Author: Editor TN Talks
நிதி மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் தேவநாதன் யாதவ்க்கு ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த நிலையில், மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேலும், தேவநாதன் யாதவ் ஜாமீனில் வெளியில் வந்தால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான நிதியை திரட்ட முடியும்…
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அதில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல், மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் ” கர்நாடகாவில் 16 இடங்களை வெல்வோம் என்று எங்கள் உள் கருத்துக்கணிப்பு தெரிவித்தது. ஆனால் நாங்கள் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். எதிர்பாராத விதமான நாங்கள் தோற்ற 7 தொகுதிகளில் கவனம் செலுத்தினோம். அதில் நாங்கள் மகாதேவபுரா என்ற ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்தோம். இந்த மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம். ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. போலி வாக்காளர்கள்,…
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஏப்ரல் 2-ந்தேதி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அந்த நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் வரிக்கு சமமாக வரி விதிக்கும் நோக்கத்தில், இந்த கூடுதல் வரியை அறிவித்தார். பின்னர், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும்வகையில், கூடுதல் வரியை ஜூலை 9-ந்தேதிவரை அமெரிக்கா நிறுத்தி வைத்தது. பிறகு அந்த கால அவகாசம், ஆகஸ்டு 1-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. ஆகஸ்டு 1-ந்தேதி, 68 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருட்கள் மீது கூடுதல் வரி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். ஒவ்வொரு நாட்டுக்கும் எவ்வளவு வரிவிகிதம் என்பதை அவர் அறிவித்தார். அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 25 சதவீத வரி விதித்தார். அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருவதை அதற்கு காரணமாக தெரிவித்தார்.…
ஐ.சி.சி ஜூலை மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய கேப்டன் சுப்மன் கில் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தென் ஆப்ரிக்காவின் வியான் முல்டர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேப் போல், இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்தின் கேபி லூயிஸ், இங்கிலாந்தின் சோபியா டங்க்லி மற்றும் சோபி எக்லெஸ்டோன் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் இனி ஊபர் செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. குறைந்த நேரத்தில் ஏசி வசதியுடன் கூடிய மெட்ரோ ரயிலை நாள்தோறும் 3.25லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் இந்த மெட்ரோ ரயில் சேவைக்காக ஆன்லைன், வாட்ஸ் அப், ஸ்மார்ட் கார்டு என பல வழிகளில் டிக்கெட்களை பெறலாம். தற்போது புதுவசதியாக ஊபர் செயலி மூலம் மெட்ரோ ரயில் சேவைக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊபர் செயலி மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை 50 சதவீதம் சலுகை விலையில் மெட்ரோ டிக்கெட்டை பெறலாம். (QR – Codeஐ) க்கியூஆர் கோர்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் டிக்கெட்டை பெறலாம். மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லவும்,…
கவின் ஆணவக் கொலை வழக்கில், குற்றவாளி சுர்ஜித் அழுதுகொண்டே நீதிமன்றத்தில் ஆஜரானார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ் என்ற 27 வயது நபர், சென்னை ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 27-ம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில், அதேப் பகுதியை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரது மகளும் சித்த மருத்துவரான சுபாஷினி என்பவரை கவின் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இது பிடிக்காததால், சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் அவரை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் சுர்ஜித், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் தாயார் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கடந்த…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால் ஆட்டோ ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்ததால் சிறுவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் அருத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் முகித் என்ற 7 வயது மகனும், 5 வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளனர். முகித் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். ரோகித் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நாள்தோறும் முருகவேல் தனது மகனை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் அதேப் போல் மகனை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். குப்பநத்தம் கிராம சாலையில் சென்ற போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே ஓடியதால், முருகவேல் நிலைத் தடுமாறி ஆட்டோவை திசை திருப்ப முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த மண்…
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்ணின் வழக்கில், அவரது கணவர் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான குப்புசாமி – சுகந்தி தம்பதியின் மகள் பிரீத்தி. 26 வயதான பிரீத்திக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பிரீத்திக்கு 120 சவரன் நகை, ரூ.25லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் பிரீத்தியின் பங்காக ரூ.50லட்ச ரூபாய் பணத்தை பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு, பிரீத்தியின் கணவர் மற்றும் மாமியார் தகராறு செய்துள்ளனர். இதனால் கடந்த 11-ம் தேதி பிரீத்தி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். மன உளைச்சலில் இருந்த பிரீத்தி கடந்த 5-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…
தூய்மை பணியாளர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தால் சென்னையில் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் நாற்றம் வீசுகிறது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம், திருவிக நகர் ஆகிய இரு மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தில்லி எம்.எஸ்.டபிள்யூ சொலுஷன்ஸ் லிமிடெட் (Delhi MSW Solutions Ltd) என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு மண்டலங்களிலும் 5,180 தூய்மைப் பணியாளர்கள்…
இலங்கையால் கைது செய்யப்பட்ட 80 மீன்வர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்களையும், மீனவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”இலங்கைக் கடற்படையினரால் 06.08.2025 அன்று அதிகாலை 14 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டதை மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் தனி கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. 2025…