Author: Editor TN Talks

தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள வர்ணங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை, தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கு சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறங்கள் இடம்பெற்றுள்ள கொடி உருவாக்கப்பட்டு கடந்த 2023 ம் ஆண்டு வர்த்தக முத்திரைக்கான பதிவையும் சான்றிதழ்களையும் பெறப்பட்டுள்ளதால் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே குறிப்பிட்ட நிறங்களை கொண்ட கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது.. இந்த நிலையில் தவெக கட்சி தலைவர்விஜய் கடந்த 2024 தொடங்கி கட்சியின் கொடி அறிமுகம் செய்தார். அதில் சிகப்பு மஞ்சள் சிகப்பு நிறங்கள் இடம் பெற்றிருந்தது. இதை எதிர்த்தும், தவெக கட்சி கொடியில் உள்ள வர்ணங்களை நீக்க உத்தரவிடக் கோரியும் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனர் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த…

Read More

ஒப்பந்தத்தின்படி குறித்த காலத்தில் படப்பிடிப்பை துவங்காத காரணத்தால் ஏற்பட்ட இழப்புக்கு 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம், இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில், ஒப்பந்தப்படி படப்பிடிப்பை துவங்காததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒப்பந்தப்படி, 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய போதும், இதுவரை படப்பிடிப்பை துவங்காததால் தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார். பின்னர் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நாட்கள் ஒதுக்கிய போதும், படப்பிடிப்பை நடத்தாததால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும், அதனால் படத்திலிருந்து விலகியதாகவும்…

Read More

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா தலைமையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த மனுவில் சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ரிதன்யாவின் தற்கொலை குறித்து பெண்கள் அமைப்புகள் மற்றும் மாதர் சங்கம் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்தார். ரிதன்யாவின் தற்கொலைக்கு தமிழகத்தில் பெண்கள் அமைப்புகள் ,முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப் பிரச்சனையில் தலையிடாமல், குரல் கொடுக்காமல், எங்கே இருந்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார். கஞ்சா, கொகைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது டாஸ்மாக்கில் குடித்து விட்டு கிடக்கிறார்களா? என சீமான் பேசினார். அந்த மனுவில் சீமானின் இது போன்ற பேச்சு பொது வாழ்வில் இருக்கும் ஒட்டு மொத்த பெண்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழகத்தில் பெண் உரிமைக்காக போராடுகிற பெண்கள் அமைப்புகளை ஆபாசமாக பேசுவதுமாகும்.…

Read More

சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குளிர்சாதன வசதி இல்லாமல் காமராஜர் தூங்க மாட்டார் என தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையாகி உள்ளது. 'ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்துள்ளார்'என காமராஜரை அன்று அவதூறாக பேசிய அதே திமுகவினர் '#காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார்' என தற்போது திருச்சி சிவாவை பேச வைத்து இழிவுபடுத்தியுள்ளனர்! காங்கிரஸ்காரர்களே நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்களா? இல்லை அடி மாடாகவே போய் விட்டீர்களா? pic.twitter.com/uheeyvdmdL— I.S.INBADURAI (@IInbadurai) July 16, 2025 அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இன்ப துரை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் ‘ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்துள்ளார்’ என காமராஜரை அன்று அவதூறாக பேசிய அதே திமுகவினர் ‘#காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார்’ என தற்போது திருச்சி சிவாவை பேச…

Read More

முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பினை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த மே 2ம் தேதி சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும் இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தனர், தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரின்…

Read More

தமிழ்நாட்டில் ஜூலை 30ஆம் தேதி முதல் மருத்துவக் கலந்தாய்வு துவங்குக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார். சான்றிதழ்கள் 18ம் தேதி சரி பார்க்கப்படுகிறது என்றும் இறுதி பட்டியல் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாகவும் அவ் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5.25 கோடி மதிப்பீட்டில் நவீன கலையரங்கம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்து ஜூன் மாதம் 6 ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை பெறப்பட்டது. 72 ஆயிரத்திற்கும் மேலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. 20 மாணவர்கள் போலியான தகவல்களை கொடுத்துள்ளதால் அவர்கள் கலந்தாய்வில் இருந்து தகுதி நீக்கம்…

Read More

கோவை மாவட்டம் காரமடை கண்ணார்பாளையம் அர்ச்சனா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(35). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்தை வியாபாரியான இவரது வீட்டில் இரு நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டு காம்புவுண்டிற்குள் சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று வந்துள்ளது. பாம்பு வருவதை கண்ட வளர்ப்பு நாய்கள் பாம்பை வீட்டினுள் வரவிடாமல் தொடர்ந்து தடுத்து தொடர்ந்து குரைத்ததோடு, பாம்பை விடாமல் தாக்கியது. இதனையடுத்து நாய்களை கண்டு பயந்து போன பாம்பு பாய்ந்து அங்கிருந்த காருக்குள் புகுந்தது. பின்,பாம்பினை அருகில் உள்ள இளைஞர் ஒருவர் பிடித்து வெளியே விட்டார். இது குறித்த வீடியோ காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. வீட்டிற்குள் நுழைந்த பாம்பை உள்ளே விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

திடக்கழிவு மேலாண்மையில் கழிவு நீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரையிலான அனைத்து வகை கழிவுகளையும் எவ்வித மாசுபாடும் இன்றி அழிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளதாக மேக் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அத்தப்ப கவுண்டர் மாணிக்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் மிகப்பெரிய சவால் இருப்பதாகவும் தற்போது கழிவுநீர், தொழிற்சாலைகள்,திடக்கழிவுகள், காற்று வெளியேற்றம் அல்லது துர்நாற்றம் வீசும் குப்பைகள் என அனைத்து மாசுபாடுகளுக்கும் தங்களிடம் தீர்வு இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்கான தொழில் நுட்பங்கள் டி ஆர் டி ஓ, சிஎஸ்ஐஆர் சிட்ரா போன்ற முன்னணி இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஆற்றல் திறன் கொண்டவை என்றும் இதற்கு ரசாயனங்கள் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், இதை குறைந்த செலவில் செயல்படுத்த முடியும் என்றும் ஒப்பிட முடியாத சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மதிப்பை இது வழங்குகிறது என்றும் கூறினார். மறைந்த…

Read More

2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக மக்கள் BYE BYE STALIN என்ற கூறுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. திரு. ஸ்டாலின் அவர்களே… நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். “உங்களுடன் ஸ்டாலின்” ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் , ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன், அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா? “சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், இப்படி @AIADMKOfficial ஆட்சியின் அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டுறீங்களே… உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று தானே நான் கேட்டேன்? அதற்கு என்ன பதில் சொல்வீங்க? ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு…

Read More

கடந்த13ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஆளுநர் அவர்கள் இவ்விஷயம் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

Read More