Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    ஆம்புலன்ஸை திருடி லாரி மீது மோதி விபத்து!. போதை ஆசாமியால் பரபரப்பு!

    சொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»2-வது முறையாக ஆஜராகாத மதுரை ஆதீனம்… வயது முதிவால் ஆஜராகவில்லை என விளக்கம்…
    தமிழ்நாடு

    2-வது முறையாக ஆஜராகாத மதுரை ஆதீனம்… வயது முதிவால் ஆஜராகவில்லை என விளக்கம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 5, 2025Updated:July 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உளுந்தூர்பேட்டையில் தன்னை திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த மே மாதம் 2-ம் தேதி சென்னை காட்டாங்குளத்துரில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து காரில் சென்ற போது, மற்றொரு கார் வேகமாக வந்து மோதியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நம்பர் பிளேட் இல்லதா காரில் வந்த குல்லா அணிந்த இருவர் என்னை கொலை செய்ய முயற்சித்ததாக” கூறினார். இந்த விவகாரம் முதலமைச்சர் கவனத்துக்கு சென்று, டிஜிபிக்கு உத்தரவிட, உடனே இந்த சம்பவத்தை விசாரிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு டி.ஜி.பி உத்தரவிட, உடனே விசாரணையில் இறங்கிய போலீசார், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனத்தின் கார்தான் அதிவேகமாக சென்று விபத்தினை ஏறடுத்தியதாக தெரிய வந்தது.

    இரு மதங்களுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த மதுரை ஆதீனம் மீது சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம் என்பவர் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் மதுரை ஆதீனம் விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர்.

    ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், விசாரணைக்கு காணொலியில் ஆஜராவதாக மதுரை ஆதீனம் தரப்பு வைத்த கோரிக்கையை காவல்துறை ஏற்க மறுத்துள்ளநிலையில், நேரில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் (இன்று) ஜூலை 5-ந் தேதி ஆதீனம் ஆஜராக 2-வது முறை சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் அவருக்கு பதிலாக மடத்தின் செயலாளர் செல்வகுமார் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். மேலும் மதுரை ஆதீனத்துக்கு வயது முதிர்வு காரணமாக காவல் நிலையம் வரமுடியவில்லை எனவும் ஆஜர் ஆக சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleத.வெ.க ஆலோசகர் பொறுப்பில் இருந்து பிரசாத் கிஷோர் விலகல்… தற்காலிகம் தான் என பேட்டி…
    Next Article சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. 20 ஆண்டுகள் சிறை…
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    July 11, 2026

    ஆம்புலன்ஸை திருடி லாரி மீது மோதி விபத்து!. போதை ஆசாமியால் பரபரப்பு!

    July 11, 2026

    சொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    ஆம்புலன்ஸை திருடி லாரி மீது மோதி விபத்து!. போதை ஆசாமியால் பரபரப்பு!

    சொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!

    தேசியக் கட்சிகள் செய்தால் தவறில்லை.. மாநிலக் கட்சிகள் செய்தால் தவறா?. திருமாவளவன் கேள்வி!

    விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.