Author: Editor TN Talks
தமிழகத்துக்கு டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபி-யாக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31 ஆம் தேதி பணி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் தாமோதரன், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, 30 ஆண்டுகள் பணியில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை, டிஜிபி ஓய்வுபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழு, இந்த பட்டியலை ஆய்வு செய்து, தகுதியான மூன்று பேரின் பெயர்களை மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த மூன்று…
தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு எந்த நிமிடமும் வெளிவரலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்று பாமக செயல் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனியார் பேருந்துகளின் கட்டணத்தை இப்போது உயர்த்துவதற்கு மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், மின்சாரக் கட்டணம் எப்படி ஆண்டுக்கு ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்த்தப்படுகிறதோ, அதே போல் பேருந்துக் கட்டணமும் இனி ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படும். தமிழக அரசு மட்டுமின்றி, தனியாரும் மக்களை சுரண்டவே இத்தகைய முடிவுகள் உதவும். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி உயர்நீதிமன்றத்தின் பின்னால் தமிழக அரசு ஒளிந்து கொள்ளக் கூடாது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில்…
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கிற்கு தடை கோரி சீமான் தொடர்ந்த வழக்கு விசாரணையை வரும் 12 தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமாரின் குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி சரக வருண் குமார் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது என்றும் வழக்கு விசாரணையில் சீமான் ஆஜராக வேண்டுமென திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில், வருண் குமார் ஐபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் சீமான் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வருண்குமார்…
’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 2023-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேரளாவில் கடும் எதிர்ப்புகள் எழுந்த தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் இப்படம் தேர்வாகியிருந்தது. இதற்கு கடும் கண்டனக்கள் எழுந்துள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது எஸ்.டி.பி.ஐ கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறுப்பு பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுகளை வழங்கிய, 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பை எஸ்டிபிஐ கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. பிளவுபடுத்தும் பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதற்காக பரவலாக விமர்சிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு…
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதேவேளை பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. வாரவிடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு மீண்டும் மக்களவை கூடியது. அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டார். இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேப் போல, மாநிலங்களை கூடியதும், மறைந்த ஜார்க்கண்ட்…
துரோகத்தின் சாயல் படிந்தவர் தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவையே யார் என்று கேட்டவர் துரோகத்தைப் பற்றி பேசக்கூடாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மனிதநேய விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று புளியந்தோப்பு மற்றும் சூளையில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு காலை உணவு வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார்…. எதிர்க்கட்சியினர் முதலமைச்சரை சந்திப்பது துரோகத்தின் வெளிப்பாடு என்ற தமிழிசை மற்றும் எடப்பாடியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி அமித்ஷாவை சந்தித்ததை எப்படி எடுத்துக் கொள்ளலாம், மோடியை நான்கு கார்களில் மாறி மாறி சந்திப்பதை எப்படி எடுத்துக் கொள்ளலாம்…. முதல்வரின் சிறிய உடல்நல குறைவின் காரணமாக இல்லத்தில் வந்து சந்தித்ததை எப்படி துரோகம் என்று…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது குரங்கணி அருவி நீரோடை.இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி போடிநாயக்கனூர் சுற்று வட்டார மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரள எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குரங்கணி அருவி நீரோடையில் எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளதால் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் இந்த அருவி மற்றும் ஆற்றுப் பகுதிக்கு சென்று குளிக்க தடை விதித்துள்ளனர். தடையையும் மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்கு சென்று குளித்து வருகின்றனர். இந்த நிலையில் போடிநாயக்கனூர் மேலத்தெரு பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ஜஹாங்கீர்(47) . இவர் போடிநாயக்கனூரில் உள்ள அரசு வங்கி ஒன்றில் கேசியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும்…
பெங்காலி மொழி பேசும் 8 பேரை பங்களாதேஷ் நாட்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெங்காலி பேசுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கைது நடவடிக்கையும், நாடு கடத்தும் முடிவுக்கும் டெல்லி போலீசார் வந்துள்ளனர். இந்த விவகாரத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு வெறிச்சொல், அவமானம், தேசத்துரோகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான செயல்! இந்தியாவின் பெங்காலி பேசும் மக்களை இவ்வாறு இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் மொழி, நம்மை அனைத்தையும் கீழ்த்தரமாக மாற்றுகிறது. இது எங்களனைத்துக்கும் கடுமையான அவமானமாகும். இந்தியாவின் பெங்காலி பேசும் மக்களை இழிவுபடுத்தும் இந்த அரசியலமைப்புக்கு எதிரான செயலை கண்டித்து, மக்கள் அனைவரும் உடனடியாக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகிறோம் என்று தனது எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை மேற்கோளாக கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை விடுத்துள்ளார். அதில் மத்திய உள்துறை…
சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன் ஆஜரானார். அப்போது, பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்களில் 71 புகார்கள் முடித்து வைக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். மேலும், 40 புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து புகார்தாரர்களுக்கு தபால் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும், நான்கு புகார்கள் ஆன்லைன் மூலமாகவே முடித்து வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து,…
மதுரையில் வரும் 25 ஆம் தேதி திட்டமிட்டபடி தவெக மாநாடு நடத்துவதில் சிக்கல் என தகவல் பரவி வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு முதலாவது மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதன் இரண்டாவது மாநில மாநாடு வரும் 25-ந் தேதி மதுரை மாவட்டம் எலியார்பத்தி என்ற இடத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பலநூறு ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தை சீர்செய்து மாநாட்டு திடல் அமைக்கும் பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் அந்த தேதியில் மாநாடு நடத்த காவல்துறை இதுவரை அனுமதி அளிக்கவில்லை. ஆகஸ்ட் 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தி வரவுள்ளநிலையில், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் பயன்படுத்தப்படுவது வழக்கம். எனவே 25-ந் தேதி மாநாட்டுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் என்பது போலீஸ் தரப்பின் வாதம். அதற்கு பதிலாக 21-ந் தேதி நடத்திக் கொள்கிறீர்களா என தவெகவிடம் காவல்துறை தரப்பில் கோரப்பட்டுள்ளது. இதற்கு தவெகவினர் இதுவரை எவ்வித பதிலும்…