Close Menu
    What's Hot

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட” மு.க.ஸ்டாலின் குறித்து இபிஎஸ் விமர்சனம்..
    Featured

    “நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட” மு.க.ஸ்டாலின் குறித்து இபிஎஸ் விமர்சனம்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2025Updated:July 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13156438 mkstalinvseps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக மக்கள் BYE BYE STALIN என்ற கூறுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

    திரு. ஸ்டாலின் அவர்களே… நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

    “உங்களுடன் ஸ்டாலின்” ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் ,
    ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன்,
    அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா?

    “சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், இப்படி @AIADMKOfficial ஆட்சியின் அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டுறீங்களே… உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று தானே நான் கேட்டேன்? அதற்கு என்ன பதில் சொல்வீங்க?

    ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு துண்டுசீட்டில் 46 பெயர்களை அச்சடித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்?

    இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது?

    பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா?

    -2011 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி ஆகக் கூட வக்கில்லாமல் மண்ணைக் கவ்வி ஓட்டம் பிடித்தது நீங்கள் தானே?

    -அதன் பிறகு வந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி.

    -2012ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தோல்வி.

    -புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட தேறாது என்று போட்டியிடாமல் ஓடியது திமுக.

    -2013ல் ஏற்காடு இடைத்தேர்தல் தோல்வி.

    -2014 நாடாளுமன்றத் தேர்தல். ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாமல் மீண்டும் மண்ணைக் கவ்வியது உங்கள் திமுக.

    -2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பக்கமே திமுக வரவில்லை.

    -ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி.

    -2016 சட்டமன்ற தேர்தல். தமிழ்நாடு மறக்குமா? ஒரு ஓட்டை சைக்கிள தூக்கிக் கொண்டு “எடுத்த நாள் முதல், இந்த நாள் வரை, வண்டியை விடவில்லை” ன்னு ஊர் ஊராக ஒட்டிச் சென்று, தமிழ்நாட்டில் ஒரு டீக்கடை விடாமல் டீ குடித்தும், மக்கள் யாரும் உங்களை கண்டுக்கவே இல்ல. @AIADMKOfficial ஆட்சி, அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. நீங்கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு பேரவையில் இருந்து ஓட்டம் பிடித்தது தான் மிச்சம்!

    -2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்ததே… அதில் கூட மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட படுதோல்வி கட்சி தானே உங்கள் திமுக?

    இப்படி ஒரு தேர்தல் வரலாற்றை வைத்துக்கொண்டு, என்னைப் பற்றி @mkstalin பேசலாமா?

    இதில் சினிமா வசனம் வேறு… “அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட” என்று கூறுகிறார்…

    திரு. ஸ்டாலின் அவர்களே… “நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட” என்பதைத் தான் மக்கள் சொல்லிட்டு இருக்காங்க!

    இந்த திரைப்பட காமெடி ஒன்று வருமே… “யாரோ இவன் மூளைக்குள்ளே போய் இவனை டாக்டர் ன்னு நம்ப வெச்சுட்டாங்க” என்று….

    அது மாதிரி, யாரோ சிலர் ஸ்டாலின் மூளைக்குள்ளே போய், “இவர் நடத்துவது நல்ல ஆட்சி தான்” என்று நம்ப வைத்துவிட்டார்கள் போல…

    Good Bye சொல்லப்போறாங்களாம் மக்கள். மீண்டும் சொல்கிறேன்,
    “திரு. ஸ்டாலின் அவர்களே.. அது கண்ணாடி!”

    அன்பார்ந்த தமிழக மக்களே- நான் எந்தத் தொகுதிக்கு வந்தாலும், நீங்கள் பெருந்திரளாக வந்து, விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக சொல்லும் அந்த ஒரு சொல், திரு. ஸ்டாலின் காதுகளுக்கு நன்றாக கேட்கிறது. நீங்கள் சொல்லும் #ByeByeStalin அவரை கதற விடுகிறது.

    இன்னும் கதற விடுவோமா?
    234 தொகுதிகளிலும் சொல்வோமா?

    BYE BYE STALIN !

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇல்லாத குறளைக் குறிப்பிட்டு விருதா?.. ஆளுநருக்கு செல்வபெருந்தகை கண்டனம்..
    Next Article மாசுபாடு இன்றி கழிவுகளை அழிக்கும் தொழில்நுட்பம்..
    Editor TN Talks

    Related Posts

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    June 21, 2026

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.