Author: Editor TN Talks
கைதான தமிழக தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கின் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள வீட்டில் இருந்து சூட்கேஸில் வெடிபொருளை ஆந்திர போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல். அபுபக்கர் சித்திக்கை கைது செய்யும் போது அவரது 3 மனைவி போலீசாருடன் தகராறு செய்து தாக்கியதாக அவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அபுபக்கர் சித்திக் வீட்டில் இருந்து சுமார் 15 கிலோ ஐஇடி ரக வெடிபொருள், 18 செல்போன்கள்,லேப் டாப் உள்ளிட்டவற்றை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வெடிபொருள் பெங்களூருவில் 2002 ஆம் ஆண்டு என்கவுண்டரில் கொல்லப்பட்ட இமாம் அலியிடம் இருந்து பெற்றதாக அபுபக்கர் சித்திக் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல். அபுபக்கர் சித்திக் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர். அவருக்கு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதனை கற்றுக் கொடுத்தவர் தான் இந்த மதுரையைச் சேர்ந்த இமாம் அலி.
த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தங்களுடைய இடைக்கால மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி பி.சந்திரசேகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அப்போது, தங்கள் தரப்பில் மேற்கொண்டு வாதங்கள் வைக்க உள்ளதால் இடைக்கால உத்தரவை…
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகரம் முக்கிய தொழில் நகரமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டவுசர் கொள்ளையர்கள் மாநகரில் பல்வேறு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தனித், தனியான வீடுகளில் நோட்டமிட்டு உள்ளே புகுந்து கொள்ளை அடித்து சென்றது தொடர்ந்தது, மேலும் டவுசர் கொள்ளையர்கள், முகத்தை மறைத்துக் கொண்டு, உடல் முழுவதும் எண்ணையை ஊற்றிக் கொண்டு இரவில் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி கோவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் வடமாநில டவுசர் கொள்ளையர்களைப் பிடித்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை 7…
மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் செல்வி இவர் ஜெய் ஹிந்த்புரத்தில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு பழனியை சேர்ந்த ஸ்ரீ நேசா தொண்டு நிறுவனத்தின் அட்மின் சக்திவேல் என்பவர் செல்வி மூதாட்டிக்கு அறிமுகமானார். அவர் மூதாட்டி செல்வியிடம் நேஷா தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமாரை அறிமுகப்படுத்தினார். செந்தில்குமார் பழனியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் பெண்களின் வளர்ச்சிக்காக தொழில் சார்ந்த சேவை செய்வது வருவதாகவும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக பணம் கொடுத்தால் அதற்கு மாதம் மாதம் இரண்டு சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். செந்தில்குமார் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பிய மூதாட்டி செல்வி தன்னிடம் இருந்த தங்க நகைகளை தேசிய வங்கியில் அடமானமாக வைத்தும், வங்கியில் சேமிப்பு கணக்கில் இருந்த பணம் மற்றும் கடனாக பெற்று 27 லட்சத்து 50…
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, ஜூலை 21 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீதான ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேர்தல் ஆணையம், அதிகாரவரம்பு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காவிட்டால், அது அதிமுகவுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,…
பாகிஸ்தானின் 13 தீவிரவாத நிலைகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார். சென்னை ஐஐடியின் 62 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய அறிவுசார் மையத்தை தொடங்கி வைத்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மேடையில் பேசியது, சிந்தூர் தாக்குதலில் நம்முடைய தனித்துவமான தொழில்நுட்பங்கள் சிறப்பாக பணியாற்றியதை நாம் பெருமையாக கொள்ள வேண்டும். பிரமோஸ், ஒருங்கிணைந்த விண்வெளி வான் பாதுகாப்பு அமைப்பு, ரேடார் என மொத்த அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு, நாம் ஒன்பது தீவிரவாத இலக்குகளை சரியாக தாக்கினோம். இதில் எந்த இலக்கும் எல்லையில் இல்லை. தொலைதூரத்தில் இருந்த இலக்கையும் நாம் எதையும் தவறவிடவில்லை. நாம் மிகச் சரியாக துல்லியமாக தாக்குதல் நடத்தினோம். ஐந்து நிமிடத்தில் தொடங்கி…
அந்தமான் நிகோபார் தீவுகளின் இந்திரா பாயிண்ட்டிலிருந்து தென்கிழக்கே.52 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடல் அலையின் சீற்றத்தினால் அமெரிக்காவின் பாய் மரக்கப்பல் ஒன்று நேற்று பழுதடைந்தது. இது குறித்து போர்ட் பிளேரில் உள்ள தேசிய கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. அதன்பேரில், இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் ஐ.சி.ஜி.எஸ்., மீட்பு கப்பலின் உதவியுடன் அமெரிக்க கப்பலையும், அதில் பயணித்த 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பலத்த காற்று மற்றும் தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தபோதும், அந்தக் கப்பலை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர், வெற்றிகரமாக கேம்ப்பெல் பே துறைமுகத்திற்கு இன்று இழுத்து வந்தனர். நடுக்கடலில் சிக்கிய அமெரிக்க கப்பலை 48 மணி நேரத்திற்குள் மீட்ட இந்திய கடலோர பாதுகாப்பு படையினரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
புதுச்சேரியில் சுகாதாரத்துறை இயக்குநர் நியமனம் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமிக்கும் – துணைநிலை ஆளுநருக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், காங்கிரஸ் ஆட்சியின்போது ஆளுநராக இருந்த கிரண்பேடி தன்னிச்சையாக செயல்பட்டபோது நாங்கள் போராடினோம். அதை அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி ரசித்தார். தற்போது முதல்வரான ரங்கசாமிக்கு அதே நிலை வந்துள்ளது. காங்கிரஸில் இருந்து பாஜக சென்ற எட்டப்பர் ஆளுநரை சந்தித்து முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் அவர் ராஜினாமா செய்தால் அடுத்த முதலமைச்சர் நீங்கள் தான் என கூறியவுடன் அந்த எட்டப்பர் துணைநிலை ஆளுநர் காலில் விழுந்து நன்றி தெரிவித்து திரும்பியுள்ளார். சுகாதாரத்துறை இயக்குநர் நியமனம் முதல்வருக்கு ஒரு பிரச்சனை அல்ல ஆறு மதுபானத் தொழிற்சாலைக்கு ரூ. 90 கோடி கைமாறியது. 100 மதுபான கடைகள் திறக்க முடிவு…
தன்னுடைய பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக பல படத்தின் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. அந்த வகையில், நடிகை வனிதாவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா தயாரிப்பில் ’மிஸ்ஸஸ் & மிஸ்டர்’என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வனிதாவிற்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். ரொமான்ஸ் கதைக்களத்ஹில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி பாடலை பயன்படுத்தியுள்ளனர். தனது அனுமதியின்றி இப்பாடலை பயன்படுத்தியிருப்பதாகவும், இப்படத்தில் இருந்து அந்த பாடலை நீக்க உத்தரவிட வேண்ட்ம் எனவும் இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் சட்ட விரோத குவாரிகள் அரசு அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா அல்லது வேறுவிதமாக நடக்கின்றனவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை. ஆனால் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் அரசின் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால் அரசிற்கு பெரும் வருவாய்…