Author: Editor TN Talks
புதுச்சேரி முதலமைச்சர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி எனப்படும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் பி.ஆர்.டி.சியில் சுமார் 220-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்தது. அதனால் போராட்டம் கைவிடப்பட்டது. அதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், 7-வது ஊதிய குழு சம்பளம்…
நடிகை திவ்யாவுக்கு எதிராக நடந்து வரும் விஷயங்கள் கண்டிக்கத்தக்கது என கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், அவரது ரசிகரான ரேணுகாசாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்துள்ள அவருக்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளது. இது குறித்து கருத்து பதிவிட்ட நடிகையும், முன்னாள் எம்.பியுமான திவ்யா ஸ்பந்தனா, ”சாதாரண குடிமகனுக்கு உச்சநீதிமன்றம் தான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு நடிகர் தர்ஷனின் ரசிகர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆபாச குறுஞ்செய்திகளை அவருக்கு அனுப்பி வைத்து மிரட்டல் விடுத்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் திவ்யா புகாரும் அளித்திருந்தார். அத்தோடு, ” நடிகர் தர்ஷனுக்கு எதிராக நான் என்னுடைய கருத்தை…
இந்திய தேர்வுக் குழுவை, இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் தந்தை சாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்த வகையில், மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. 311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தின் போது, களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 228 பந்துகளின் தனது 9-வது சதத்தை எட்டினார். நடப்பு தொடரில் அவர் அடித்த 4-வது சதம் இதுவாகும். இந்த போட்டியில் இந்திய அணி டிரா…
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கியாஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் வரும் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர் நிரப்பு மையங்களுக்கு எல்.பி.ஜி கேஸை கொண்டு செல்லும் லாரிகள், ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சுங்கக் கட்டணத் தொகையை வழங்குவது, வாடகை உயர்வு, மற்றும் புதிய டெண்டர் விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் முன்வைத்தனர். இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் லாரி உரிமையாளர்கள் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி முதல் இந்தியன் ஆயில் நிறுவன சமையல் கியாஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை வெளியிடவுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முதன் முதலாக தேர்தலை சந்திக்கவுள்ள விஜய்யின் தவெகவும் அரசியல் பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. 2 கோடி உறுப்பினர்களை தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்கள் கட்சியில் இணைந்தனர். இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க தவெக தலைவர் விஜய் தலைமையில் வாட்ஸ் அப் குழு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகப்படுத்துகிறார்.…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இந்தியாவிற்கு முன்பே அமெரிக்காவில் வெளியாகவுள்ளது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வருடத்திற்கு ஒரு படம் வீதம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்தாண்டு லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ’கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன், ஆமீர்கான், நாகார்ஜூனா, உபேந்திர ராவ், சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேப் போல டிக்கெட் விற்பனையும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் கடந்த வாரம் தொடங்கி சூடுபிடித்துள்ளது. இந்தியாவில் கூலி படம் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் ரிலீசாகவுள்ளது. அமெரிக்க நேரப்படி ஆகஸ்ட் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரிமியர் காட்சி…
நான் ஓடினால் படமும் வெற்றி அடையும் என்ற ஒரு மூடநம்பிக்கை தன்னிடம் இருப்பதாக நடிகர் ஷாருக்கான் கூறியிருக்கிறார். பாலிவுட்டின் உச்சபட்ச நடிகரான ஷாருகானுக்கு, இந்தியாவை தாண்டி உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். 2023-ல் ஜவான், டைகர் 3, டங்கி என 3 படங்கள் கொடுத்தவர், இரண்டு வருடங்களாக பிரேக் எடுத்துள்ளார். அடுத்தாண்டு அவரது கிங் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஷாருக்கான், தனக்கு இருக்கும் மூடநம்பிக்கையை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது ”டார் படத்தில் சன்னியை விட்டு விட்டு ஓடிய போது அந்த படம் வெற்றி பெற்றது. கரன் அர்ஜூன் படத்தில் ஓடினேன் வெற்றி பெற்றது. தில்வாலே படத்தில் ஒரு பெண்ணை துரத்திக் கொண்டே இருந்தேன். அது போல் இப்போது கொய்லா படத்தில் நிறைய ஓடினேன். சில நேரங்களில் நாய்களை பின் தொடர்கிறேன். சில நேரங்களில் வில்லன்களை பின் தொடர்கிறேன். வில்லன்களுக்கு பயந்து ரெயில்களை பின் தொடர்கிறேன். எனவே படத்தில்…
நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் போலீஸ் தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர்கள் சந்திரசேகர்-தமிழ்செல்வி தம்பதி. ஒட்டப்பிடாரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மூத்த மகன் கவின், சென்னை துரைப்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த அவர், கடந்த 27-ம் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள சித்தா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், கவினை பேசுவதற்காக அழைத்து சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், கவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டம் தொடங்கியது முதலே பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகியவற்றை விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இரு அவைகளிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது. அதனை தொடர்ந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இரு அவைகளிலும் தலா 16 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மக்களவையில் உரையாற்றினர். எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள்…
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இணையத்தளத்தில் தொடங்கியுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான முத்லாமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 12 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத் திறனாளிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக…