Author: Editor TN Talks
பா.ம.க.வில் முன்பு செயல்பட்டு வந்த தலைமை நிர்வாகக் குழுவை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலைத்துள்ளார். இந்தக் குழுவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் ஆகியோர் முக்கிய நிர்வாகிகளாக இருந்தனர். ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளே இந்தக் கலைப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. புதிய தலைமை நிர்வாகக் குழு மற்றும் முக்கிய முடிவுகள் 21 புதிய தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார். இவர்களில் பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பு.தா. அருள்மொழி, கரூர் பாஸ்கரன், ஏ.கே. மூர்த்தி, அருள் எம்.எல்.ஏ., ஸ்டாலின் ஆகியோர் அடங்குவர். இந்த புதிய நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:…
கர்நாடகாவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஆசிரியை காதலித்த இளைஞர், ஆசிரியை காதலை ஏற்றுக் கொள்ளாததால் கத்தியால் குத்தி தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், எலிகெரேயை சேர்ந்தவர் பூர்ணிமா. திருமணமான இவர், கணவரை பிரிந்து மைசூரில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அதேப் போல் கியதனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அபிஷேக் என்பவர், பூர்ணிமாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துள்ளார். அன்று முதல் பூர்ணிமாவை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். அதற்கு பூர்ணிமா மறுப்பு தெரிவித்தும், பின்தொடர்ந்து வந்த அபிஷேக், தனது காதலை ஏற்றுக் கொள்ளும் படி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் தன்னை விட வயது குறைவு என்பதால், அபிஷேக்கின் காதலை ஏற்க முடியாது என பூர்ணிமா தொடர்ந்து கூறி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4-ம் தேதி பூர்ணிமாவை சந்தித்த அபிஷேக், பூர்ணிமாவை, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் பூங்காவிற்கு அழைத்து சென்று,…
நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ்.4 என்ஜின் ஆகியவை தயாரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகள் விண்வெளிக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்புவதற்காக, எஸ்.எம்.எஸ்.டி.எம். (SMSTM) என்ற மாடலிங் என்ஜின் பல்வேறு கட்டங்களாகச் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் நான்காவது கட்டமாக 130 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. இந்தச் சோதனைக்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் இந்தச் சோதனையை நேரில் பார்வையிட்டார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் (நாராயணன் அல்ல, இஸ்ரோ தலைவர் சோம்நாத்) மற்றும் திருவனந்தபுரம் திரவ இயக்க மைய இயக்குனர் மோகன் ஆகியோர் காணொலிக்காட்சி வாயிலாக இந்தச் சோதனையைக் கண்டுகளித்தனர்.
Noரயில் பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறையில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றம் கொண்டு வந்துள்ளது. இனிமேல், ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிடப்படும். தெற்கு ரயில்வேயில் இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. முன்னதாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. இதனால், கடைசி நேரத்தில் முன்பதிவு உறுதியாகாத பயணிகள் தங்கள் பயணத் திட்டம் குறித்து மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனப் பயணிகள் தரப்பிலிருந்து ரயில்வே துறைக்குத் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பயணிகளின் கோரிக்கைகளை பரிசீலித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த மாதம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில், முன்பதிவு அட்டவணை வெளியிடும் நேரத்தை 4 மணி…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் ஜனாதிபதி லுலா ட சில்வா அழைப்பின்பேரில் பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு செல்கிறார். இது, அவர் மேற்கொண்டுள்ள ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்த சுற்றுப்பயணத்தில் கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் அடங்கும். தற்போதுவரை, பிரதமர் மோடி கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்தந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளின்போது, அவருக்கு இரு நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது இந்தியாவின் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ பயணங்களை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அடுத்ததாக அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அர்ஜென்டினாவின் எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில், அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அர்ஜென்டினாவில் தனது…
பட்டுக்கோட்டை பாபநாசம் மணப்பாறை ஆகிய தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இன்று ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் தேர்தல் பணிகளை திமுக முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார். தேர்தல் பணிகள் வெற்றி பெற்ற தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இந்த முறை வாக்கு பெறுவது தோல்வி அடைந்த தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெறுவது மேலும் குறைவான வாக்கு எண்ணிக்கையில் வெற்றியடைந்த தொகுதிகளில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்கு பெறுவது உள்ளிட்டவை தொடர்பாக தொடர்ந்து நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் சட்டமன்ற தொகுதிகளில் நிர்வாகிகளுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் களைந்து தேர்தலில் ஒற்றுமையுடன்…
‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான அதிகாரபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். மொத்தம் 14 நாட்கள், 7 மாவட்டங்கள், 34 சட்டமன்ற தொகுதிகள் என நீள்கிறது இந்த முதல்கட்ட சுற்றுப்பயணம். இதையொட்டி ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதற்காக வருகை தந்த இபிஎஸ்-ஐ அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கட்சி அலுவலகத்திற்குள் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர் ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை வெளியிடப்பட்டது. இதையொட்டி பிரச்சார பாடல் ஒன்றும்…
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த மாரிசெல்வம் (47) என்பவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் கடந்த 2024ம் வருடம் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீதிபதி சுதாகர் மாரிசெல்வத்தை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
உளுந்தூர்பேட்டையில் தன்னை திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த மே மாதம் 2-ம் தேதி சென்னை காட்டாங்குளத்துரில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து காரில் சென்ற போது, மற்றொரு கார் வேகமாக வந்து மோதியதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நம்பர் பிளேட் இல்லதா காரில் வந்த குல்லா அணிந்த இருவர் என்னை கொலை செய்ய முயற்சித்ததாக” கூறினார். இந்த விவகாரம் முதலமைச்சர் கவனத்துக்கு சென்று, டிஜிபிக்கு உத்தரவிட, உடனே இந்த சம்பவத்தை விசாரிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு டி.ஜி.பி உத்தரவிட, உடனே விசாரணையில் இறங்கிய போலீசார், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனத்தின் கார்தான் அதிவேகமாக சென்று விபத்தினை ஏறடுத்தியதாக தெரிய வந்தது. இரு மதங்களுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பிரசாத் கிஷோர் குறிப்பிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கட்சிகள் தேர்தல் வேலையை தீவிரப்படுத்தி இவருகின்றனர். ஜன் சுராஜ் கட்சியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் சட்ட மன்ற தேர்தலுக்கான வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளார். தவெகவின் ஆலோசகராக தொடர்வது குறித்து நவம்பர் 30க்கு பிறகு முடிவு செய்யப்படும் எனவும் பிரசாத் கிஷோர் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவரின் simple sense analytics நிறுவனத்தை சேர்ந்த 30 ஊழியர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கள பணிகளுக்கு பணியாற்றி வந்த நிலையில் சமீபத்தில் அந்த பணியில் இருந்து வெளியேறி இருந்தனர். ஆதவ் அர்ஜுனின் ’வாய்ஸ் ஆப் கமான்’ மற்றும் ஜான் ஆரோக்கிய ராஜின் தனியார்…