Close Menu
    What's Hot

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    அடுத்த விக்கெட் அவுட்..!! காலியாகும் கூடாரம்.. அதிமுகவில் இருந்து பொன் ஜெயசீலன் விலகல்..!!

    குடும்பத்துடன் லண்டன் புறப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்… சி.பி.ஐ. விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்…
    தமிழ்நாடு

    மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்… சி.பி.ஐ. விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mdu corporation Scam 08 07 25
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்துவரியை நிர்ணயம் செய்வதில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்..

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

    மதுரை மாநகராட்சியின் 2, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மண்டலத் தலைவர்களான சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா, பாண்டி செல்வி, சுவிதா மற்றும் நிலைக்குழு தலைவர்கள் மூவேந்திரன் (நகர அமைப்பு), விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகியோர் கட்டாயப்படுத்தி பதவி விலக வைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயரின் தனி உதவியாளரும் மாற்றப்பட்டுள்ளார்.

    இந்த முறைகேடு தொடரபாக ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்க ராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் உள்ளிட்ட 8 பேர் மதுரை மாநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த ஊழலில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக ஊழலை மூடி மறைப்பதில் தான் திமுக அரசு ஆர்வம் காட்டுகிறது.

    திமுக ஆட்சிக்கு பிறகு 175% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அப்பாவி மக்களிடம் சுரண்டி எடுக்கும் திமுக அரசு, பணக்காரர்களிடம் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் கொண்டு சொத்துவரியை குறைத்து நிர்ணயிப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பது மட்டுமின்றி மன்னிக்க முடியாத குற்றமும் ஆகும்.

    மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழலை திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகரக் காவல்துறை விசாரித்தால் குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்; மதுரை மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா கைது…
    Next Article ரூ.1 லட்சத்திற்காக 9 துண்டுகளாக வெட்டப்பட்ட நபர்…
    Editor TN Talks

    Related Posts

    அடுத்த விக்கெட் அவுட்..!! காலியாகும் கூடாரம்.. அதிமுகவில் இருந்து பொன் ஜெயசீலன் விலகல்..!!

    July 4, 2026

    குடும்பத்துடன் லண்டன் புறப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்!.

    July 4, 2026

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    அடுத்த விக்கெட் அவுட்..!! காலியாகும் கூடாரம்.. அதிமுகவில் இருந்து பொன் ஜெயசீலன் விலகல்..!!

    குடும்பத்துடன் லண்டன் புறப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்!.

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.