Author: Editor TN Talks
விருதுநகரில் இன்ஸ்டாவில் தொடங்கிய காதலில் காதலியிடம் இருந்து நகை, பணத்தை சுருட்டி ஏமாற்றிய காதலன் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி அதிபர் நாகசெந்தில். இவரது மகள் நாக அட்சயா, சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நாக அட்சயாவுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார். அவர் நாக அட்சயாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாக காதல் வலையை வீசியுள்ளார். அதில் அட்சயாவும் விழுந்து, காதல் மற்றும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட லிவின், நீ இங்கு வந்தால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம், அதற்காக வீடு பார்க்க பணம் தருமாறு நாக அட்சயாவிடம் கேட்டுள்ளார். இதை நம்பிய நாக அட்சயா, காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையத்துக்கு வரவழைத்து தனக்காக பெற்றோர்…
நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக பறிக்கப் போகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் செங்காத்தகுளம் பகுதியில் முப்போகம் விளையும் விவசாய நிலங்களை அறிவுசார் நகரம் அமைப்பதற்காக கையகப்படுத்தும் திமுக அரசைக் கண்டித்து பா.ம.க. சார்பில் நேற்று முன்நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொண்ட மேல்மாளிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம் என்ற பெண்மணி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுசார் நகரம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்த போது, தனபாக்கியம் என்னை சந்தித்து முறையிட்டார். அப்போதே அவர் கலங்கிய மன நிலையில் தான் இருந்தார். அவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகவும், அதையும் அடி மாட்டு…
திமுக எம்பி.தங்க தமிழ்ச்செல்வனும், எம்எல்ஏ.மகாராஜனும் அரசு பொது நிகழ்ச்சி மேடையில் ஆட்சியர் முன்னிலையில் “போடா வாடா” என்று பேசி குழாயடி சண்டையிட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் , திமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் , ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் பெயரிலேயே இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதற்கட்டமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக…
எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை அன்புமணி வைத்திருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பாமகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், கட்சி நிர்வாகிகள் பலரும் குழப்பத்தில் உள்ளனர். அன்புமணிக்கு ஆதரவானவர்களை ராமதாஸ், கட்சியில் இருந்து நீக்குவதும், ராமதாஸ்க்கு ஆதரவானவர்களை அன்புமணி கட்சியை விட்டு நீக்குவதாகவும் இருந்து வருகின்றனர். கட்சிக்கு யார் தலைவர் என்பதில் மிகப்பெரிய குழப்பம் நிலவுவதால், நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். அதுமட்டுமின்றி பொதுவெளியில் ஒருவரையொருவர் மாறி மாறி வசைப்பாடுதலும் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், ”என் வீட்டில், நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்? எதற்காக வைத்தார்கள்? என்ற ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக” தெரிவித்திருந்தார். இதையடுத்து சென்னையில் இருந்து…
கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக இருப்பது கோவா. யுனியன் பிரதேசமான கோவாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அனுமதியின்றி படகுகளை இயக்குதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துதல், சுற்றுலா பொருட்களை வாங்கக்கோரி வியாபாரிகள் கட்டாயப்படுத்துதல், அனுமதிக்கப்படாத பகுதிகளில் மது அருந்துதல், பொதுஇடங்களில் சமைத்தல், அனுமதிக்கப்படாத பகுதிகளில் தண்ணீர் விளையாட்டு, டிக்கெட் விற்பனை, பிச்சை எடுத்தல், கடற்கரைகளில் வாகனங்களை இயக்குதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க கோவா அரசு அபராதம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவர்கள் மீது குற்ற நடவடிக்கை…
மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ’பறந்து போ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட தரமான படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் பறந்து போ. மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தந்தை, மகனுக்கு இடையேயான பசப்பிணைப்பை வெளிப்படையாக இப்படம் காட்டியிருந்ததால், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது ’பறந்து போ.’ இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற 5-ம் தேதி ஜியோ ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ’ஆபரேஷன் அகல்’ நடவடிக்கையின் கீழ் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் விடிய விடிய நடைபெற்றது. பாதுகாப்பு படையின் மீது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்த, இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ’ஆபரேஷன் அகல்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5 வது டெஸ்ட் தொடரில், பென் டக்கெட் மற்றும் சாய் சுதர்சன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணி 2 போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையிலும், 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று பின்னிலையில் உள்ளது. கடைசி மற்றும் 5வது டெஸ்ட் தொடரை இந்தியா வென்றால் மட்டுமே இந்தப் போட்டி டிராவில் முடிவடையும். கடந்த 31-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய கடைசி போட்டியில் முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட்டாகி, 23 ரன் முன்னிலை பெற்றது. அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள்…
நாடாளுமன்றத்தை கூர்ந்து கவனித்து வருவதாக கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார். மாநிலங்களை உறுப்பினராக உள்ள நடிகர் கமல்ஹாசன், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். கூட்டத்தை முடித்து விட்டு சென்று திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வெளியில் இருந்து கூர்மையாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த இடத்தை உள்ளே இருந்து பார்க்கிறேன். அதில் உள்ள கடமை புரிகிறது. பெருமை புரிகிறது. ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது. என்னுடைய முனைப்பு முதலில் நாடு, தமிழ்நாடு. இதுவே நாடாளுமன்றத்தில் எனது போக்கஸ். இதற்காகத்தான் போய் இருக்கிறேன். இது முக்கியமான பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். சரிவர என் கடமையை செய்வேன் என நினைக்கிறேன். ஆணவக் கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது. நம்முடைய சமுதாய அமைப்பு அப்படி. அதை மாற்ற வேண்டும். கட்சிகள் வரும் போகும் நாடு நடந்தே இருக்கும்” என்றார்.
ஜவான் படத்தில் நடித்தற்காக நடிகர் ஷாருக்கானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இயக்குநர் அட்லீக்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஹிந்தியில் சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகர் ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் ஜவான் படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்தார். ரூ.1000 கோடி வசூலை குவித்தது ஜவான் திரைப்படம். தனது 33 வருட சினிமா வாழ்க்கையில் ஷாருக்கான் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும், அவர் முதல் தேசிய விருது பெற்ற படம் ஜவான். இந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அட்லீக்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், கையில் காயத்துடன் திரைத்துறையினருக்கும்,…