Author: Editor TN Talks
சினிமாவிலும் குரூப்பிசம் என்ற ஒன்று எப்போதுமே பின்பற்றப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு ஜோடி நடித்த படம் வெற்றி பெற்று விட்டால் தொடர்ந்து அந்த ஜோடிக்கே முன்னுரிமை வழங்கப்படும். ஒரு காமெடி நடிகரின் நடிப்பு ரசிக்கப்பட்டால், அடுத்தடுத்த படங்களில் அவருடன் நடித்த அனைவரும் மீண்டும் குரூப்பாக நடிப்பார்கள். அந்தக் காலத்து விசு படங்களில், அவரது தம்பி, மற்றும் அவரது படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து நடிப்பர். அதே பணி இன்றளவும் தொடர்கிறது. உதாரணத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித் படங்களில் நடித்தவர்கள் தொடர்ந்து அவரது அடுத்தடுத்த படங்களிலும் நிச்சயம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து விடுவர். அப்படியாக நடிப்பவர்களுக்கு பிற இயக்குநர்கள் வாய்ப்பு தருவது சற்றே கடினம் தான். அதனை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகர் கலையரசன். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் கலையரசன். தொடர்ந்து அவரது படங்களில் நடித்து வந்தார். பின் ஹீரோவாகவும், குணச்சித்ர நடிகராகவும் தற்போது வரை…
பீகாரில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் கமிஷன் அங்கு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. எப்போதும் தேர்தல் கமிஷன் ஆண்டுக்கு 4 முறை சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும். ஆனால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில், வாக்காளர் பட்டியல் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும் ஒரு விரிவான நடவடிக்கை. இந்த நடவடிக்கையில், சுமார் 98,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 2003-ம் ஆண்டிற்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் என 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இவை இல்லாத பட்சத்தில் அவர்களது பெற்றோரின் குடியிருப்பு ஆவணங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனையும் வழங்காவிட்டால் வாக்காளர் பெயரை நீக்குவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர் முடிவு செய்யலாம் என கூறப்பட்டது. இந்த சிறப்பு திருத்த முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்…
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த தொழிலதிபரின் மகள் ரிதன்யா வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்டியிருந்தது. 300 சவரன் நகை, ரூ.70லட்சம் மதிப்பிலான கார், ரூ.5கோடி செலவில் பிரம்மாண்டமாக ரிதன்யாவுக்கு திருமணம் நடந்தது. இரண்டரை மாதங்களில் அப்பெண்ணின் கணவர் வீட்டில் 200 சவரன் நகைக்காக வரதட்சனை கொடுமை நடந்துள்ளது. அத்தோடு உடல் ரீதியாகவும் அவருக்கு தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ஆடியோக்கள் மூலம் தான் அடைந்த வேதனையை கண்ணீரோடு அனுப்பியிருந்தார் ரிதன்யா. அதனடிப்படையில் அவரது கணவர், மாமியார், மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது மறைவுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, ”ரிதன்யாவுக்கு நடந்தது ஒரு சோகமான விஷயம். திருமண வாழ்க்கை சரியில்லை என்றால், வாழ்க்கை அதோடு…
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் முழு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த நிலையில், மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, தேவநாத யாதவ் 680 கோடி ரூபாய் முதலீட்டாளர்களிடம் ஏமாற்றி உள்ளதாகவும், சென்னை அண்னா சாலை, மயிலாப்பூர்,…
32 ஆண்டுகளாக வைகோவுடன் அரசியல் செய்த தன்னை, 3 முறை வைகோவின் உயிரைக் காப்பாற்றிய என்னை, துரோகி என்று வைகோ கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என மல்லை சத்யா வேதனையுடன் கூறியுள்ளார். மதிமுகவில் வைகோவுக்கு அடுத்தபடியாக நாடறிந்த முகமாக இருந்தவர் மல்லை சத்யா. ஆனால் வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முக்கிய பொறுப்புக்கு வந்ததில் இருந்து மல்லை சத்யா ஓரம்கட்டப்படுவதாக பேசப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரை வைகோவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து கட்சியை விட்டு விலகுவதாக மல்லை சத்யா கூறினார். பின்னர் இருதரப்பையும் வைகோ சமாதானம் செய்து வைத்தார். ஆனால் இப்போது வைகோவே, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று பேசியிருந்தார். இதற்கு மல்லை சத்யா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், துரை வைகோ அவர்களுக்கு எனக்கும் எந்த கருத்து முரண்பாடும்…
