Author: Editor TN Talks
விழுப்புரத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனையை சேர்ந்தவர் சீதை. 60 வயதான அவர், அதே ஊரைச் சேர்ந்த 63 வயதான லட்சுமி என்பவரும் கடந்த 30-ம் தேதி இரவு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அதே ரயிலில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் அருகே ஆனந்தபுரத்தை சேர்ந்த மோகித் என்ற 20 வயது இளைஞரும் பயணம் செய்தார். சீதை தனது பர்சில், 5 சவரன் நகை மற்றும் ரூ.13,000 பணமும் வைத்திருந்ததை, நோட்டமிட்ட மோகித் அதை திருட திட்டமிட்டுள்ளார். நள்ளிரவு 1.20மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரயில் மெதுவாக சென்ற போது, மோகித் திடீரென சீதை வைத்திருந்த பர்சை பறித்துக் கொண்டு ஓடு ரயிலில் இருந்து குதித்துள்ளார். இதை எதிர்பாராத சீதை கூச்சலிட்டதோடு, ரயிலில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை…
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின், உடலை வாங்க அவரது உறவினர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐடி ஊழியரான கவின் என்பவர் நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கவினை கொலை செய்ததாக சுர்ஜித் காவல்நிலையத்தில் சரணடைந்தார். கவின் காதலித்த பெண்ணின் சகோதரனான அவர், கவின் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்க அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவின்ர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை விசாரணை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஒருவேளை அவர் விஜய்யுடன் இணைய வாய்ப்புள்ளதோ என அரசியல் வட்டாரத்தில் பேச்சுவார்த்தைகள் எழுந்த நிலையில், இன்று ஒரே நாளில் இருமுறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக இன்று காலை வழக்கம் போல சென்னை அடையாறு பூங்காவில் நடைபயிற்சி சென்ற முதலமைச்சரை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக கூறப்பட்டது. அதனை…
டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ’ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து ’ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.ஐ.2017 என்ற விமானம் லண்டன் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. விமானம் புறப்பட தயாரான போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தின் டேக்-ஆப் ரத்து செய்யப்பட்டது. விமானத்தை விமானிகள் ஓடுபாதையின் மற்றொரு பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தினர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ’ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் இருமுறை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தனது பணிகளை தொடங்கியுள்ளார். 10 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த அவர், பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாறு பூங்காவில் நடைபயிற்சி சென்ற போது, அவரை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக கூறப்பட்டது. முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு பாஜக கூட்டணியில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம். செய்தியாளர்களை சந்தித்த அவரது ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், திமுகவை வீழ்த்துவது எங்கள் இலக்கு அல்ல என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வருகை தந்த…
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியினர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் அணியின் கேப்டன் சுப்னம் கில்லும் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் தொடர், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஜெய்ஸ்வால் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பிறகு கே.எல்.ராகுலும் 12 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சாய் சுதர்சனும், சுப்மன் கில்லும் ஜோடி சேர்ந்தனர். சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் இருந்த போது உணவு இடைவேளை விடப்பட்டது. இந்த தொடரில் இந்திய கேப்டனாக அறிமுகமான சுப்மன்…
உண்மை தெரியாமல் யாரும் எதுவும் பேச வேண்டாம் என நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் காதலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் செல்வகணேஷ் என்பவர் காதலியின் சகோதரரால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டுள்ளார். அவர்களது போலீஸ் பெற்றோர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கவினின் கொலை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கவினின் காதலி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “கவினின் கொலையில் என் பெற்றோருக்கு தண்டனை கொடுப்பது தவறு. என் அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது. கவினுக்கும் எனக்குமான உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும். என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம். என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துள்ளார். சுர்ஜித்தின் சகோதரி மேலும் ஒரு வீடியோ…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபையில் பக்தர்கள் தரிசனத்துக்காக தீட்சிதர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில், கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என முடிவெடுத்து, கடந்த…
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவீர்களா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் இன் மகனும் அண்ணன் ரவீந்திரநாத் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போத பேசிய அவர், தொண்டர்கள் என்ன நினைக்கின்றார்களோ பொதுமக்கள் என்ன நினைக்கின்றார்களோ அதன்படி எடுத்த முடிவு தான் இது எங்களுடைய முடிவு என்ன என்பதை பண்ருட்டியார் தெளிவாக சொல்லிவிட்டார் பின்னாடி என்ன நடக்கும் என்பதை நினைத்து நாங்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன நல்லது செய்ய முடியும் என்பதை நினைத்து தான் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார் அதே வழியில் தான் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் வழி நடத்தினார்கள் இந்த இரண்டு தலைவர்களை நம்பி தான் இந்த இயக்கத்தின் தொண்டர்கள் கட்சியின் ஆணிவேராக நின்று கொண்டிருக்கின்றார்கள் ஆகவே எங்கள் தலைவர்களின் நோக்கம் என்னவோ அதன்படி எங்கள் பயணம் இருக்கும் அதிமுகவை பாஜக அழிக்க நினைக்கிறதா என்ற…
திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவை மாற்றி பதிவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்ட அவிநாசியில் நடந்த வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கியெடுத்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. ஆனாலும், சந்தேக மரணம் என்று மட்டுமே போலீசார் பதிவு செய்துள்ள நிலையில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ரிதன்யா குடும்பத்தினர் வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தனது மகளின் தற்கொலைக்கு காரணமாக உள்ள அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தனது மகள் இறப்பதற்கு…