Author: Editor TN Talks
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய சம்பவத்தில் பூவை ஜெகன் மூர்த்தி தான் மூளையாக செயல்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என…
விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு தனி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலத்தடி நீர் வீணாவதையும்,தவறாகபயன்படுத்துவதையும் குறைக்க, மத்திய அரசு விவசாய நோக்கங்களுக்காக நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு விரைவில் பல்வேறு மாநிலங்களில் 22 முன்னோடித் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. இந்த முயற்சியின் கீழ், விவசாயிகள் போதுமான தண்ணீரைப் பெறுவார்கள், மேலும் அதன் பயன்பாட்டின் அடிப்படையில் வரி விதிக்கப்படும்.
சினிமாத் துறையில் உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது விழா. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாக இவ்விழா நடைபெறும். அந்த வகையில், 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும். நிகழ்ச்சியை கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குவார் எனவும், விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர்தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குநர் பாயல் கபாடியா ஆகியோருக்கும் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை ஒட்டிய யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட நிலையில் இதுவரை 16 முறை சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்திரில் புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வரங்கப்படவில்லை என்றால் போராட்டத்தை தீவுரப்படுத்தப்போவதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர் அதேபோல, மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த ஒரு லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்றுள்ள…
கோவையில் சரக்கு ஆட்டோமோதி 13 வயது பள்ளி சிறுமி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை அறிவொளி நகரை சேர்ந்தவர்கள் பாலன் -சாவித்ரி தம்பதி. சாவித்ரி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது 13-வது மகள் சௌமியா, கோவை செம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதற்காக அதே பகுதியில் உள்ள அவரது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார் சௌமியா. வழக்கம் போல பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு சென்றவர், அங்கிருந்து தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ சிறுமி மீது மோதியது. அத்தோடு சிறுமியை சிறிது தூரம் இழுத்து சென்று அருகேயுள்ள கல்லில் மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பெரியகடைவீதி போலிசார் சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு…
ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஜெகநாதர் கோயிலுக்கு ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறும். புரி ஜெகநாதர் கோயிலைப் போன்றே, குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலும் ஜெகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கும் ரத யாத்திரை நடைபெற்றது. 400 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் நடைபெற்ற ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 18 யானைகள், 100 வாகனங்களை கொண்டு ரதமானது இழுத்து செல்லப்பட்டது. மேற்கொண்டு பக்தர்களும் வடத்தை பிடித்து இழுத்து சென்றனர். இந்த ரத யாத்திரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதேப் போல் இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களின் உட்கொண்டதில் சாம்பாரில் பள்ளி இருந்ததாக கூறி நான்கு மாணவர்கள் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதன் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது இங்கு வழங்கப்படும் உணவு அனைத்தும் காங்கேயத்தில் தயார் செய்து அங்கிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் உணவு பரிமாறப்படும் உணவு கொண்டு வரும் ஊழியர்கள் தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி பள்ளிக்கு உணவு வழங்கிவிட்டு மற்ற பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பொழுது அங்கிருந்து கொண்டு வந்த சாம்பாரில் பல்லி இறந்து உள்ளதை பார்த்த ஆசிரியர்கள் உடனே சாப்பிட்ட மாணவர்களை தாராபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிக்காக, மூன்று பேர் கொண்ட குழுவை ராமதாஸ் நியமித்துள்ளார். பாமக பொருளாளர் சையது மன்சூர் உசேன், கரூர் பாஸ்கர், மற்றும் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு, அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டச் செயலாளர் வேணு பாஸ்கரன் தலைமையில் அம்மாவட்ட நிர்வாகிகள் இன்று தைலாபுரத்தில் உள்ள பாமக தோட்டத்தில் மருத்துவர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு, வரவிருக்கும் பொதுக்குழு கூட்டங்களுக்கான ஆயத்த பணிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் கடலூர் மாணவி தரணி முதலிடம் பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த மைதிலி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பொதுப்பிரிவில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடமும், நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திகா இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 3,02,374 அதில் பதிவுக்கட்டணம் செலுத்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,50298. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 40,645 கூடுதலாகும். இந்த…
முல்லைப் பெரியாற்றில் 2000 கன அடிக்கு மேல் நீர் செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நேற்று ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்து தற்போது 135 அடியை எட்டிய நிலையில் தமிழக பகுதிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தற்போது முல்லைப் பெரியாற்றிலிருந்து 2000 கன அடிக்கும் மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாற்றில் இரண்டு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வைகை அணைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதிக அளவில் நீர் சென்று கொண்டிருப்பதால் முல்லைப் பெரியாற்றில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என தேனி மாவட்ட நிர்வாகம்…