Author: Editor TN Talks

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் ஆபரேஷன் சிந்தூர் இந்தியா தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. ஆபரேசன் சிந்தூர் பற்றி மக்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது.. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தைரியம் நிறைந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கையாக ஆபரேசன் சிந்தூர் அமைந்தது. இந்தியாவின் நவீன ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினோம். இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் தீவிரவாத இடங்களை மட்டுமே நாங்கள் இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. இந்திய வீரர்களின் வீரத்திற்குகும், திறமைக்கும் நான் தலைவணங்குகிறேன். அப்போது, இந்திய படைகளுக்கு முழு அதிகாரம்…

Read More

முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை, குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்களை ஜூலை 30 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்துக்குச் சென்ற இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காட்ஃப்ரே நோபிள் அளித்த புகாரின் அடிப்படையில், ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட கோரி புகார்தாரான காட்ஃப்ரே நோபிள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வழங்காதது…

Read More

தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நூற்றாண்டு தொடக்க விழா, 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது, நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கி விழா பேருரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த ஒரு வாரமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நலமாக முதலமைச்சர் வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள்., செவிலியர்களுக்கு இந்த மேடையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், நீதிக்கட்சி நிறைவேற்றிய சட்டம் தான் சட்டபூர்வமாக செவிலியர்களுக்கு ஒழுங்கு முறையை வழங்கியது. இந்த கவுன்சில் தான் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட செவிலியருக்கான முதல் கவுன்சில்.இந்த செவிலியர் கவுன்சில் தான் நூற்றாண்டு கண்ட உலகில் மூன்றாவது செவிலியர் அமைப்பு. இந்த செவிலியர் அமைப்பால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை.…

Read More

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலைய வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை மண்ணடி மரக்காயர் தெருவை சேர்ந்த கனி என்கிற வரிசை கனியிடம் பிளாட் வாங்குவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையில் வாங்குவதில் சட்ட பிரச்சனைகள் இருப்பதாக கூறியதை எடுத்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.ஆனால் பணத்தை கொடுக்காமல் கடந்த ஐந்து வருடங்களாக கேட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மன்சூர் அலிகான் அவர்களின் மகன் துக்ளக் மண்ணடி பகுதிக்கு வந்து பணத்தை கேட்ட போது கனி தனது வீட்டை பூட்டிக்கொண்டு காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.…

Read More

ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னையும், தனது மகனையும் தாக்கியதாக, எஸ்.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவர் அறிவழகி, அவரது கணவர் உள்ளிட்டோருக்கு எதிராக, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.லக்‌ஷ்மி பாலா என்பவர் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி லக்‌ஷ்மி பாலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாக்குதலில் காயமடைந்த புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக அரசு வழக்கறிஞர் கூறியதை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை…

Read More

பிரதமரின் தமிழகப் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது. ஒட்டுமொத்த தென்னாட்டையும் தனது ஒற்றை வெண்கொற்றக் குடையின் கீழ் ஆண்ட சக்கரவர்த்தி இராஜேந்திர சோழனின் வீர வரலாற்றின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நமக்கு வழங்குவதற்காகவும் 2 நாள் அரசு முறைப்பயணமாக, நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்தடைந்தார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள். நாட்டு மக்களுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பொற்கால ஆட்சி வழங்கி, நம் எல்லைகளை பலப்படுத்தி, கடல்கடந்து நம் பாரதத்தின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் “கலியுகக் கடாரம் கொண்டான்” நமது மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு, தமிழக பாஜக சார்பாகவும், நமது கூட்டணிக் கட்சியான அஇஅதிமுக-வின் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உள்ளிட்ட அஇஅதிமுக-வின் முக்கியத் தலைவர்கள் சார்பாகவும் திருச்சி…

Read More

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதிபதி GR சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக வழக்கு நீதிபதிகள் GR சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன். இவர் எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) நீதிமன்ற கடமைகளை நிறைவேற்றுவதில் வகுப்புவாதம் மற்றும் சாதி சார்புகளை வெளிப்படுத்துகிறார் என அவதூறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது எங்களின் கவனத்துக்கு வந்தது. இந்த மேல்முறையீடு வழக்கில் 3வது எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் உள்ளார். இதனால் நீதிபதி மீது முறையற்ற குற்றச்சாட்டு கூறியதால் அவர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் ஆஜரானார். அவரிடம் எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.எஸ்) தனது நீதித்துறை கடமைகளை நிறைவேற்றுவதில் சாதி சார்பை வெளிப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைக்கிறீர்களா? என நேரில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு…

Read More

இங்கிலாந்து-இந்தியா இடையேயான டெஸ்ட் தொடரில் அடுத்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என இந்திய கேப்டன் சுப்மன் கில் உறுதியளித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன. பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய எஇலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. 137 ரன்கள் பின்தங்கியதோடு 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் அடித்து 114 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனால் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து…

Read More

மாநிலங்களவையில் அதிமுக புதிய எம்.பி.,க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் கடந்த ஜூன் 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 25-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அவர்களை தொடர்ந்து இன்று காலை அதிமுக எம்.பி.,க்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு மாநிலங்களை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஏற்கனவே மாநிலங்களவையில் அதிமுக சார்பில் தம்பிதுரை, சி.வி.சண்முகம், தாமர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளனர்.

Read More

மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகைக்காக சுமார் 14,000 ஆண்கள் முறைகேடாக பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டைப் போலவே பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் ’லாட்கி பகின்’ திட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலையொட்டி அவசர கதியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதால், திட்ட பயனாளர்கள் விவரங்கள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில், தற்போது இத்திட்டத்தில் முறைகேடாக நிதியுதவி பெற்று வரும் நபர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். ’லாட்கி பகின்’ திட்டத்தில் 14,298 ஆண்கள் முறைகேடாக உதவி பெற்று வந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 26-ம் தேதி துணை முதலமைச்சர் அஜித்பவார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கான திட்டத்தில் நிதியுதவி பெற்ற ஆண்களிடமிருந்து அவர்கள் பெற்ற பணம் திரும்ப பெறப்படும் என கூறியிருந்தார். அதேப் போல, ’லாட்கி பகின்’ திட்டத்தில் உரிய தகுதியில்லாமல் 26.3லட்சம் பயனாளர்கள் நிதியுதவி பெற்று வந்ததாக அமைச்சர் அதீதி…

Read More