Close Menu
    What's Hot

    ஆடி முதல் ஞாயிறு..!! அம்மன் படையலுக்காக சந்தைகளில் குவிந்த அசைவப் பிரியர்கள்..!!

    ‘வந்தே மாதரம்’ தொடர்பாக புதிய சட்டம்? 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுமா..??

    பின்வாங்க மாட்டோம்.. நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி உறுதி.. சோனம் வாங்சுக்கின் மனைவி அறிவிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை – ஓபிஎஸ் அறிவிப்பு
    அரசியல்

    பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை – ஓபிஎஸ் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tnm import sites default files OPS PTI 230622 1200
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருந்த உறவு முறிக்கப்பட்டது என்றும் எந்த கட்சியுடனும் இன்றைய நிலையில் கூட்டணி இல்லை என்றும் எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும்
    ஓபிஎஸ் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

    பாஜகவுடன் கடந்த நான்கு ஆண்டுகளாகவே நல்ல நெருக்கத்துடன் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை, சமீப கால நிகழ்வுகள் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தர்மயுத்தம் தொடங்கிய ஓ பன்னீர்செல்வம், கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டனர். அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இடம் பெற்ற ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

    இருப்பினும் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்த ஓபிஎஸ்-ற்கு சமீப கால நிகழ்வுகள் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் ஒ.பி.எஸ்.ஸை தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது…

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உரிமை மீட்பு குழுவின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய அரசியல் நிலைமை குறித்தும் தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்தும் மக்கள் பிரச்சனைகள் குறித்தும்  நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு மூன்று  முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெற்று இருந்தது ஆனால் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு  தனது உரிமையை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது.

    ஓ பன்னீர்செல்வம் விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் கூட்டணி இல்லை. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருந்த உறவு முறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    எந்த கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி என்பதை இன்னும் சிறிது காலம் கழித்து அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதற்க்கான காரணம் உலகம் அறிந்ததே அதை எடுத்துக்கூற வேண்டிய அவசியம் இல்லை.

    2026 இல் சரியான கூட்டணி சரியான திசையில் வழிநடத்திச் செல்ல உள்ள கூட்டணி எதிர்காலத்தில் அமையும். அதைப் பொறுத்து எங்களின் முடிவு இருக்கும். நிர்வாகிகளின் முடிவு ஒருமித்த முடிவாக இருந்தது. யாரையும் வீழ்த்த வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள் அல்ல யாரையும் வாழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களின் குறிக்கோள். பிஜேபி எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அது நாடே அறியும்.

    ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சென்னையில் நான் நடைபயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று நடை பயணம் சென்றபோது முதல்வரையும் அங்கு சந்தித்தேன். வணக்கம் கூறிவிட்டு சென்றேன் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாதி பெருமை தான் ஆணவக் கொலைக்கு காரணம்… திருமாவளவன் ஆதங்கம்…
    Next Article மோடி ஏன் பதிலளிக்க மறுக்கிறார்- செல்வபெருந்தகை கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    ஆடி முதல் ஞாயிறு..!! அம்மன் படையலுக்காக சந்தைகளில் குவிந்த அசைவப் பிரியர்கள்..!!

    July 19, 2026

    ‘வந்தே மாதரம்’ தொடர்பாக புதிய சட்டம்? 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுமா..??

    July 19, 2026

    பின்வாங்க மாட்டோம்.. நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி உறுதி.. சோனம் வாங்சுக்கின் மனைவி அறிவிப்பு..!!

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆடி முதல் ஞாயிறு..!! அம்மன் படையலுக்காக சந்தைகளில் குவிந்த அசைவப் பிரியர்கள்..!!

    ‘வந்தே மாதரம்’ தொடர்பாக புதிய சட்டம்? 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுமா..??

    பின்வாங்க மாட்டோம்.. நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி உறுதி.. சோனம் வாங்சுக்கின் மனைவி அறிவிப்பு..!!

    அந்த கோலத்தில்.. அம்மன் சிலையோடு ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை..!! ஹைதராபாத்தில் பகீர் சம்பவம்..!!

    ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது…”எங்கள் குடும்பத்திற்கு பெருமையான தருணம்” – ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.