Close Menu
    What's Hot

    என்னை கொலை செய்ய சதியா?. என் மீது கை வைத்தால் ஈரானையே அழித்துவிடுவேன்!. டிரம்ப் வார்னிங்

    முட்டை விலை கிடு கிடு உயர்வு

    மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
    Featured

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    Editor web3By Editor web3July 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    கரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சுமார் 3,085 ஏக்கர் நிலங்கள், ரூ. 25,000 கோடி மதிப்பீட்டில், முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு அவசர அவசரமாகப் பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளதாக அவர் பகீர் கிளப்பினார். “கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலங்களை அழிக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறதா? இந்த அவசரத்தின் பின்னணி என்ன?” என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தை பாஜக தீவிரமாகக் கண்காணிப்பதாகவும், தவறு நடந்திருப்பின் நிலத்தை மீட்கப் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் எச்சரித்தார்.

     இந்து கோவில்களின் நிலத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக இதை செய்து இருக்கின்றாரா? என கேள்வி எழுப்பிய அவர், இதற்கு உறுதுணையாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் இருக்கின்றாரா? எதற்காக இந்த அவசரம் ? எனவும் கேள்வி எழுப்பினார்.

    பாஜக சார்பில் இதை வன்மையாக கண்டிப்பதாகவும் , இதை முழுமையாக ஆய்வு செய்த பின் இந்து அறநிலையத்துறை இடங்களை மீட்க பா.ஜ.க நிச்சயமாக மிகப்பெரிய போராட்டம் நடத்தும் எனவும் தெரிவித்தார். முதல்வர் திட்டமிட்டு தான் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். ஒரே நாளில் 3085 ஏக்கர் நிலத்தை கொடுப்பது எந்த அடிப்படையில்? இதுவும் ஒரு விதத்தில் லஞ்சம் தான் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், கரூர் நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கிய விவகாரத்தையும் விமர்சித்தார். “இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பல ஆண்டுகளாகத் தேர்வு எழுதிவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் தகுதியுள்ளவர்கள் இருக்கும்போது, முன்னுரிமை அடிப்படையில் வழங்காமல், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்குவது ஒருவித லஞ்சம்தான்” என்று அவர் குறிப்பிட்டார்.

    மேலும், முதல்வரின் உரையை அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்பு செய்தது மற்றும் விஜய் வருகையையொட்டிப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது போன்றவற்றைக் கடுமையாகச் சாடிய நயினார் நாகேந்திரன், இது மாணவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் செயல் என்று குறிப்பிட்டார். “எம்.ஜி.ஆர். காலத்தில் மக்கள் நலன் சார்ந்தே நடவடிக்கைகள் இருந்தன. ஆனால், தற்போது நடிகராக இருந்து முதல்வரான விஜய், சமூகத்திற்குச் சொந்தமான சொத்துக்களைக் கையகப்படுத்துவது வருத்தமளிக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றன. 2029 தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் பாஜகவை எதிர்க்கத் தயாராகின்றன. இதன் மூலம் பாஜகவை அனைவரும் கண்டு அஞ்சுவது உறுதியாகிறது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    085 acres of land 3 bribery cm vijay koil land Nainar Nagendran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆம்புலன்ஸை திருடி லாரி மீது மோதி விபத்து!. போதை ஆசாமியால் பரபரப்பு!
    Next Article இனி அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கே முன்னுரிமை; அதன்பிறகே தேசிய கீதம்!. உள்துறை அமைச்சகம் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    என்னை கொலை செய்ய சதியா?. என் மீது கை வைத்தால் ஈரானையே அழித்துவிடுவேன்!. டிரம்ப் வார்னிங்

    July 11, 2026

    முட்டை விலை கிடு கிடு உயர்வு

    July 11, 2026

    மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    என்னை கொலை செய்ய சதியா?. என் மீது கை வைத்தால் ஈரானையே அழித்துவிடுவேன்!. டிரம்ப் வார்னிங்

    முட்டை விலை கிடு கிடு உயர்வு

    மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

    இனி அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கே முன்னுரிமை; அதன்பிறகே தேசிய கீதம்!. உள்துறை அமைச்சகம் அதிரடி!

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.