Close Menu
    What's Hot

    ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு சனம் ஷெட்டிக்கு..?? வருத்தத்தில் ரசிகர்கள்..!!

    தமாகாவில் இருந்து விலகல்; தவெகவில் இணைகிறாரா யுவராஜா?

    பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழப்பு..!! கும்மிடிப்பூண்டியில் சோகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதிக்கக்கூடாது..
    தமிழ்நாடு

    தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதிக்கக்கூடாது..

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    large stalinvsanbumani 149231
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு எந்த நிமிடமும் வெளிவரலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்று பாமக செயல் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனியார் பேருந்துகளின் கட்டணத்தை இப்போது உயர்த்துவதற்கு மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், மின்சாரக் கட்டணம் எப்படி ஆண்டுக்கு ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்த்தப்படுகிறதோ, அதே போல் பேருந்துக் கட்டணமும் இனி ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படும். தமிழக அரசு மட்டுமின்றி, தனியாரும் மக்களை சுரண்டவே இத்தகைய முடிவுகள் உதவும்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி உயர்நீதிமன்றத்தின் பின்னால் தமிழக அரசு ஒளிந்து கொள்ளக் கூடாது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், எந்த இடத்திலும் தனியார் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும்படி ஆணையிடவில்லை. மாறாக, இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழு, சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு செய்யலாம் என்று தான் கூறியுள்ளது. பெரும்பான்மையான மக்கள் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தது? என்பது தெரியவில்லை.

    தனியார் ஆம்னி பேருந்துகள் அநியாயமான கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்; அவற்றுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அவற்றின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்து மட்டும் அவசர, அவசரமாக முடிவு எடுப்பதிலிருந்தே தமிழக அரசு யாருடைய நலனுக்காக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த நான்கு ஆண்டுகளில் திமுகவின் அதிகார மையங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமான தனியார் பேருந்துகளின் வழித்தட உரிமையை வாங்கி குவித்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் இணைத்து தான் இந்த முடிவை பார்க்க வேண்டியுள்ளது.

    மக்களின் நலன் காப்பது தான் அரசின் கடமை. இதை உணர்ந்து தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு
    Next Article புதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி
    Editor TN Talks

    Related Posts

    தமாகாவில் இருந்து விலகல்; தவெகவில் இணைகிறாரா யுவராஜா?

    June 15, 2026

    பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழப்பு..!! கும்மிடிப்பூண்டியில் சோகம்..!!

    June 15, 2026

    தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; தமிழகத்தில் ஆட்சி உள்ளதா? – கனிமொழி கேள்வி  

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு சனம் ஷெட்டிக்கு..?? வருத்தத்தில் ரசிகர்கள்..!!

    தமாகாவில் இருந்து விலகல்; தவெகவில் இணைகிறாரா யுவராஜா?

    பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழப்பு..!! கும்மிடிப்பூண்டியில் சோகம்..!!

    E100 எத்தனால் எரிபொருளுக்கு கிடைச்சாச்சு கிரீன் சிக்னல்..!! மத்திய அரசு ஒப்புதல்..!!

    தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; தமிழகத்தில் ஆட்சி உள்ளதா? – கனிமொழி கேள்வி  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.