Author: Editor TN Talks

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முன்னதாக முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், பதினைந்து நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதுமெனவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், “நீங்களே நினைத்தாலும் நீண்ட நாட்கள் இருக்க முடியாது. ட்ரம்ப் உங்களை வெளியேற்றிவிடுவார்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டனர்.…

Read More

கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலகப் பயன்பாட்டிற்காக வழங்கப்படாது என்பதை எழுத்துப்பூர்வமான அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், “கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் குழாய்கள் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் குவாரிகளே நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்குச் செல்லவும், நீர் பற்றாக்குறைக்கும் காரணம். தற்போது திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏறத்தாழ 30 நீரேற்று நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிகமாக விவசாயம் செய்யப்படும் பகுதி என்பதால், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் தடுப்பணையை கட்டக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் புதிதாக…

Read More

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளரை (DSP) பணியிடை நீக்கம் செய்யுமாறு காவல்துறை இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் உள்ள 5.16 ஹெக்டேர் நிலம் தொடர்பாக ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த செந்தாமரைக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவருக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சனை இருந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், அந்த நிலம் செந்தாமரைக்கே சொந்தமானது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், வேறு சமூகத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் அதே நிலத்துக்கு உரிமை கோரி திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், செந்தாமரை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டு வானூர் காவல் நிலையத்தில் புகார்…

Read More

ஜூலை 13 ஆம் தேதி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், நீண்டகாலமாகப் படக்குழுவுடன் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவரது மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் படக்குழுவினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கம்போலவே கிராஷ் காட்சியைப் படமாக்குவதற்கு முன், தெளிவான திட்டமிடல் மற்றும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகளைத் திட்டமிட்டு, செயல்படுத்துவதில் நிகரற்ற கலைஞராகத் திகழ்ந்த மோகன் ராஜின் வழிகாட்டுதலையும், சண்டை இயக்குனர் திலீப் மாஸ்டரின் விரிவான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் மதித்து, தவறாமல் பின்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் கண்ணீர் அஞ்சலி ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன்…

Read More

சென்னை உயர் நீதிமன்றம், பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவில், ரவி மோகனுக்கு வழங்கப்பட்ட ஆறு கோடி ரூபாய் முன்பணத்தைத் திரும்பப் பெறக் கோரப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி: பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2024 செப்டம்பரில் நடிகர் ரவி மோகனுடன் இரண்டு படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். முதல் படத்திற்கான ஊதியமாகப் பதினைந்து கோடி ரூபாய் பேசப்பட்டு, அதில் ஆறு கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. ஒப்பந்தப்படி தங்கள் நிறுவனப் படங்களில் நடிக்காமல், ரவி மோகன் மற்ற நிறுவனப் படங்களில் நடித்ததாகவும், இதனால் முன்பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டு பணத்தைத் திருப்பித் தருவதாக ரவி மோகன் கூறியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணத்தைத் திரும்பக்…

Read More

தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஒட்டுமொத்தமாக அனுமதி கேட்க முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களை அணுக இந்து மக்கள் கட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் கொள்கைகள், கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஆன்மீகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு அனுமதி வழங்க தமிழக டிஜிபிக்கு மனு அளித்தும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் குருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விழிப்புணர்வு வரும் ஜூலை 20 ம் தேதி திருவள்ளுரில் துவங்கி சென்னை, திருவண்ணாமலை வழியாக ஆக்ஸ்ட் 2 ம் தேதி தர்மபுரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தமிழகம் முழுவதும் பிரச்சாரம்…

Read More

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை சமைக்க வைத்திருந்த உபகரணங்களை சேதப்படுத்தி, குடிநீர் தொட்டியிலும் மலக்கழிவுகளைக் கொட்டியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள், குற்றவாளிகளின் மனதில் மனிதத்தன்மையோ, காவல்துறை மீது பயமோ இல்லாததையே காட்டுகிறது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி முதல், பச்சிளம் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர் தொட்டி வரை சமூக விரோதிகளால் மலம் கலக்கப்படும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து எப்போது வாய் திறப்பார் முதல்வர் மு.க.ஸ்டாலின்? சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? தொடக்கப்பள்ளி சிறுவர் சிறுமியரின் உயிரின் மீதும், சமூக நீதியின் மீதும் சிறிதும் அக்கறை இருந்தால், உடனடியாக தீவிர விசாரணை நடத்தி…

Read More

கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. கரூரில், மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த மணிவாசகம் என்பவர், வாங்கல் வெங்கடேஷ் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளலாம், அதனைத் தடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று, தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது, அனைவருக்கும் நினைவிருக்கும். இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாங்கல் வெங்கடேஷ் என்ற நபர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று தெரியவருகிறது. கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்திலேயே வைத்து வெட்டிக் கொலை செய்ததும் இதே திமுக ஆட்சியில்தான். தற்போது, இன்னொரு…

Read More

திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுக்கோட்டை அடுத்த திருமயம் அருகே உள்ள தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 30 மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உதவி ஆசிரியராக தினேஷ் ராஜா 11 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த பத்தாம் தேதி தலைமை ஆசிரியர் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி…

Read More

சேலம் நெடுஞ்சாலை நகர் அருகே உள்ள கிருஷ்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேலம் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக கூட்டணி ஒற்றுமையாகவும் வலிமையாகவும் உள்ளது 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். திமுக கூட்டணியில் தான் முரண்பாடுகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் அதிமுக கூட்டணி குறித்து கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களது கூட்டணியை அவர்கள் காப்பாற்றினால் போதும். திமுக கூட்டணியில் தான் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் பத்திரிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதனை அவர் சரி செய்தால் போதும். சேலம் மாநகராட்சி குறைபாடுகளை அதிமுக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது திமுக பெண் உறுப்பினர் எழுந்து வந்து தாக்கியுள்ளார். காவல் துறையில்…

Read More