Close Menu
    What's Hot

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி… திருவண்ணாமலை, சிதம்பரத்தில் சுற்றுப்பயணம்…
    தமிழ்நாடு

    மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி… திருவண்ணாமலை, சிதம்பரத்தில் சுற்றுப்பயணம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2025Updated:July 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

    தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக உட்பட பல கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 26-ம் தேதி மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி சென்றார். அங்கிருந்து இரவு 8 மணியளவில் நடந்த விழாவில் ரூ.452கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, ரெயில்வே துறையில் நிறைவேற்றப்பட்ட ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பிறகு தனிவிமானம் மூலம் திருச்சி சென்ற மோடி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். ரூ.1,000 மதிப்பிலான பேரரசர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

    இந்த நிலையில் மீண்டும் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளார். வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக ஆட்சியில் 20 ஆணவப்படுகொலைகள்… எடப்பாடி பழனிசாமி சாடல்…
    Next Article ’MY TVK’ உறுப்பினர் சேர்க்கை செயலி… வெளியிட்டார் கட்சி தலைவர் விஜய்…
    Editor TN Talks

    Related Posts

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    July 17, 2026

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    July 17, 2026

    பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.