Close Menu
    What's Hot

    எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி..
    Featured

    அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி..

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    01
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஏப்ரல் 2-ந்தேதி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அந்த நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் வரிக்கு சமமாக வரி விதிக்கும் நோக்கத்தில், இந்த கூடுதல் வரியை அறிவித்தார்.

    பின்னர், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும்வகையில், கூடுதல் வரியை ஜூலை 9-ந்தேதிவரை அமெரிக்கா நிறுத்தி வைத்தது. பிறகு அந்த கால அவகாசம், ஆகஸ்டு 1-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

    ஆகஸ்டு 1-ந்தேதி, 68 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருட்கள் மீது கூடுதல் வரி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். ஒவ்வொரு நாட்டுக்கும் எவ்வளவு வரிவிகிதம் என்பதை அவர் அறிவித்தார். அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 25 சதவீத வரி விதித்தார். அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருவதை அதற்கு காரணமாக தெரிவித்தார்.

    ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா நிதியுதவி செய்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டினார். அதற்கு இந்தியா முதல்முறையாக பகிரங்கமாக பதிலடி கொடுத்தது. ரஷியாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம், பல்லேடியம், உரங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்து வருவதாக அம்பலப்படுத்தியது. ஆனால், ரஷியாவிடம் இந்த பொருட்களை அமெரிக்கா வாங்குவது பற்றி தனக்கு தெரியாது என்று டிரம்ப் மழுப்பலாக பதில் அளித்தார்.

    24 மணி நேரத்துக்குள், இந்தியா மீதான வரியை மேலும் அதிகரிக்கப் போவதாக டிரம்ப் நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்த பின்னணியில், நேற்று இந்தியா மீது மேலும் 25 சதவீத வரி விதித்தது. இதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

    ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் என்ற வகையில், கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறி இருந்தது. கடந்த 1-ந்தேதி அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி அமலுக்கு வர 14 மணி நேரங்கள் இருந்த நிலையில், கூடுதல் வரி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இதில், கடந்த 1-ந்தேதி அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி, இன்று அமலுக்கு வருகிறது. நேற்று அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி, ஆகஸ்டு 27-ந்தேதி அமலுக்கு வரும் என்று உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மறைந்த புகழ்பெற்ற விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் மூன்று நாள் உலகளாவிய மாநாட்டில் உரையாற்றிய அவர், “இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே முதன்மையான முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது.

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐ.சி.சி ஜூலை மாத சிறந்த வீரர் விருது… இந்திய கேப்டன் சுப்மன் கில் பெயர் பரிந்துரை…
    Next Article தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து மோசடி செய்கிறது – ராகுல் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

    July 8, 2026

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    July 8, 2026

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    அடேங்கப்பா..!! தினமும் லட்சத்தை தொடும் மக்கள் வருகை.. அம்மா உணவகங்களுக்கு கூடும் மவுசு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.