Author: Editor TN Talks
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மற்றும் பா.ஜ.கவுடனான அ.தி.மு.கவின் கூட்டணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை தி.நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் பேசிய முக்கிய அம்சங்கள் இங்கே: எடப்பாடி பழனிசாமியின் பேச்சு ஒரு நகைச்சுவை! எடப்பாடி பழனிசாமியின் “தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்தை முத்தரசன் கடுமையாக விமர்சித்தார். இந்த முழக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் பயன்படுத்தியது என்றும், பா.ஜ.க கூட்டணியில் இருந்தபோது அ.தி.மு.க இதை பேசியதாகவும் சுட்டிக்காட்டினார். இது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை என்றும், பா.ஜ.கவிடமிருந்து இரவலாகப் பெற்று எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும் அவர் கூறினார். கோவையில் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என்று பேசிய எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வரவேண்டும் என்று சொல்வதைச் சுட்டிக்காட்டி முத்தரசன் முரண்பாடுகளை எடுத்துரைத்தார். பா.ஜ.க கூட்டணியை நிராகரிப்பு: ‘ரத்தக் கரை படிந்த கம்பளம்’ இந்திய…
காமராஜர் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசிய கருத்துக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான இச்செயல்களை அனுமதிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டுகள்: திருச்சி சிவாவின் சர்ச்சைக்குரிய பேச்சு: சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா, “காமராஜர் மின்சார தட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு முழுவதும் கண்டனக் கூட்டம் நடத்தினார். அவருக்கு ஏசி இல்லையென்றால் உடலில் அலர்ஜி வரும் என்பதால், அவர் தங்கும் அனைத்து பயணிகள் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய உத்தரவிட்டார். கலைஞரின் பெருந்தன்மையை கண்டு நெகிழ்ந்துபோன காமராஜர், இறப்பதற்கு முன் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்” எனப் பேசியிருந்தார். ஆடம்பர வாழ்வு பற்றிய விமர்சனம்: காமராஜர் ஆடம்பரங்களை விரும்பாதவர் என்றும், எளிமையின் வடிவமாகவே வாழ்ந்து மறைந்தவர் என்றும் அன்புமணி…
இந்திய ரயில்வே, பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தட்கல் டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பெட்டிகள் தொடர்பாக சில புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறைகள்: ஆதார் கட்டாயம்: ஜூலை 1 ஆம் தேதி முதல், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் உறுதிப்படுத்தப்பட்ட பயனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். OTP அடிப்படையிலான உறுதிப்பாடு: ஜூலை 15 ஆம் தேதி முதல், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP (ஒரு முறை கடவுச்சொல்) உறுதிப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த OTP ஆனது அதிகாரப்பூர்வ பிஆர்எஸ் (PRS) கவுன்ட்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதும் மொபைலுக்கு அனுப்பப்படும். OTP உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே டிக்கெட் வழங்கப்படும். முகவர்களுக்கான கட்டுப்பாடுகள்: அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கும் முதல்…
மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025 தொடர்பான தனது அறிக்கையை நாடாளுமன்றத் தேர்வுக் குழு இறுதி செய்து ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிக்கை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை (ஜூலை 21) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவின் பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள் மத்திய அரசு தற்போது நடைமுறையில் உள்ள 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் நோக்கில் இந்த புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை கடந்த பிப்ரவரி 13 அன்று அறிமுகப்படுத்தினார். இதில் உள்ள முக்கிய மாற்றங்கள்: வரி ஆண்டு: தற்போதுள்ள ‘மதிப்பீட்டு ஆண்டு’ மற்றும் ‘முந்தைய ஆண்டு’ போன்ற சொற்றொடர்கள் நீக்கப்பட்டு, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் ‘வரி ஆண்டு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எளிமையான வாக்கியங்கள்: நீளமான வாக்கியங்கள் சிறிய, எளிதில் படிக்கக்கூடிய வாக்கியங்களாக மாற்றப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட அத்தியாயங்கள்: தற்போதைய சட்டத்தில்…
வரவிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 8 புதிய சட்ட மசோதாக்கள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: கூட்டத்தொடர் குறித்த முக்கிய விவரங்கள்: தொடக்கம்: ஜூலை 21 முடிவு: ஆகஸ்ட் 21 எதிர்பார்க்கப்படும் சர்ச்சைகள்: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆகியவை குறித்த எதிர்க்கட்சிகளின் சந்தேகங்கள் முக்கியமாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்படவுள்ள 8 புதிய சட்ட மசோதாக்கள்: தேசிய விளையாட்டு நிர்வாக சட்ட மசோதா: விளையாட்டுகளின் நிர்வாகம் தொடர்பான புதிய சட்டம். புவியியல் பாரம்பரிய தளங்கள் மற்றும் புதைபடிமங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்ட மசோதா: புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் மற்றும் புதைபடிமங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான சட்டம். சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா: சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள். தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டத்திருத்த மசோதா:…
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆறு வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (வியாழக்கிழமை, ஜூலை 17, 2025) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும், அரசின் திட்டங்கள் குறித்து அறியவும் இம்முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முகாம்கள் நடைபெறும் இடங்கள்: மாதவரம் மண்டலம் (வார்டு-32): சூரப்பேட்டை சந்திப்பு, அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீவரத மஹால். இராயபுரம் மண்டலம் (வார்டு-49): பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலையில் உள்ள மைனா பார்ட்டி ஹால். அம்பத்தூர் மண்டலம் (வார்டு-80): புதூர், கிழக்கு பானுநகர், ரெட்ஹில்ஸ் சாலை, மல்லிகா மஹால். கோடம்பாக்கம் மண்டலம் (வார்டு-130): வடபழனி, 100 அடி சாலையில் உள்ள ஆர்த்தி மஹால். பெருங்குடி மண்டலம் (வார்டு-184): பஞ்சாயத்து அலுவலகச் சாலையில் உள்ள 184வது வார்டு…
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆளும் கட்சியான தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை’ தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதிலும் தி.மு.க. தீவிரம் காட்டி வருவது இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிகிறது.
அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நேற்று தொடங்கி வைத்தார். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி…
கோவையில் குவியும் இறைச்சி கழிவுகளில் இருந்து எழும் துர்நாற்றத்தால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அவதி பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கோவை மாவட்டம் கிணத்துகடவு சட்டமன்ற தொகுதியில் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள மயானத்தின் அருகில் ஆடு, மாடு, கோழி, மற்றும் பன்றி இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுவட்டார பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய்தொற்று பரவும் ஆபத்தும் அதிகரித்துள்ளது. இந்த மயானத்திற்கு அருகிலேயே செட்டிபாளையம் காவல் நிலையம், அரசு மேல்நிலை பள்ளிகளும் அமைந்துள்ளது. இங்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகளின் துர்நாற்றத்தால் சில நேரங்களில் காவல்துறையினரும் தங்கள் பணிகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதேபோல் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். காகம்,கழுகு போன்ற பறவை இனங்கள் இரைதேடி இந்த பகுதிக்கு படையெடுத்து வருவதுடன், பறவைகள் அந்த…
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ள நாடுகளில் தங்கி வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சியை தீவிரவாதி அபூபக்கர் சித்திக் பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்வானி ரத யாத்திரையில் பைப் குண்டு வைக்கப்பட்ட சம்பவம் மற்றும் 1995 ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டுவெடிப்பு என பல தீவிரவாத செயல்பாடுகளில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி யூனீஸ் ஆகியோர் 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் வைத்து தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் ஆந்திரா காவல் துறை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டனர். அதன்படி, இருவரும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் இருந்த அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலியை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறை கடந்த ஆறு நாட்களாக விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வந்தது…