Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சட்டவிரோத வெளிநாட்டினரை நாடுகடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு..
    தமிழ்நாடு

    சட்டவிரோத வெளிநாட்டினரை நாடுகடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1365347
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தங்கியிருக்கும் சட்டவிரோத வெளிநாட்டினரை நாடுக கடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மறறும் ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம்,மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் 16 பேர் நீண்ட கால விசா பெற்றுள்ளனர். 24 பேர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மத்திய அரசின் செல்லுபடியாகும் விசாவின் கீழ் தமிழகத்தில் தங்கியிருக்கின்றனர்.

    வெளிநாட்டினர் பதிவு அதிகாரியான மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு இதை முறைப்படுத்த அல்லது அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. .

    தமிழகத்தில் தற்போது மியான்மார் நாட்டை சேர்ந்த 95 பேர் தங்கியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிறப்பு முகாமில் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டினரையும் அவர்கள் தொடர்பான வழக்கு முடியும் வரை தங்க வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், “சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் விவகாரம் தொடர்பாக, வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டப்படி, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தும் அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து நீதிபதிகள், மத்திய அரசு பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவை பாஜக விழுங்க பார்க்கிறது – முத்தரசன் பேட்டி
    Next Article பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
    Editor TN Talks

    Related Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    July 22, 2026

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    July 22, 2026

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.