Author: Editor TN Talks
வங்காள மொழியை வங்கதேச தேசிய மொழி என டெல்லி காவல்துறை ஒரு கடிதத்தில் கூறியிருப்பதற்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை ஒரு கடிதத்தில் வங்காள மொழியை வங்கதேச தேசிய மொழி என குறிப்பிட்டிருந்தது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காவல்துறையின் இந்த கடிதத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, ”இது வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கும் செயல்” என கண்டித்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தை வைத்து பாஜகவும், மமதா பானர்ஜியும் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், வங்காள மொழி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை வங்காள மொழியை ‘வங்கதேச மொழி’ என வர்ணித்துள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேரடி…
தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16,000கோடியில் ஆண்டுக்கு 1.50லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் VF-6, VF-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்குக் தயாராகவுள்ளன. இந்த ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 மின்சார கார்களுற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதற்காக இன்று காலை தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல் கார் விற்பனை விழாவையும் தொடங்கி வைத்தார். இங்கு தயாரிக்கப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். இந்த…
ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் காலமானார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர் ஷிபு சோரன். இவர் தற்போதைய ஜார்கண்ட் முதலமைச்சரான ஹேமந்த் சோரன்ன் தந்தை ஆவார். இவர் சுமார் 3 முறை ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். 81 வயதான ஷிபு சோரன், கிட்னி தொடர்பான பிரச்னை காரணமாக கடந்த ஜூன் 24-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வந்த ஷிபு சோரன், இன்று காலை 8.56 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஷிபு சோரனின் இறுதிச்சடங்கு ஜார்கண்டில் நடைபெறவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா ’ரெட்ரோ’ பட ஹிட்டைத் தொடர்ந்து அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ’கருப்பு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நட்டி நடராஜ், யோகிபாபு என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதனை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். அதேப் போல நடிகை ஜோதிகா, பாலிவுட்டில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகன் தேவ் ஆகியோருடன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி வளாகத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சூர்யாவுக்கு, பக்தர்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் எவ்வித அரசியலும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக திமுக, அதிமுக, பாஜக உட்பட அனைத்து கட்சியினரும் முழுவீச்சில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் சூடு பறக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒரே நாளில் இருமுறை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. முன்னதாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்காததால், கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அவர் நிச்சயம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 31-ம் தேதி ஒரே நாளில் காலை நடைபயிற்சியின் போதும், மாலை வீட்டிற்கு சென்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார். அதனால் ஓபிஎஸ் நிச்சயம் திமுகவில்…
பீகாரை சேர்ந்த 6.50லட்சம் பேரை தமிழ்நாடு வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். பீகாரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அக்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ள 36 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நீக்கப்பட்டுள்ள பீகாரிகள், வேலை நிமித்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு அந்தந்த வாக்குரிமை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வசித்து வரும் புலம்பெயந்த பீகாரிகள் 6.50லட்சம் பெருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சூழல் மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”பீகாரில் நடைபெற்றுவரும் சிறப்பு வாக்காளர்…
தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தின் 18-ம் நாள் கொண்டாடப்படும் விழா ஆடிப்பெருக்கு. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து காவிரி ஆறுகளில் புது வெள்ளம் பொங்கி வரும். அதனை போற்றி வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் விழாவே ஆற்றுப்பெருக்கு எனக் கூறப்படுகிறது. இந்த நன்னாளில் பெண்கள் ஆற்றில் புனித நீராடி, கரையோரம் சுத்தம் செய்து, அகல்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவர். அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் ஆற்றங்கரையோரங்களிலும் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களிலும் வழிபாடு நத்தி வருகின்றனர். குறிப்பாக திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த ஆடிப்பெருக்கு நாளை கோலாகலமாக கொண்டாடுவர். காவிரி, கொள்ளிடம் போன்றவை திருச்சியில் பாய்வதால், படித்துறைகளில் இன்று முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதும். அதேப் போல, காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களான பவானி கூடுதுறை, மேட்டூர் அணை, பரமத்தி, குளித்தலை, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் போன்ற இடங்களில் ஆடிப்பெருக்கு கோலாகலமாக…
ஊர் ஊராக சென்று எடப்பாடி பழனிசாமி பொய் பிரசாரம் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இது குறித்து திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், நெடுநாள் கழித்து, உங்களுடன் இந்த மடல் வாயிலாக உரையாடுகிறேன். காரணம், சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்தேன். சிகிச்சை ஓய்வு என்று சொன்னாலும், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களையும் கழகப் பணிகளையும் செய்துகொண்டுதான் இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் என்னுடைய வழக்கமான பணிகளைத் தொடங்கியும், நேற்று அண்ணா அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ என உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தேன். அரசுப் பணிகளுக்கிடையில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுவரையில் 39 தொகுதிகளின் கழக நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பு அடுத்தடுத்து தொடர உள்ளது. தமிழே உயிராக – தமிழர் வாழ்வே மூச்சாக – தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு தமிழினத் தலைவராக மக்கள் மனங்களில் நிறைந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். இயற்கை…
கேரளாவில் தகாத உறவில் இருந்தவருக்கு பெண் ஒருவர் பூச்சிக் கொல்லி மருந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் மதிராப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்சில். 38 வயதான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அனிசிலுக்கு சோலாடு பகுதியை சேர்ந்த அதீனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அந்த வகையில், கடந்த 29-ம் தேதி அதீனாவின் வீட்டிற்கு அன்சில் செல்ல, மறுநாள் காலை விஷமருந்தி மயங்கி கிடப்பதாக, அவரது நண்பர்களுக்கு அதீனா தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற நண்பர்கள் அன்சிலை மீட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், சிகிச்சையில் இருந்த அன்சிலிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் அதீனா தான் தனக்கு விஷம் கொடுத்ததாக தெரிவித்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அன்சில் பரிதாபமாக…
தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கைப்பாவை ஆகிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற ‘அரசியலமைப்பு சவால்கள் – கண்ணோட்டங்கள் மற்றும் பாதைகள்’ என்ற தலைப்பில் ஒருநாள் மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் ஆன்மா. அது ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான உரிமையை வழங்குகிறது. ஆனால் இன்று, அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது. அதிகாரத்தில்…