய்மை பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ம் தேதி முதல் 13ம் தேதி வரை நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், மாநகராட்சி மேயருடன் தூய்மை பணியாளர்கள் நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், போலீசார் கடந்த 13-ம் தேதி நள்ளிரவு தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து, பிறகு விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வீடு, காலை உணவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை, கல்விக் கட்டணம் உட்பட 6 புதிய…
நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்கள் மூலம் அப்பகுதியில் மலர் தூவப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து பிரம்மாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று, 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அமைப்பு பிறந்தது என்பதை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (RSS). தேச கட்டுமானத்திற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன் அத்தியாயம். ‘வியாக்தி நிர்மான் சே ராஷ்ட்ர நிர்மான்’ என்ற உறுதியுடன், மா பாரதியின் நலனை நோக்கமாகக் கொண்டு, ஸ்வயம்சேவகர்களே நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஒரு வகையில், RSS உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம். இது 100 ஆண்டுகால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது” என்று பிரதமர் மோடி…
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டியில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயமடைந்துள்ளனர். 220-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து உள்ளூர் போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் பகுதிகளில் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 13-ம் நாட்களாக நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின் படி நேற்று நள்ளிரவு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் தூய்மை பணியாளர்கள் கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ”தூய்மை பணியாளர்கள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இருக்கிறார். தூய்மை…
தூய்மை பணியாளர்கள் அனுமதி பெற்று போராட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் ராயபுரம், திரு.வி.கநகர் ஆகிய மண்டலங்களின் தூய்மை பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கடந்த 1-ம் தேதி முதல் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே நடைபெற்ர 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடர்ந்தது. இதற்கிடையே அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் நேற்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்த செயலுக்கு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூய்மை பணியாளர்கள் கைதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தனர். அதில், ”சட்டக்கல்லூரி…
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. சென்னை ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாருக்கு வழங்கப்பட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு இரவு பகலாக கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். தூய்மை பணியாளர்களுக்கும், அமைச்சர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோருக்கும் இடையே கிட்டத்தட்ட 8கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோரை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்தது. அதனடிப்படையில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம், கடலூரிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களை கண்டித்து இந்தப்…
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்! குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள…
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் உலகின் லெஜண்டரி மற்றும் முடிசூடா மன்னராக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகனான அர்ஜூன் டெண்டுல்கரும், தந்தையை போலவே கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். சிறு வயது முதலே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியும் வருகிறார் அர்ஜூன். 25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அர்ஜூன், தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அர்ஜூன் டெண்டுல்கருக்கும் சானியா சந்தோக் என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சானியா சந்தோக்…
நாளை 79-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தலைநகர் டெல்லியில் வலராற்று சிறப்புமிக்க செங்கோட்டையில், நடைபெறும் கொண்டாட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு பிரதமர் சுதந்திர தினவிழாவில் கொடியேற்றி வைப்பார். அதன்படி இந்தாண்டும் பிரதமர் மோடி கொடியேற்றவுள்ளார். தொடர்ச்சியாக 12-வது முறையாக அவர் கொடியேற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு இவர் கொடியேற்றபோது, தொடர்ந்து 10 முறை கொடியேற்றி இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் சாதனையை முறியடித்து இருந்தார். தற்போது 12-வது முறையாக கொடியேற்றி இந்திராகாந்தி மற்றும் நேருவின் சாதனையை நெருங்க இருக்கிறார். சுதந்திர தினவிழா டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7.30 மணிக்கு தொடங்கும். பிரதமர் மோடி காலையில் அங்கு வரும் போது நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேட் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் வரவேற்கிறார்கள். இந்த…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். சமீபகாலமாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிகழ்வு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சுதந்திர தினத்தன்று காரில் ஏற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புக் கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட விரக்தியில் மது போதையில் மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.