Close Menu
    What's Hot

    2000 ஆண்டுகள் பழமை..!! வரலாற்றுச் சிறப்புமிக்க தாழிப் பானை கண்டுபிடிப்பு..!!

    நாளை நீட் தேர்வு; ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவு

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பீகாரை சேர்ந்த 6.50லட்சம் பேர் தமிழக வாக்காளர்களாக சேர்க்க முயற்சி… ப.சிதம்பரம் விமர்சனம்…
    இந்தியா

    பீகாரை சேர்ந்த 6.50லட்சம் பேர் தமிழக வாக்காளர்களாக சேர்க்க முயற்சி… ப.சிதம்பரம் விமர்சனம்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகாரை சேர்ந்த 6.50லட்சம் பேரை தமிழ்நாடு வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

    பீகாரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அக்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ள 36 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு நீக்கப்பட்டுள்ள பீகாரிகள், வேலை நிமித்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு அந்தந்த வாக்குரிமை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வசித்து வரும் புலம்பெயந்த பீகாரிகள் 6.50லட்சம் பெருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்த சூழல் மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    ”பீகாரில் நடைபெற்றுவரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேலும், மேலும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோது,

    பீகாரை சேர்ந்த 6.50 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக சேர்க்கப்பட உள்ளதாக வெளியான தகவல் ஆபத்தானது மட்டுமின்றி சட்டவிரோதமானது.

    பீகாரை சேர்ந்தவர்கள் நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என்று அழைப்பது புலம்பெயர் தொழிலாளர்களை அவமதிப்பதாகும். மேலும், இது தமிழக வாக்காளர்கள் அவர்களின் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவதாகும்.

    மாநில தேர்தலின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊரான பீகாருக்கு ஏன் செல்லக்கூடாது? வழக்கமாக அவ்வாறுதானே நடைமுறை உள்ளது. சாத் பூஜை விழாவின்போது பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவில்லையா?

    வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் நபர் நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் பீகார் மற்றும் பிற மாநிலங்களில் நிலையான, நிரந்த வீடுகளை கொண்டுள்ளனர். அவர்கள் எப்படி தமிழக வாக்காளர்களாக மாற முடியும்?

    புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பீகாரில் நிரந்தரமான வீடு வைத்துக்கொண்டு அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும்போது புலம்பெயர் தொழிலாளர் மட்டும் எப்படி நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர் என்று கருதமுடியும். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து அரசியல் ரீதியிலும், சட்டரீதியிலும் போராட வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு கோலாகலம்… காவிரி நீரை போற்றி வணங்கிய மக்கள்…
    Next Article முதலமைச்சரை சந்தித்ததில் அரசியல் இல்லை… ஓ.பி.எஸ் திட்டவட்டம்…
    Editor TN Talks

    Related Posts

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    June 20, 2026

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!

    June 20, 2026

    125 நாள் வேலைத் திட்டம் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2000 ஆண்டுகள் பழமை..!! வரலாற்றுச் சிறப்புமிக்க தாழிப் பானை கண்டுபிடிப்பு..!!

    நாளை நீட் தேர்வு; ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவு

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.