Close Menu
    What's Hot

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அந்த கோலத்தில்.. அம்மன் சிலையோடு ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை..!! ஹைதராபாத்தில் பகீர் சம்பவம்..!!
    Featured

    அந்த கோலத்தில்.. அம்மன் சிலையோடு ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை..!! ஹைதராபாத்தில் பகீர் சம்பவம்..!!

    editor5By editor5July 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 11 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹைதராபாத் பீர்சாடிகுடா பகுதியில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வயதான முன்னாள் மென்பொருள் பொறியாளர் தேஜஸ்வினி என்பவர், நள்ளிரவில் உடலில் எந்த ஆடையும் இன்றி ஓடிச் சென்று, அருகிலுள்ள பீரப்பா கோயிலில் இருந்த அம்மன் சிலையை எடுத்துக்கொண்டு, பின்னர் அருகே உள்ள பீர்சாடிகுடா ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விசாகப்பட்டினம் மாவட்டம் விசியநகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தேஜஸ்வினி, பெங்களூரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது பணியை ராஜினாமா செய்த அவர், தாயார் அருணாவுடன் ஹைதராபாத்தின் பீர்சாடிகுடா சங்கர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். பெற்றோருக்கு இடையேயான திருமண முரண்பாடுகள் காரணமாகத் தந்தை விசாகப்பட்டினத்தில் தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த ஜூலை 17ஆம் தேதி, இருவரும் நகரின் மியாபூர் பகுதியில் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை வாங்குவதற்காகப் பார்வையிட்டனர். இரவில் தனித்தனி அறைகளில் உறங்கிய நிலையில், நள்ளிரவு 2.30 மணியளவில் தேஜஸ்வினி தாயார் தூங்கும் அறையை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, தனது உடைகளை அனைத்தும் களைந்துவிட்டு நிர்வாண நிலையில் வீட்டை விட்டு வெளியேறினார்.

    பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள அதிர்ச்சிகரமான காட்சிகளின்படி, அவர் பீரப்பா கோயிலுக்குள் நுழைந்து, கருவறையில் இருந்த அம்மாவாரு (அம்மன்) சிலையைத் தூக்கிக்கொண்டு ஏரியை நோக்கி ஓடியுள்ளார். பின்னர் சிலையுடன் ஏரியில் குதித்தார்.

    அதிகாலையில் கண்விழித்த தாயார் அருணா, அறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்துத் திறந்தனர். வீட்டில் மகள் இல்லாததால் தேடியபோது, ஏரியில் பெண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பின்னர் அங்கு சென்ற ஹைதராபாத் பேரிடர் மீட்புக்குழு உடலை மீட்டது.

    எனினும், தேஜஸ்வினி எடுத்துச் சென்ற அம்மன் சிலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. படகுகள் மூலம் ஏரியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பதை மேடிபள்ளி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஐடி துறையில் பணியாற்றும் இளம் பெண்களின் மன அழுத்தம் குறித்து மீண்டும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

    hyderabad suicide Woman
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது…”எங்கள் குடும்பத்திற்கு பெருமையான தருணம்” – ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
    Next Article பின்வாங்க மாட்டோம்.. நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி உறுதி.. சோனம் வாங்சுக்கின் மனைவி அறிவிப்பு..!!
    editor5

    Related Posts

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    July 19, 2026

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.