Close Menu
    What's Hot

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    தர்மபுரி : பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..! காலில் விழுந்து அழுத பெற்றோர்..!

    இந்தியா – இந்தோனேசியா பாதுகாப்பு உறவில் புதிய அத்தியாயம்.. பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தவெக கொடியின் யானைச்சின்னத்திற்கு எதிரான வழக்கு.. இடைக்கால தடைகோரிய மனுவை திரும்ப பெற்ற பகுஜன் சமாஸ்..
    அரசியல்

    தவெக கொடியின் யானைச்சின்னத்திற்கு எதிரான வழக்கு.. இடைக்கால தடைகோரிய மனுவை திரும்ப பெற்ற பகுஜன் சமாஸ்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2025Updated:July 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tvk and bsp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தங்களுடைய இடைக்கால மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.

    தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என
    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி பி.சந்திரசேகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

    அப்போது, தங்கள் தரப்பில் மேற்கொண்டு வாதங்கள் வைக்க உள்ளதால் இடைக்கால உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்தார்.

    இந்த இடைக்கால உத்தரவு தங்களுக்கு எதிராக வந்தால் அது பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் புதிதாக தொடங்கிய தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும் என்றும் இந்த உத்தரவை அவர்கள் தவறாக பயன்படுத்த நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தங்களுடைய கட்சி பெயரையும், கட்சி சின்னத்தையும் சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதால் அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஆனால் இடைக்கால உத்தரவை தள்ளி வைக்க முடியாது என நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து, தங்களுடைய இடைக்கால மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் பிரதான வழக்கை தொடர்ந்து நடத்துவதாக ஆனந்தன் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையை மிரட்டும் மங்கி குல்லா கொள்ளையன்..
    Next Article தீவிரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு சிக்கியது:
    Editor TN Talks

    Related Posts

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    July 7, 2026

    தர்மபுரி : பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..! காலில் விழுந்து அழுத பெற்றோர்..!

    July 7, 2026

    இந்தியா – இந்தோனேசியா பாதுகாப்பு உறவில் புதிய அத்தியாயம்.. பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்..!!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    தர்மபுரி : பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..! காலில் விழுந்து அழுத பெற்றோர்..!

    இந்தியா – இந்தோனேசியா பாதுகாப்பு உறவில் புதிய அத்தியாயம்.. பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்..!!

    AI மிகவும் ஆபத்தானது..! தந்தையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்..!

    கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.