Author: Editor TN Talks

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை கைது செய்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தங்களது கைது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றுவிட்டு கரை திரும்பியுள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 8 மீனவர்களையும் படகோடு சேர்த்து கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசரணைக்காக அழைத்து சென்றனர்.

Read More

இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 2025 மார்ச் மாத இறுதியில் 73,630 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2023-24 நிதியாண்டு இறுதியில் 66,880 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நியக் கடன், அதே காலகட்டத்தில் 10 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்: மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம்: வெளிநாட்டுக் கடன் விகிதம் 2024-25 நிதியாண்டு இறுதியில் 19.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் 18.5 சதவீதமாக இருந்தது. மதிப்பீட்டு விளைவு: அமெரிக்க டாலரின் மதிப்பு ரூபாய் மற்றும் பிற நாணயங்களுக்கு எதிராக உயர்ந்ததால் ஏற்பட்ட ‘மதிப்பீட்டு விளைவு’ 530 கோடி டாலராகும். இந்த விளைவை நீக்கினால், வெளிநாட்டுக் கடன் 7,290 கோடி டாலராக உயர்ந்திருக்கும். கடன்களின் பிரிவுகள்: நிதி சாரா நிறுவனங்களின் கடன்கள்: 26,170 கோடி டாலர் மத்திய…

Read More

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.15 அடியாக உயர்ந்துள்ள நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட உள்ளது. நீர் இருப்பு 6155 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3720 கன அடியாகவும் உள்ள நிலையில், தமிழக பகுதிக்கு விநாடிக்கு 2100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 12 மணிக்கு, முல்லைப் பெரியாறு அணையின் 13 மதகுகள் வழியாக கேரளாவுக்கு விநாடிக்கு 250 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 1500 கன அடியாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவின் பெரியாற்றின் கரையோரம் அமைந்துள்ள வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு, உப்புத்தரா, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் “ரூல் கர்வ்” முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜூன் 30 வரை 136 அடிக்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதால்,…

Read More

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், திருமழிசை, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. எதிர்பாராத இந்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Read More

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை குறித்து விவாதிப்பதற்காக காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கணொலி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் காணொலி வாயிலாக பேசிய மு.க.ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை என்று மட்டும் நினைக்காதீர்கள். இது தமிழ்நாட்டு மக்களை நம்ம மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்குற ஒரு முன்னெடுப்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்றார். ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்! நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்குணம்- ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான் என்றார். வாட்சாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ – ‘common…

Read More

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் சிறுவனை கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி ஜெயராமன் காரில் கடத்தி சென்று மிரட்டினார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் கைதாகாமலிருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்,” இந்த விவகாரத்தில் சிறுவன் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம், போன் உரையாடல்களில் இருந்து, இந்த சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன எனக்கூறி, ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை கடந்த 27ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஜெகன் மூர்த்தி தரப்பில்…

Read More

தமிழகத்தில் தங்கியிருக்கும் சட்டவிரோத வெளிநாட்டினரை நாடுக கடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மறறும் ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம்,மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் 16 பேர் நீண்ட கால விசா பெற்றுள்ளனர். 24 பேர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மத்திய அரசின் செல்லுபடியாகும் விசாவின் கீழ் தமிழகத்தில் தங்கியிருக்கின்றனர். வெளிநாட்டினர் பதிவு அதிகாரியான மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு இதை முறைப்படுத்த அல்லது அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. . தமிழகத்தில் தற்போது…

Read More

நிர்பந்தம் செய்தே அதிமுகவை கூட்டணிக்கு பாஜக இழுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை சேலத்தில் நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு தினங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் 2026 தேர்தலில் முடிந்தவுடன் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி என கூறுகிறார். முதலமைச்சர் அதிமுகவைச் சேர்ந்தவர் தான் என சொல்கிறார். இதில் இருந்தே இபிஎஸ்-ஐ முதலமைச்சராக அமித் ஷா ஏற்கவில்லை என்பது தெரிகிறது. கூட்டணி ஆட்சியை அதிமுக ஏற்கிறதா? மறுக்கிறதா? என இதுவரை அவர்கள் பதில் சொல்லவில்லை. அதிமுகவை நிர்பந்தம் செய்து நெருக்கடி கொடுத்து தான் பாஜக கூட்டணியில் சேர்த்துள்ளனர். பாஜகவை பொறுத்தவரை ஒரு மாநிலக் கட்சியுடன் கூட்டணி…

Read More

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் கருவியையும், 61.29 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி என மொத்தமாக 2.81 கோடி செலவில் உயர் மருத்துவ உபகரணங்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். பின் செய்தியாளர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து கூறும்போது, “4 வருடத்திற்கு முன்பு சுகாதாரத்துறை மூலம் இயங்கி வந்த 1000 மேற்பட்ட வாடகை கட்டிடங்களும், 1500 க்கு மேற்பட்ட பழமையான கட்டிடங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தற்போது 1600 புதிய கட்டடங்களை இந்த அரசு திறந்து வைத்துள்ளது. தடுப்பூசி பணிகளில் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்த கூடாது என பொது சுகாதார துறை செவிலியர் கூட்டமைப்பு சங்கம் கூறியது குறித்த கேள்விக்கு, கொரோனா தடுப்பூசி நாங்கள்…

Read More

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கொண்டு வரப்படும் இந்தப் புதிய நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும்! எனவே இது குறித்துத் தெளிவுபடுத்த, தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.. இதுதொடர்பாக தவெக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு.. பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், கடந்த 24.06.2025 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம். ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ (Special Intensive Revision) என்ற ஒன்றைப் பீகாரில் முன்னெடுக்கப் போவதாக அறிவித்தது. அதன்படி, தேர்தல் ஆணைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களின் ஆவணங்களை, தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்த்து. வாக்காளர் பட்டியலை இறுதி செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இப்படிச் செய்வதன் மூலம் விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும்: தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்க முடியும்: வெளிப்படைத்தன்மையோடு வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க முடியும்’ என்று இந்தியத் தேர்தல் ஆணையம் காரணம் சொல்கிறது. ஆனால், பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு…

Read More