Author: Editor TN Talks
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருந்த உறவு முறிக்கப்பட்டது என்றும் எந்த கட்சியுடனும் இன்றைய நிலையில் கூட்டணி இல்லை என்றும் எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும் ஓபிஎஸ் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். பாஜகவுடன் கடந்த நான்கு ஆண்டுகளாகவே நல்ல நெருக்கத்துடன் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை, சமீப கால நிகழ்வுகள் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தர்மயுத்தம் தொடங்கிய ஓ பன்னீர்செல்வம், கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டனர். அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இடம் பெற்ற ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். இருப்பினும் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்த ஓபிஎஸ்-ற்கு சமீப கால நிகழ்வுகள் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக…
நெல்லையில் கவின் என்ற இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சாதி பெருமை தான் அத்தனைக்கும் காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லையில் இளைஞர் கவின் ஆணவப் படுகொலை அதிர்ச்சி தருகிறது. சுர்ஜித், அவரது தாய், தந்தை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்..? சிபிசிஐடி போலீசார் நேர்மையுடன் வழக்கை விசாரிக்க வேண்டும். வட இந்திய மாநிலங்களில் நடக்கும் சாதிய படுகொலைகள் தென்னிந்திய மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. சாதிப் பெருமைதான் ஆணவக் கொலைகளுக்கு காரணம். ஆணவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும்.” என்றார்.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ’ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்டில் டிராவில் முடிந்ததால், இத்தொடரில் இங்கிலாந்து 2-1 என்றா கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் தொடர் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடைசி டெஸ்டுக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பந்து தாக்கி கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலகி விட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை ஓய்வெடுக்கும் படி கிரிக்கெட்…
உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து இன்று தலைமை செயலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். கடந்த 22-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கம் போல காலை நடைபயிற்சி சென்ற போது லேசான தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார். சுமார் ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்த படியே அரசு அலுவல்களை முதலமைச்சர் கவனித்து வந்தார். உடல்நலம் தேறிய நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகிறார். காலை 10.15 மணியளவில் முதலமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, 2025-26-ம் கல்வி ஆண்டில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், தேசிய சட்ட பல்கலைகழகம், Miranda House, University of Delhi போன்றவற்றில்…
சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தடை கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தாக்கல் செய்த வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, த.வெ.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பதிவுத்துறையில், தங்கள் அமைப்பின் வணிக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆனந்த் பதில்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கொள்கை அடையாளமாகவே அரசியல் கட்சி கொடியை பயன்படுத்துகிறது. இதில் வர்த்தக நடவடிக்கையோ, பொருளாதார பரிவர்த்தனையோ ஏதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும்,…
ரூ.1000 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி டெல்லி தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி செய்யப்பட்ட பணத்தை திரைப்பட மற்றும் வந்த செலவுக்காக பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது. பவர் ஸ்டார் சீனிவாசன் மீது இதேபோல மோசடி வழக்கு சென்னையில் 6 இருப்பதும் தெரிய வந்துள்ளது
1998ல் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவிற்கு வழங்கி வந்த ஆதரவை அதிமுக வீழ்த்தியது வரலாற்றுப் பிழையாகி விட்டது என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் பேச்சு சர்ச்சையானது. அதற்கு இன்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், 2026 தேர்தல் களத்திற்கு முதல் முதலாக வந்துள்ளது அதிமுக தான். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் எங்களை வாழ வைத்த தெய்வங்கள். அதிமுகவின் கடைக்கோடி தொண்டர் வரை அந்த உணர்வோடுதான் மறையவில்லை எங்கள் உள்ளத்தோடும் உதிரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் எழுச்சி பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த எழுச்சி பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணத்தில் பாஜக நிர்வாகிகளும் கலந்து…
தூத்துக்குடியில் முழுவீச்சில் தயாராகி உள்ள கார் உற்பத்தி ஆலையையும் அதன் விற்பனையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார். உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை, இந்த தொழிற்சாலையை ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து…
பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், வருவாய்துறை அதிகாரிகளுடன், சுகாதாரதுறை அதிகாரிகள், ஆலோசனை நடைபெற உள்ளது. குறிப்பாக, ஒவ்வொறு ஆண்டும் வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் அதிகபடியான பாதிப்புகள் எதிர்கொள்ளும். இந்த நிலையில் மழை நீர் வடிகால் பணிகள், தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ள இடங்களில் மோட்டார் பம்ப் வசதிகள், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்க இருக்க கூடிய மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் அடிப்படை வசதி, உணவு, மருத்துவ முகாம் அமைப்பது, பொது மக்களை தங்க வைக்க முகாம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் உதயநிதி கேட்டறிகிறார்.
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு மாடல் அரசின் அராஜகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு.. சென்னை மாநகராட்சியின் 1,260 இடங்களில் உள்ள 10,000 பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 620 கோடியும், ராயபுரம் மற்றும் திரு.வி.க ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளைத் தனியார்மயமாக்குதற்கு ரூ. 430 கோடியும் என திமுக ஆட்சியில் இதுவரை சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. குறிப்பாக, ஜனவரி 2022-இல் ரூ. 3.18 ஆக இருந்த ஒரு பொது கழிப்பறையின் பராமரிப்பு செலவானது செப்டம்பர் 2022-இல் ரூ.363.9 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள ரூ. 360.72 எங்கே செல்கிறது? தற்போதுள்ள…