Author: Editor TN Talks

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டும் தான் பின்பற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழுவினர் தயாரித்த மாநில கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த 2024ம் ஆண்டும் ஜூலை 1ம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்ததுடன், அதற்கான அறிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், ”பள்ளிக்கல்வி வரலாற்றில் இது சிறப்பு விழா, எந்த மாநிலத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா எடுக்கப்படுவதில்லை. இந்த வயதில் என்ஜாயும் பண்ணலாம், நன்றாக படித்து சாதிக்கவும் செய்யலாம். பள்ளி மாணவர்கள், இளைஞர்களை பார்த்தாலே புதிய உற்சாகம் பிறந்து விடுகிறது. மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை கூறி…

Read More

ராகுல்காந்தி அளித்த தரவுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மத்திய தொகுதியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கர்நாடகாவில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்யப்பட்டு திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஒரு வலிமையான ஆதாரத்தை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். ராகுல் காந்தி 6 மாத கால கடினமான முயற்சியின் மூலம் சேகரித்த தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது. மகாதேவபுரா தொகுதியில் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது என்பது குறித்த தரவுகளை ராகுல் காந்தி…

Read More

சென்னை டி.பி.சத்திரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் புளூகான் ராஜ்குமார். 37 வயதான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவலையில் உள்ள நிலையில் ’பி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விலகிய இவர், சாமியானா பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அதிமுகவிலும் நிர்வாகியாக இருந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் குடும்பத்துடன் டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகரில் வசித்து வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி பிற்பகல் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த போது, அங்கு சுமார் 9 பேர் கையில் அரிவாளுடன் கூடியுள்ளனர். அவர்களில் 5 பேர் வீட்டிற்குள் புகுந்த போது, ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இருப்பினும் அவரை மடக்கி பிடித்த 5 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜ்குமாரை அக்கம் பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு…

Read More

சென்னையில் திறக்கப்பட்டுள்ள முதல் பேடல் மையத்தில் தோனியுடன் அனிரூத் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி, சென்னையில் தனது முதல் பேடல் விளையாட்டு மையத்தை தொடங்கியுள்ளார். இதனை அனிரூத், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வாரமாக தோனி சென்னையில் முகாமிட்டுள்ளார். பாலவாக்கத்தில் 20,000சதுர அடியில் 7 பேடல் என்ற விளையாட்டு மையத்தை தோனி தொடங்கி இருக்கிறார். இவை போக ஜிம், உடற்பயிற்சிக்கு பிறகு ஓய்வெடுக்க சிறப்பு அறை, கஃபே, நீராவிக் குளியல் போன்ற வசதிகளுன் இந்த ஸ்போர்ட்ஸ் செண்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பேடல் மையத்தை சி.எஸ்.கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் திறந்து வைத்தனர். பிறகு மூவரும் சேர்ந்து பேடல் விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ “ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நேற்று அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராணிப்பேட்டை கலவை பகுதியில்10 செ.மீ., திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதிகளில் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மேலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய…

Read More

நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் இல.கணேசன்(80), இதற்கு முன்னதாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். பாஜகவில் மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் இல.கணேசன். நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில், இல.கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அண்மையில் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலாமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சுதந்திர தினம் மற்றும் வார இறுதி என தொடர் விடுமுறை வருவதால், 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. சுதந்திர தினம் அடுத்த வெள்ளிக் கிழமை கொண்டாடப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வர இருப்பதால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் 14-ம் தேதி சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது. இதேப் போல், 14,16 ஆகிய தேதிகளில் மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வரை சிறாப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேப் போல் 17-ம் தேதி நாகர்கோவில்-தாம்பரம், 18-ம்…

Read More

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வருமாறு.. திருச்சி மாவட்டம் அழகிரிபுரம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்ததை சீர்செய்யாமல் திமுக அரசு அலட்சியப்படுத்துவதால், பயிர் பாசனத்திற்கு பயன்பட வேண்டிய மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கூறி அப்பகுதி விவசாய பெருமக்கள் ஆற்றில் இறங்கி நின்று போராடும் காணொளி மனதை கனக்க வைக்கிறது. தரமற்ற முறையில் தடுப்பணையைக் கட்டியது மட்டுமன்றி ஊருக்கே படியளக்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து அவர்களின் வயிற்றிலடிக்கும் திமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனங்கள். ஏற்கனவே பராமரிப்பற்ற அரசு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாலும், முறையாக தூர்வாராமல் வறண்டு கிடக்கும் பாசனப் போக்குவரத்தால் பயிர்கள் கருகுவதாலும் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல. எனவே, அழகிரிபுரம்…

Read More

மதுரை தோப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்ட கட்டுமான பணிகள் வருகிற ஜனவரி மாதம் முடிவடையும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது. மதுரையை சேர்ந்த. K.k. ரமேஷ், உயர்நீதிமன்றம் கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018ம் ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்ட து. கடந்த 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் , மத்தியகுழு மற்றும் ஜப்பானிய நிதிக்குழுவினர் இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூபாய் 10கோடி மதிப்பீட்டில் 5.50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிந்துள்ளது. ஆனால் , 2019 ஜனவரி மாதம் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். அதன் பிறகு தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான…

Read More

வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அந்தபெண்ணின் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து ப்ரீத்தியின் உடல் தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி என்பவரை ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணத்தின் போது 120நகை, 25 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிவற்றை கொடுத்த நிலையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனை வகையில் 50 லட்சம் பணம் வருவதை அறிந்து அதனை கேட்டு கொடுமை படுத்திய நிலையில் 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டிற்கு வந்துள்ளார். ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி தாயார் வெளியே சென்ற போது வீட்டில்…

Read More