Author: Editor TN Talks
அத்திக்கடவு வனப்பகுதியில் பழங்குடியின இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மான் என நினைத்து மதுபோதையில் இளைஞரை சுட்டு விட்டதாக கைது செய்யப்பட்ட உறவினர்கள் பரபரப்பு வாக்குமூலம். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் மோட்டார் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அன்சூர்,குண்டூர்,அத்திக்கடவு,சொரண்டி,மானாறு,பில்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன.இங்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திக்கடவு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு சொரண்டி பகுதியை சேர்ந்த சஞ்ஜித்(23), அன்சூர் பகுதியை சேர்ந்த தாய்மாமா முருகேசன்(37),அன்சூர் பகுதியை சேர்ந்த தாத்தா பாப்பையன்(50) உள்ளிட்ட இருவருடன் சேர்ந்து முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர். மூவரும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதில் இளைஞர் சஞ்ஜித் நேற்று முன்தினம் காலை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் அவரது உடலை உறவினர்கள் கிராமத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான்,காரமடை…
கோவை அரச மரத்தின் கிளையை வெட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, மரத்தை முழுமையாக வெட்டி சாய்க்கப்பட்டது. அதனால் மரம் வெட்டியவருக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கோவை, தெற்கு வட்டம், சபரிபாளையம் கிராமம் சண்முகா வீதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் தனியார் மருத்துவமனைக்கு முன்பு சாலை ஓரத்தில் இரண்டு அடி சுற்றளவு 10 அடி உயரத்தில் 12 வயதுடைய அரச மரம் இருப்பதாகவும், அதன் கிளை காய்ந்து மருத்துவமனை மீது சாய்ந்துவிடும் அபாயம் உள்ளதால் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து உள்ளது. மரக் கிளையை வெட்டுவதற்கு அனுமதி கோரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். சபரிபாளையம் வி.ஏ.ஓ மற்றும் ஆர்.ஐ ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ஆபத்தாக உள்ள கிளையை மட்டும் வெட்டி அகற்ற அனுமதி வழங்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தனர். உரிய வழிமுறையை பின்பற்றி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5 மணி…
கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சித்தாபுதூர் பள்ளியில் நடைபெறும் இதற்கான போக்குவரத்து வசதிகள் உணவு வசதிகள் அனைத்தும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார், தேசிய மருத்துவர்கள் தினமான இன்றே நாம் இந்த இலவச நீட் தேர்வு பயிற்சி…
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைவழக்கில், நிலைமையை சரியாக கையாளாத காரணத்தால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்தனர். பின்னர் மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் அடித்து துன்புறுத்தியதில் அஜித் குமார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பந்தபட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 நாள் நீதிமன்ற காவலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் காவலாளி பலியான சம்பவத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், இந்த மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பு…
திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் வருமாறு.. திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை! ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும். இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் “வலிப்பு” என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின்…
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே தனியார் விடுதியில் தங்கி 9 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி, விடுதி வளாகத்திற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையான்குடி தாலுகா ஒச்சந்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் இவரது மூத்த மகள் பிருந்தா. 14 வயதான இவர் ஆண்டிச்சியூரணியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதியில் தங்கி அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் சூசையப்பர்பட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்றுவந்துள்ளார். இன்று அதிகாலை விடுதியில் தங்கி பயின்று வரும் சக மாணவிகள் வந்து பார்த்தபோது மாணவி பிருந்தா விடுதி வளாகத்திற்குள்ளேயே மரத்தில் தூக்கிட்டபடி சடமலாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர்கள் உடனடியாக காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடம் சென்ற காவல்துறையினர் மாணவி பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…
கடந்த காலங்களில் நடந்த தவறுகளை பேசி கோண்டு இருக்காமல், தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒன்றிய அரசு உடனடி தீர்வு கான வேண்டும் என மதிமுக துணை பொதுச்செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெறும் ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் துரை வைகோ விமான மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”எங்களைப் பொறுத்த வரை எங்களுடைய இயக்கம் குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும் அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை என தெரிவித்தார். ஆனால் இறுதி முடிவு எடுப்பது இயக்கத்தின் தலைமை என்றும் தெரிவித்தவர். அதேசமயம் நாங்கள் இத்தனை சீட்டை எதிர்பார்க்கிறோம் டிமாண்ட் ஆக வைக்கிறோம் என்ற தவறான சித்தரிப்பு இருந்ததாகவும், ஆனால் இறுதி முடிவு கூட்டணி உடன் பேசி தலைமை தான் முடிவு எடுக்கும் என தெரிவித்தார். அனைத்து…
தமிழ்நாட்டில் 2.25 கோடி ரேசன் அட்டைகள் உள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதில் மூத்த குடிமக்கள் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பித்து தங்களின் சார்பில் வேறு ஒருவரை வைத்து ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். தற்போது ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டம் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மாவத்திற்கு 10 நியாயவிலை கடைகள் என்ற அடிப்படையில் 100 நியாயவிலை கடைகளில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்…
திருப்பதி திருச்சானூரை சேர்ந்த திலீப், அவருடைய சித்தப்பா மகன் வினய் ஆகிய இரண்டு பேரும் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று(01.07.2025) மாலை மது அருந்த முடிவு செய்த அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான கார் ஒன்றை பாராக மாற்றி மது அருந்த திட்டமிட்டனர். இதற்காக அந்த காரை திருச்சானூரில் உள்ள ரங்கநாதா வீதியில் ஓரமான இடத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு பேரும் மது அருந்தும் போது தங்களை யாரும் பார்க்க கூடாது என்பதற்காக முதலில் அந்த கார் மீது தார்ப்பாய் போட்டு மூடிவிட்டனர். அதனை தொடர்ந்து காருக்குள் மது பாட்டில்களுடன் சென்ற அவர்கள் காரின் ஏசியை ஆன் செய்து குளுகுளு சூழலில் உட்கார்ந்து மது குடித்தனர். அதன் பின் அப்படியே அவர்கள் காருக்குள் தூங்கிவிட்டனர். காரின் பெட்ரோல் தீர்ந்து ஏசி நின்று போய்விட்டது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு போதையிலேயே அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இரண்டு…
ஆந்திராவில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் நேற்று(30.06.2025) மனுநீதி நாள் நடைபெற்றது. அப்போது குண்டூர் மாவட்ட ஆட்சியரை கையில் மனு, தோளில் புத்தகப்பை ஆகியவற்றுடன் சென்று நேரில் சந்தித்தான் எட்டு வயது சிறுவன் யஷ்வந்த். சிறுவனுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி பரிவுடன் அவளிடம் கேட்டறிந்தார். அப்போது குண்டூர் அரசு மருத்துவமனை அருகே என்னுடைய தாயார் தள்ளுவண்டி கடை வைத்து டிபன் வியாபாரம் செய்து வந்தார். ஆனால் நகராட்சி அதிகாரிகள் அந்த கடையை மூடிவிட்டனர். இதனால் பிழைக்கு வழியில்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே என்னுடைய தாயார் மீண்டும் அங்கு கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவன் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டான். அவனுடைய நிலையை அறிந்த ஆட்சியர் இது பற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் தகுந்த நடவடிக்கை…