Author: Editor TN Talks

தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் வெளியிடப்படும். இந்த முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இந்தப் பட்டியலில் இடம்பெறாத மாணவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய அறிவிப்புகள்: யார் பதிவிறக்கம் செய்யலாம்? மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து தங்களது திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அசல் மதிப்பெண் சான்றிதழ்: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.…

Read More

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 3-ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 28) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பயணிகளும் பொதுமக்களும் வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு தங்கள் பயண திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More

திருச்சி கோட்ட ரயில்வேயில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. பகுதியளவு ரத்து செய்யப்படும் ரயில்கள்: தாம்பரம் – விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045): ஜூலை 1 ஆம் தேதி காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், முண்டியம்பாக்கம் – விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும். விழுப்புரம் – சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046): ஜூலை 1 ஆம் தேதி மதியம் 1.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், விழுப்புரம் – முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் முண்டியம்பாக்கம்…

Read More

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெகன் மூர்த்தி தரப்பு வாதம்: கடத்தல் சம்பவத்திற்கும் ஜெகன் மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கில் காவல்துறை அவரை சேர்த்துள்ளதாகவும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சிபிசிஐடி விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. காவல்துறை தரப்பு வாதம்: காவல்துறை தரப்பில், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெகன் மூர்த்தியை சந்தித்த சிசிடிவி புகைப்படக் காட்சிகள் நீதிமன்றத்தில்…

Read More

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் 34 சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 7-ம் தேதி கோவை புறநகர் வடக்கில் தொடங்கி, 8-ம் தேதி கோவை மாநகர், 10 மற்றும் 11-ம் தேதி விழுப்புரம், 12 மற்றும் 14-ம் தேதி வரை கடலூர், 15-ம் தேதி மயிலாடுதுறை, 16 மற்றும் 17-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், 18, 19, 21 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் என சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி…

Read More

கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கின் பின்னணி: போதைப்பொருள் சப்ளையர் கெவினிடம் நீண்ட காலமாகப் போதைப்பொருள் வாங்கிப் பயன்படுத்தியதாகவும், தனது நண்பர்களுக்கும் அதைக் கொடுத்துப் பழக்கி வந்ததாகவும் நடிகர் கிருஷ்ணா மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, நேற்று கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் மனுவில் கிருஷ்ணா முன்வைத்த வாதங்கள்: சிறப்பு நீதிமன்றத்தில் கிருஷ்ணா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், காவல்துறை தன்னைத் தவறாகக் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வழக்கிற்குத் தொடர்புடைய எந்த போதைப்பொருட்களும் தன்னிடமிருந்து காவல்துறையால்…

Read More

ஆன்லைன் முதலீட்டு மோசடியில் பொதுமக்களை ஏமாற்றியதாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) என்ற நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கோவை, சிங்காநல்லூர், திருச்சி சாலை பகுதியைச் சேர்ந்த பூர்வா அமிதி என்பவர், ஃபேஸ்புக்கில் ஒரு முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார். மோசடி நபர்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேசியுள்ளனர். இதை நம்பிய பூர்வா அமிதி, பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.4,19,000 பணத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாட்களாகியும் லாபமோ, முதலீடு செய்த பணமோ திரும்பக் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஈரோடு மாவட்டம் சங்கரபாளையத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) என்பவர்…

Read More

அதிமுகவின் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்பி வெங்கடேஷ் பாபு கட்சி பணிகளை சரிவர செய்யாததால் பொறுப்பிலிருந்து நீக்கம். இம்மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ செம்பியம் பெரம்பூர் கொளத்தூர் மேற்கு பகுதியைச் சேர்ந்த வி எஸ் பாபு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமைப்பு ரீதியிலான மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாவட்ட செயலாளரை நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. வெங்கடேஷ் பாபு கட்சி பணிகளில் அதிக கவனம் செலுத்தாமல், அவரது மாவட்டத்தில் கட்சி வளர்ச்ஞி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதாலும், பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைக்காததாலும் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி வெங்கடேஷ் பாபு வை கடுமையாக எச்சரித்ததாகவும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இன்று நீக்கப்பட்டுள்ளார். அதேபோல…

Read More

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை சுங்கச்சாவடியில் மறு உத்தரவு வரும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடி குறித்து உள்ளூர் மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் தாக்கல் செய்த மனுவில், அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால், உள்ளூர் மக்கள் தங்கள் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும் என்றும், சாலைப் பணிகள் முறையாகச் செய்யப்படாததால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், 7 மீட்டர் அகலமாக இருந்த இருவழிச்சாலை 10 மீட்டராக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், குறுகலான வளைவுகள் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த வழித்தடத்தைச் சுங்கச்சாவடி சாலையாக மாற்றுவது…

Read More

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி: அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்ஸை அங்கீகரிக்கக் கூடாது எனவும், கட்சிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக் கூடாது எனவும் கோரி தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, உள்கட்சி விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டது. இபிஎஸ் தரப்பு புதிய மனு: உயர் நீதிமன்றம்…

Read More