Close Menu
    What's Hot

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»திருப்பதி: தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு… காரில் பெட்ரோல் தீர்ந்ததால் நேர்ந்த சோகம்…
    இந்தியா

    திருப்பதி: தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு… காரில் பெட்ரோல் தீர்ந்ததால் நேர்ந்த சோகம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பதி திருச்சானூரை சேர்ந்த திலீப், அவருடைய சித்தப்பா மகன் வினய் ஆகிய இரண்டு பேரும் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று(01.07.2025) மாலை மது அருந்த முடிவு செய்த அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான கார் ஒன்றை பாராக மாற்றி மது அருந்த திட்டமிட்டனர். இதற்காக அந்த காரை திருச்சானூரில் உள்ள ரங்கநாதா வீதியில் ஓரமான இடத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு பேரும் மது அருந்தும் போது தங்களை யாரும் பார்க்க கூடாது என்பதற்காக முதலில் அந்த கார் மீது தார்ப்பாய் போட்டு மூடிவிட்டனர்.

    அதனை தொடர்ந்து காருக்குள் மது பாட்டில்களுடன் சென்ற அவர்கள் காரின் ஏசியை ஆன் செய்து குளுகுளு சூழலில் உட்கார்ந்து மது குடித்தனர். அதன் பின் அப்படியே அவர்கள் காருக்குள் தூங்கிவிட்டனர். காரின் பெட்ரோல் தீர்ந்து ஏசி நின்று போய்விட்டது.

    இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு போதையிலேயே அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இரண்டு பேரையும் காணாமல் தேடிய குடும்பத்தார் போன் செய்து பார்த்தபோது காரில் இருந்து ரிங்டோன் கேட்டது. கார் மீது போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயை விலக்கி பார்த்தபோது அவர்கள் காருக்குள் படுத்திருப்பது போல் தோன்றியது. ஆனால் அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

    எனவே உடனடியாக கார் கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த திருச்சானூர் போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிகாரிகள் கொடுத்த தொல்லை… மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட 8 வயது சிறுவன்…
    Next Article நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்… சோதனை முறையில் தொடக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    ‘பூர்வோதய’ பாதையில் வடகிழக்கின் வளர்ச்சி..!! ஒடிசாவில் பிரதமர் மோடி பெருமிதம்..!!

    June 20, 2026

    கட்டண தகராறு!. சுங்கச்சாவடி ஊழியரை 12 கி.மீ இழுத்து சென்ற கார்!. மே.வங்கத்தில் அதிர்ச்சி!

    June 20, 2026

    பிரதமர் மோடியின் 12 ஆண்டு சாதனை..!! பிரகதி பாத யாத்திரையில் புதுவை துணைநிலை ஆளுநர் பயணம்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.