Author: Editor TN Talks
தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடியிடம் 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, மாலத்தீவில் இருந்து நேற்று இரவு தூத்துக்குடி வந்தடைந்தார். அங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். இரவு 10 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். தொடர்ந்து இன்று காலை கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரதமர் ரோடு-ஷோ நடத்தவுள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்லும் மோடி, புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலுக்கு செல்லவுள்ளார். இதற்கிடையில் திருச்சியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது மோடியிடம் 3 கோரிக்கைகள் அடக்கிய மனுவை வழங்கியுள்ளார். அதில், ”விவசாயிகளுக்கான சிபில்…
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கு இந்தியாவின் சுமித் நாகல் தேர்வாகியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ், ’வேர்ல்டு குரூப்-1’ முதல் சுற்றுப் போட்டி செப்டம்பர் மாதம் 12 முதல் 14 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சுவிட்சர்லந்து அணிகள் மோதுகின்றன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் இடம்பெற்றுள்ளார். கடைசியாக 2023-ம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற டேவிஸ் கோப்பையில் மொராக்கோ அணிக்கு எதிராக சுமித் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றையரில் விளையாட கரண் சிங், ஆர்யன் ஷா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரட்டையர் போட்டிக்கு யூகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி தேர்வாகினர். இதில் பாம்ப்ரி, கடைசியாக நடந்த சுவீடன், டோகோ அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. மாற்று வீரர்களாக சசிகுமார் முகுந்த், தக் ஷினேஷ்வர் சுரேஷ், ரித்விக் அறிவிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீவக்காரமாரி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஆசிம் என்ற சிறுவன், காலை 10.30 மணியளவில் ஸ்ரீவக்காரமாரி குன்னத்தேரி என்ற ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிறுவன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”. எனக் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கூகுள் மேப் சொல்வதைக் கேட்டு காரை இயக்கிய பெண் ஒருவர், பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் நவி மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பீலாப்பூரில் இருந்து உல்வே என்ற பகுதி நோக்கி காரில் பயணித்துள்ளார். கூகுள் மேப் உதவியுடன் காரை அவர் இயக்கியுள்ளார். பீலாப்பூரில் உள்ள பாலத்தை கூகுள் மேப் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மாறாக அதற்கு அடியில் உள்ள வழியை பயன்படுத்துமாறு கூகுள் மேப் வழிகாட்டியுள்ளது. இதனை நம்பி, கூகுள் மேப் காட்டிய வழியில் அப்பெண் காரை இயக்கிய போது, அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குவ் அந்த மீட்புப் படையினர் அப்பெணை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அப்பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்த கார் மீட்கப்பட்டது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. முன்னதக இதேப் போ,…
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விரைவில் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார் லோகேஷ். அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் ஃபாசில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் சிக்கிடு, மோனிகா, பவர் ஹவுஸ் போன்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆகஸ்ட் 2-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில்…
சென்னை அப்பலோ மருத்துவமனையில் தொடர்ந்து 6-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலை வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால், உடனே சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்த அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 3 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். தொடர்ந்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாகவே தலைசுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இதய சிகிச்சை மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தலின்படி, முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ சோதனையில் உடல்நிலை இயல்பாக இருப்பது தெரியவந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 5ஆவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதலமைச்சரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் சந்தித்து…
சமூக ஊடங்களை பலர் தவறாக பயன்படுத்துவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பெண் அரசியல்வாதி ஒருவரை விமர்சித்து யூடியூப்பில் கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பத்திரிக்கையாளருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கேரள பத்ரிக்கையாளருக்கு கண்டனம் தெரிவித்தனர். அத்தோடு, யூடியூப் வீடியோக்கள் நீதிமன்ற செயல்முறைக்கு மாற்றாக இருக்க முடியாது. தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றங்கள் உள்ளன. யூடியூப் வீடியோ மூலம் கருத்தை திணிக்க முடியாது. யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் பேசப்படும் எதிர்மறையான விஷயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ஊழல் எதிர்ப்பு பெயரில் யாருடைய புகழையும் பாதிக்கும் வகையில் செயல்பட முடியாது. விமர்சிப்பது சட்டத்தின் கண்ணோட்டத்தில் தவறானது. ஊழலை எதிர்ப்பதாக கூறி அவதூறு கருத்து பரப்ப சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு தலை காதலால் கல்லூரி மாணவியை நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகேயுள்ள மேல் நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு பேருந்தில் இருந்து இறங்கி மேல்நேத்தப்பாக்கம் கூட்ரோட்டில் இருந்து தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்திய கத்தியால் மாணவியின் கழுத்து, இடதுகை பகுதிகளில் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்படார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவியை தாக்கிய கவியரசு என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,…
ராமாயணம் திரைப்படத்தில் அசாம் நடிகை சுரபிதா இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ’ராமாயணம்’ திரைப்படம். பல மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ராமனாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும், ராவணனாக கன்னட நடிகர் யாஷ்-ம் நடித்து வருகின்றனர். நிதேஷ் திவாரி இயக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் ராமனின் தம்பி லட்சுமணன் மனைவி ஊர்மிளாவாக அசாம் நடிகை சுரபி தாஸ் நடிக்கவுள்ளார். 27 வயதான சுரபி தாஸ் ராமாயணம் படத்தில் நடிக்க இருப்பதை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ரன்பீர்…
கார்கில் வெற்றி தினத்தின் 26-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று 26-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற பெயரில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கார்கில் வெற்றி நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “கார்கில் வெற்றி நாளில், நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு ராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள். அவர்களது தீரமும், தியாகமும் என்றும் நம் நினைவை விட்டு…