Author: Editor TN Talks
ஏழு ஆண்டுகளாக தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காததால், உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறும் மண்டபத்தின் முன்பாக குழந்தைகளுடன் சாலை மறியல் ஈடுபட்ட குடும்பத்தினரால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் உத்தம்பாளையம் திடீர் நகரில் வசித்து வருபவர் ராஜா – தீபா தம்பதியினர். ராஜா வெளிச்சம் தொலைக்காட்சியின் தேனி மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.இவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி அதில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளன. தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு ராஜா மற்றும் தீபா தம்பதியினர் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று உத்தமபாளையம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமிற்கு வந்து மனு அளித்துள்ளனர்.மனு அளித்தும் அதிகாரிகள் வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா மற்றும் தீபா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் தேனி…
தமது பெயரில் உள்ள மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியை நீக்குமாறு புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி பிரபல ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுள்ளது. சென்னை பாடியநல்லூரை சேர்ந்தவர் மிளகாய்ப்பொடி வெங்கடேஷ் என்ற கே.வெங்கடேஷ். இவர் மீது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,தமது தாயார் பதினைந்து ஆண்டுகள் மிளகாய்ப்பொடி வியாபாரம் செய்து வந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், சிறையில் தம்மை மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியுடன் சிறை அதிகாரிகள் அழைப்பதாகவும்,இதனால் தாம் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மிளகாய்ப்பொடியை தூவி கொலை செய்வீர்களா? என தம்மிடம் கேட்பதாகவும் இதனால் சமூகத்தில் தமக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளார். இதனால், ஆவணங்களில்…
சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் இருசக்கர ஊர்தியில் சென்று கொண்டிருந்த நித்தின் சாய் என்ற கல்லூரி மாணவர் கொடூரமான முறையில் மகிழுந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; அவருடன் பயணித்த இன்னொரு மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த படுகொலையை நிகழ்த்திய சந்துரு என்ற மாணவர் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான சென்னை மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினரின் பெயரன் என்று தெரியவந்திருக்கிறது. மனிதத் தன்மையின்றி நடத்தப்பட்டிருக்கும் இந்தப் படுகொலை கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக பாமக செயல் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. கொலை செய்யப்பட்ட நித்தின்சாய் என்ற மாணவருக்கும், இந்தக் கொலையை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்துரு என்ற மாணவருக்கும் முன்பகை எதுவும் இல்லை. ஆனால், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையிலான மோதலில் இருவரும் வெவ்வேறு தரப்பினரை ஆதரித்துள்ளனர். அப்போது ஒரு தரப்புக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசிய சந்துரு, இன்னொரு தரப்பைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவர் மீது மகிழுந்தை ஏற்றி படுகொலை செய்ய…
சிம்புவின் 49-வது படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு புது அப்டேட்டை வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்பு தக் லைப் பட வெற்றியை தொடர்ந்து வெறிமாறன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். அவரது 49-வது படமாக உருவாகும் இப்படமானது வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாகவும் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்புவுடன் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிதி பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, படக்குழு புது அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை…
MY TVK என்ற உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களேஎ உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய்யின் த.வெ.க முதல் தேர்தலை சந்திக்க இருப்பதால், அக்கட்சி தலைவர் விஜய் கட்சியை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார். த.வெ.க சார்பில் ’மக்கள் விரும்பும்-முதலமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேப் போல சென்னை பனையூரில் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கையை விரிவுப்படுத்த MY TVK என பெயரிடப்பட்ட புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார். தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு அடுத்த மாதம் 25-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக உட்பட பல கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 26-ம் தேதி மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி சென்றார். அங்கிருந்து இரவு 8 மணியளவில் நடந்த விழாவில் ரூ.452கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, ரெயில்வே துறையில் நிறைவேற்றப்பட்ட ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள…
திமுக ஆட்சியில் 20 ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்புவனத்தில் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட அஜித்குமார் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மடப்புரத்தில் அஜித்குமார் தாயாருக்கும், சகோதரர் நவீன்குமாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு குடும்பத்தார், அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். மறைந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் போராட்டம் நடந்தது. அதிமுக போராட்டத்தால் வேறு வழியின்றி சிபிஐ விசாரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வேறுவழியின்றி தாக்குதலில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்துள்ளனர். அதிமுகவின் அழுத்தம், போராட்டத்தால் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. போலீசாருக்கு வந்த அழுத்தத்தால்தான் அஜித்குமார் தாக்கப்பட்டிருக்கிறார். காவல்துறை தாக்குதலின் பின்னணியில் யாரோ அழுத்தம் கொடுத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 20 ஆணவப்படுகொலைகள்…
சென்னையில் காதல் தகராறில் நண்பருக்கு உதவிய கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய். 21வயதான இவர் சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்துள்ளார். கடந்த 28-ம் தேதி இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து தனது கல்லூரி நண்பர் அபிஷேக்குடன் இருசக்கர வாகனத்தில் நிதின்சாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருமங்கலம் பள்ளி சாலை அருகே வந்த போது, இருசக்கர வாகனத்தின் மீது அதி வேகத்தில் வந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நிதின்சாய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் நிதின்சாய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த அபிஷேக் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில்…
ரஷ்யா, ஜப்பான் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 3 அடி உயரத்திற்கு சுனிஆமி அலைகள் எழும்பியுள்ளன. ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநசுக்கம் ஏர்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 8.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில், ”19.3 கி.மீ ஆழத்தில், 1.65லட்சம் பேர் வசிக்கக் கூடிய அவச்சா என்ற கடலோர நகரத்தில், கம்சாத்ஸ்கை நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும், பின்னர் அது 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகின. இதனால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்ப கூடும்…
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 12 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், உணவகங்கள், ஜவுளி நிறுவனங்கள், ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் உற்பத்தி தொழில்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை காட்டிலும் வட மாநில தொழிலாளர்களே அதிகம். குறைந்த ஊதியத்தில் கூடுதல் நேர உழைப்பை கொடுப்பதில், வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களை காட்டிலும் அர்வம் காட்டுவதால், உரிமையாளர்களும் வடமாநிலத்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறையின் கணக்குப்படி, மொத்தம் 11லட்சத்து 93ஆயிரத்து 297 பேர் தமிழ்நாட்டில் பல இடங்களில் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒடிசாவில் இருந்து 2,86,500 பேர், பீகாரில் இருந்து 2,47016 பேர், ஜார்கண்ட்டில் இருந்து 1,90,518 பேர், மேற்கு வங்கத்தில் இருந்து 1,84,960 பேர், அசாமில்…