ஒரு லட்சம் ரூபாய் பணத்துக்காக தனியார் நிறுவன காவலாளியை கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய வழக்கில் கடலூரைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்த வெங்கட்ராவ் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா பாசிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன். இதை உண்மை என நம்பிய வெங்கட்ராவ், தனது சகோதரியின் நகையை வங்கியில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் விடுதியில் தங்கியிருந்த வேல்முருகனை சந்திக்கச் சென்றார். அங்கு பணத்தை பெற்றுக் கொண்ட வேல்முருகன், வெங்கட்ராவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் போட்டு எடுத்து சென்று, பாசிக்குளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள கள்ளங்குத்து வெள்ளாற்றங்கரை…
மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்துவரியை நிர்ணயம் செய்வதில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. மதுரை மாநகராட்சியின் 2, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மண்டலத் தலைவர்களான சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா, பாண்டி செல்வி, சுவிதா மற்றும் நிலைக்குழு தலைவர்கள் மூவேந்திரன் (நகர அமைப்பு), விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகியோர் கட்டாயப்படுத்தி பதவி விலக வைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயரின் தனி உதவியாளரும் மாற்றப்பட்டுள்ளார். இந்த முறைகேடு தொடரபாக ஒய்வு பெற்ற உதவி…
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த டெய்லர் ராஜா கர்நாடக மாநிலம் விஜய்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்தவரை தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இவர், சிறைத் துறை அதிகாரிகள் இருவர் மற்றும் ஒரு பெண் ஆகிய மூவரை கொலை செய்த வழக்குகளிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. டெய்லர் ராஜா கைது செய்யப்பட்ட பின்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், போலீசார் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை தொடர் குண்டுவெடிப்பு கைதி கைது செய்யப்பட்டு உள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளிக்கு தீர்ப்பாய உத்தரவின் படி இழப்பீட்டை வழங்காத தனியார் நிறுவன மேலாண் இயக்குனரை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குத்துாஸ் மொகைதீன், கடந்த 2007ம் ஆண்டு மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள ஏ.வி., பாலத்தின் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ‘ஜீப்’, குத்தூஸ் மொகைதீன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்தில் தனக்கு ஏற்பட்ட படுகாயத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, மதுரை மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், கடந்த 2009ல் குத்துாஸ் மொகைதீன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி,” விபத்தில் மனுதாரருக்கு 60% அளவுக்கு ஊனம் ஏற்பட்டுள்ளது. கூலி தொழிலாளியான அவர் வருவாயை…
இந்துசமய அறநிலையத்துறையின் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் கட்டக்கூடாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான்” என்ற வடிவேலு காமெடி போல, BJP கட்சியினரே ஆச்சரியப்படும் அளவுக்கு “ஃபீல் பண்ணிக் கூவும்” மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்! கேள்விக்குறிபோல் வளைந்த முதுகா? உரிமைகளுக்காகத் தலைநிமிர்ந்து போராடும் தன்மானமா? மனிதரை மனிதர் தாழ்த்தி,… pic.twitter.com/68qC7r980A — M.K.Stalin (@mkstalin) July 10, 2025 இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. “கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான்” என்ற வடிவேலு காமெடி போல, BJP கட்சியினரே ஆச்சரியப்படும் அளவுக்கு “ஃபீல் பண்ணிக் கூவும்” மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்! கேள்விக்குறிபோல் வளைந்த முதுகா? உரிமைகளுக்காகத் தலைநிமிர்ந்து போராடும் தன்மானமா? மனிதரை மனிதர் தாழ்த்தி, பிற்போக்குத்தனங்களை நோக்கித் தள்ளும் காவிக் கொள்கையா? மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என…