Author: Editor TN Talks
கோவையில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர். கோவை பி.என் புதூர் பகுதியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய வேளாண் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. பருத்தி மற்றும் கரும்பு ஆராய்ச்சிகளுக்கு தனித்தனியாக இங்கு மையங்கள் அமைந்து உள்ளன. இங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு நாடு முழுவதும் புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சர்கள் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பருத்தி ஆராய்ச்சி மைய விளை நிலங்களை பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பருத்தி நடவு திட்டத்தையும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிதாக கண்டு அறியப்பட்டு உள்ள டிராக்டர்களையும்…
மீனவர்களின் படகுகளில் கட்சிக் கொடியை அகற்ற முற்பட்டால் அனைத்து கொடியும் எடுக்க வேண்டும். அவர்களுக்கு அதிமுக கொடி பறக்கக்கூடாது.. தவெக கொடி பறக்கக்கூடாது. திமுக கொடி மட்டும் பறக்கலாமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அழகுமுத்துக் கோன் சிலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நிருபர்களிடம் கூறியதாவது :- எதற்கு வெண்ணெய் ஒரு கண்ணிலும் சுண்ணாம்பு ஒரு கண்ணில். எதற்கு பாகுபாடு. சட்டத்தின் முன் அனைவரும் சமம். கொடியை அகற்ற முற்பட்டால் அனைத்து கொடியும் எடுக்க வேண்டும். அவர்களுக்கு அதிமுக கொடி பறக்கக்கூடாது.. தவெக கொடி பறக்கக்கூடாது. திமுக கொடி மட்டும் பறக்கலாமா? இவை அனைத்தையும் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் தமிழர்கள். எந்த நிலையிலும் எப்படிப்பட்ட அடக்கு முறையாக இருந்தாலும் 2026 தேர்தலில் வெற்றி பெற போவது அதிமுக தான். அதிமுக…
திருப்பூர் மவாட்டம் அவினாசியை சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி கவின் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 300 சவரன் நகை, ரூ.70லட்சத்தில் சொகுசு கார், ரூ.5கோடியில் பிரம்மாண்டமாக திருமணம் என கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் நடந்த இரண்டரை மாதங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி விஷமருந்தி ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அழுதபடி, ஆடியோக்கள் சிலவற்றை அனுப்பி வைத்திருந்தார். அதில், தனது மரணத்திற்கு கணவர், மாமியார், மருமகள் ஆகியோர் தான் காரணம் என தெரிவித்திருந்தார். வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார் ரிதன்யா. அவது வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக ஜாமின் கேட்டு கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் திருப்பூர் முதன்மை மாவட்ட…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றிருந்த நிலையில், அடுத்த படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டிய சூழலில் ரஜினிகாந்த் உள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்த ரஜினிகாந்த், கூலி திரைப்படத்தில் முழு மூச்சாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் நாகார்ஜூனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அத்தோடு பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ’சிக்கிட்டு’ என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து இரண்டாவது பாடலின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ள ’மோனிகா’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு…
சென்னை எழும்பூர் விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் சிங்கபெருமாள் கோவில் பணிமலையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப் படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இன்று காலை 10.40, 11, 11.30, மதியம் 12, 1.10 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் சிங்க பெருமாள் கோவில் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் காஞ்சிபுரத்திலிருந்து இன்று காலை சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே நேரத்தில் காட்டாங்கொளத்தூரில் இருந்து சென்னை…
நடிகை வனிதா விஜய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்க கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகை வனிதா விஜய்குமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள மிசஸ் & மிஸ்டர் (MRS & MR) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளைஞராஜா இசையமைத்து மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவ ராத்திரி பாடல் இடம்பெற்றுள்ளது. தான் இசையமைத்த பாடலை தன்னுடைய அனுமதியில்லாமல் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும், பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும் இளைராஜா தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது காப்புரிமை மீறிய செயல் என்றும் உடனடியாக அந்த பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் இளையராஜா மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி இளையராஜா தரப்பில்…
சென்னையில் உள்ள பால் நிறுவனத்தில் ரூ.45கோடி கையாடல் செய்த மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன் பஞ்சலால். 37 வயதான அவர், புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் பிரிட்டானியா நகர் முதல் தெருவில் வசித்து வந்தார். இவர், சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும் போது, இவர் ரூ.45கோடி பணத்தை கையடல் செய்தது உயரதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் இது குறித்து கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், நவீன் பஞ்சலாலை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய போது, பணத்தை கொடுத்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் வசித்த பகுதியில்…
தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 27, 28-ம் தேதிகளில் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வரும் அவர் அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனிடையே பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளதாக தகவல்.வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த…
பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் பாமக தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதன் விவரம் வருமாறு.. பாமக தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் நம்மால் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் இருப்பது பெரும் குறையாகவும், வருத்தமாகவும் இருந்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நாம் ஆற்றிய பணிகள் தான் நமது மனதிற்கு நிறைவைத் தருகின்றன. சமூகநீதி சாதனைகளையும் கடந்து, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது, வேளாண் விளைநிலங்களை தொழில் பயன்பாட்டுக்காக கையகப்படுத்துதைத் தடுத்தது, பல கட்டப் போராட்டங்களை நடத்தி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் கொண்டு வரச் செய்தது, போதைப் பொருள்களின் நடமாட்டம் மற்றும் மதுவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருவது, மின்கட்டண உயர்வுக்கு எதிராகவும், உழவர்களுக்கு கட்டுபடியாகும் கொள்முதல் விலை கிடைப்பதற்காகவும் பாட்டாளி…
கடந்த 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாற்பத்தி ஐந்து மற்றும் 46-வது பத்திகளை நீக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த 2021ல் வேலைக்கு பணம் வாங்கியது தொடர்பான சர்ச்சையை சம்மந்தப்பட்ட நபர்களுடன் பேசி சமரசமாக தீர்த்துவிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 30ம் தேதி அன்று செந்தில் பாலாஜி மீதான குற்ற வழக்கை ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், மேலும் ஊழல் தடுப்பு சட்டத்துன் கீழ் வழக்கு பதிய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார் அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், குறிப்பாக இதுபோன்ற வேலைக்கு பணம் பெற்ற விஷயங்களில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு தனிப்பட்ட…