Author: Editor TN Talks
மூணாறு ராஜமலை அருகே பெட்டிமுடி நிலச்சரிவு துயரத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. குடும்பத்தினரும்,உறவினர்களும் கல்லறைகளில் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை அருகே பெட்டிமுடியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நான்கு தொடர் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்தது. தூங்கிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 70 பேர் உயிரிழந்தனர். இதில் 66 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த துயர தினத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் ராஜமலையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிலச்சரிவு பேரழிவில் சிக்கி உயிரிழந்த தங்கள் அன்புக்குரியவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராஜமலைக்கு, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என திரளானோர் வந்திருந்தனர். காலையில் துவங்கி இரவு வரை, கல்லறைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உணவு, பழங்கள், வளையல்கள்…
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். கணவன் வீட்டாரை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர் திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி என்பவரை ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் செய்து கொடுத்தனர். திருமணத்தின் போது 120நகை, 25 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிவற்றை கொடுத்த நிலையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனை வகையில் 50 லட்சம் பணம் வருவதை அறிந்து அதனை கேட்டு கொடுமை படுத்திய நிலையில் 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டிற்கு வந்துள்ளார். ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி 2 நாட்களுக்கு முன்பு தாயார்…
மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து சீரானதால், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் இரண்டு நாட்களாக தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து சீராகி உள்ளதால் இன்று முதல் சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதையடுத்து ஆர்ப்பரித்து விழும் அருவி நீரில் குளிப்பதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு படையெடுத்து வருகின்றனர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, கட்சிப் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அத்தோடு பேரணியில் கலந்து கொண்டவர்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், பெ. அமுதா ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து ஜூலை 14 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.சத்தியகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முறையாக அரசாணை பிறப்பித்து அரசிதழில் வெளியிடாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது சட்டப்படி…
பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக தமிழகத்தில் திராவிட இயக்கத்தில் இருக்கிறீர்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருப்பதாக துரைவைகோ குறித்து மதிமுகவின் மல்லைசத்யா குற்றஞ்சாட்டி உள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் அளித்த பேட்டி வருமாறு.. தமிழ் கூறும் நல் உலகில் ஆகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. திராவிட இயக்கங்களில் லட்சியங்களை காப்பதற்கு உறுதி ஏற்று இருக்கிறோம். மதவாத சக்திகள் தமிழகத்தை சூழ்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழகத்தை பேராபத்து சூழ்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழக முதலமைச்சருக்கு தமிழக மக்கள் கரம் கோர்க்க வேண்டும் வலு சேர்க்க வேண்டும். மதிமுகவில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிலைமைகளுக்கு நான் காரணம் அல்ல நாங்கள் காரணம் அல்ல. மாவட்ட செயலாளர் அவர்கள் பகுதி செயலாளர் கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை என்பதால் தான் நாங்கள் இந்த ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். பிரதமரை சந்தித்து ரஷ்யாவில் இருக்கும்…
திருப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த குற்றவாளி என்கவுண்டரில் பலியானார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏவான மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் உள்ளது. தென்னை சாகுபடி செய்யப்படும் இந்த தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவர் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். மூர்த்தியின் மற்றொரு மகனான தங்கபாண்டி, கடந்த 5-ம் தேதி இரவு தென்னந்தோப்புக்கு வந்துள்ளார். அங்கு அனைவரும் கறி விருந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது தந்தை-மகன்களுக்கு இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மணிகண்டன் தந்தை மூர்த்தியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மூர்த்தி திருப்பூர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தன்னை தனது மகன்கள் கொலை செய்ய முயற்சிப்பதாக…
மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்திய அரசியல் ஆளுமைகளுள் ஆகச்சிறந்தவர் என கூறலாம். ஆழ்ந்த அரசியல் ஞானம் கொண்ட இவரை முத்தமிழறிஞர், கலைஞர், மு.க என்ற அடைமொழிகளைக் கொண்டே பலர் அழைப்பது வழக்கம். அரசியலில் விமர்சிப்பவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிபவர்கள் மத்தியில், தன்னை விமர்சிப்பவர் வாயடைத்து போகும் வகையில் பதில் அளிப்பதில் கலைஞர் வல்லவர். ஏழை மக்களால் பெரிதும் விரும்பப்பட்டும், அதே சமயத்தில் ஒரு தரப்பால் வெறுக்கப்பட்ட நபரும் இவரே. பேட் மேன் படத்தில் ஒரு வசனம் உண்டு, ஒன்று நீங்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாயகனாக மரணிக்க வேண்டும், இல்லையென்றால் உங்களை நீங்களே வில்லனாக பார்க்கும் அளவுக்கு வாழவேண்டும் என்று. அந்த வசனம் கலைஞரின் வாழ்வுக்கு கச்சிதமாக பொருந்தும். கருணாநிதியை இகழ்வதற்கோ, புகழ்வதற்கோ அல்ல இந்த பதிவு. ஒருவேளை மு.கருணாநிதி என்று ஒருவர் இல்லை என்றால் நாம் எதை…
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான பத்தே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் ரிதன்யா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தற்போது அதே திருப்பூர் மாவட்டத்தில் மற்றொரு இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு காரணமான கணவன் குடும்பத்தினரை கைது செய்யாமல் பெண்ணின் உடலை பெற மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 120சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் பணம், 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கார் உள்ளிவற்றை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணின் பூர்வீக சொத்து விற்பனையான…
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்ததற்காக ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நேரில் ஆஜரானார். சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், ரானா டகுபதி உள்ளிட்ட நடிகர்கள், சமூக பிரபலங்கள் என 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ சூதாட்ட செயலிக்கும் கேமிங் செயலிக்கும் வித்தியாசம் உள்ளது. கேமிங் செயலி விளம்பரத்தில் மட்டுமே நடித்தேன். நான் பெற்ற பணம், ஒப்பந்தம், நடைமுறைகள் பற்றி விளக்கம் அளித்துள்ளேன்” எனக் கூறினார். இதே வழக்கு விசாரணைக்காக கடந்த 30-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரகாஷ் ராஜ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.