Author: Editor TN Talks
திரை விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடுவதை தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்க கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்( TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தஏபோதைய சமூக வலைதள யுகத்தில், யார் வேண்டுமானாலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விமர்சனங்கள் முன் வைக்க முடியும். எதிர்மறை விமர்சனங்கள் வரும் திரைப்படங்களை மட்டுமே, தான் பார்த்து வருவதாக நீதிபதி குறிப்பிட்டார். இந்தியாவில், எதிர்மறை விமர்சனம் செய்வதை தடுத்தால், வெளிநாடுகளில் இருந்து விமர்சனங்கள் வரும். எதிர்மறை விமர்சனங்களை தடுப்பது குறித்து உத்தரவிட்டால் அதை…
திரை விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடுவதை தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்க கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்( TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தஏபோதைய சமூக வலைதள யுகத்தில், யார் வேண்டுமானாலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விமர்சனங்கள் முன் வைக்க முடியும். எதிர்மறை விமர்சனங்கள் வரும் திரைப்படங்களை மட்டுமே, தான் பார்த்து வருவதாக நீதிபதி குறிப்பிட்டார். இந்தியாவில், எதிர்மறை விமர்சனம் செய்வதை தடுத்தால், வெளிநாடுகளில் இருந்து விமர்சனங்கள் வரும். எதிர்மறை விமர்சனங்களை தடுப்பது குறித்து உத்தரவிட்டால் அதை…
28 மணிநேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா. நேற்று மதியம் 12.01 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘பால்கன்-9′ ராக்கெட் மூலம், டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘டிராகன்’ விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது. தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலம் தற்போது விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர்…
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது.தற்போது நீர்வரத்து வினாடிக்கு 6084 கன அடியாகவும், நீர்மட்டம் 134.30 அடியாகவும் உள்ளது. ரூல் கர்வ் முறைப்படி ஜூன் 30-ஆம் தேதி வரை முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிவரை மட்டுமே நீர் தேக்க முடியும். இன்று இரவுக்குள் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்ட கூடும் என்பதால், அணையில் இருந்து வல்லக்கடவு வழியாக கேரளப் பகுதிக்கு நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால்,தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் இருந்து கேரளாவிற்கு முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது.
டேங்கர் லாரியிலிருந்து வெளியாகி வரும் 16,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் – பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தனர். தூத்துக்குடியில் இருந்து கரூர் செல்வதற்காக 16,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரியை திருநெல்வேலியை சேர்ந்த மகேஷ் ஒட்டி வந்துள்ளார். திண்டுக்கல் ஆத்தூர் பகுதியிலுள்ள தோமையார்புரம் அருகே வந்தபோது டேங்கர் லாரியில் ஓட்டை ஏற்பட்டு லாரியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளியேற தொடங்கியுள்ளது. உடனடியாக டிரைவர் வண்டியை நான்கு வழிச்சாலையின் ஓரம் நிறுத்தி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் டேங்கர் லாரியிலிருந்து வெளியேறி வரும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் மீது தண்ணீர் அடித்தனர். இந்த ஹைட்ரோ குளோரிக் ஆசிட் தீ பற்றாது என்றாலும் இதனால் வெளியேறும் புகை பொதுமக்களுக்கு மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால்…
திரையரங்குகளுக்குச் சென்று படங்கள் பார்த்தது அந்த காலம். எந்த ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடுவது இந்த காலம். அப்படிப்பட்டவர்களுக்காக, இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்ற பட்டியலை பார்க்கலாம். சன் நெக்ஸ்ட்டில் தமிழில் வெளிவந்த தி வெர்டிக்ட், தெலுங்கில் வெளிவந்த ஒக்க பதக்கம் பிரகாரம், மராத்தி மொழியில் வெளிவந்த ஆசாதி படங்கள் வெளியாகி உள்ளன. நெட்பிளிக்சில் இந்தியில் வெளிவந்த ரெய்டு-2, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் அடித்த கொரிய மொழியில் வெளிவந்த ஸ்குவிட் கேம்-3, ஆங்கிலத்தில் வெளிவந்த ட்ரெய்ன் ரெக் பூப் க்ரூஸ் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. அமேசான் ப்ரைமில் இந்தியில் வெளிவந்த பஞ்சாயத்து-4, தெலுங்கில் வெளிவந்த கடிகாச்சலம், மராத்தியில் வெளிவந்த பரிவார், ஆங்கிலத்தில் வெளிவந்த கவுண்ட் டவுன்-1, ஆங்கிலத்தில் வெளிவந்த ஹவ் டூ ஹாவ் செக்ஸ் ஆகியவை வெளிவந்துள்ளன. ஜியோ ஹாட் ஸ்டாரில், இந்தியில் வெளிவந்த மிஸ்ட்ரி ஆங்கிலத்தில் வெளிவந்த தி ப்ரூட்டலிஸ்ட், தி…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் வர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கனவு இல்லம் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், கல்மரம் என்ற நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1409 சதுர அடி வீடு கடந்த 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு…
திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் குரூஸுக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கில், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, சுமார் ஒரு மணி நேரம் சாட்சியம் அளித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில், கடன்த 19 ம் தேதி நேரில் ஆஜராகி, ராபர்ட் புருசுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்தார். வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்…
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் போதைப் பொருள் விற்பனையாளர் பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் காவல்துறை 25 ஆம் தேதி சம்மன் அனுப்பியது. கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கிருஷ்ணா சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். திரைப்பட பணிகளுக்காக கிருஷ்ணாவின் நண்பரிடம் பிரசாத் 50 லட்சம் பெற்றதாகவும், மோசடி பேர்வழி தெரிந்ததும் தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.நடிகர் ஸ்ரீகாந்தின் திரைப்படம் தயாரிப்பதால் அவர் தான் தன்னை பிரசாத்திடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும், மற்றப்படி நேரடி பழக்கமில்லை எனவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அவரிடம் விடிய விடிய போலீசார் மேற்கொண்டனர். நடிகர் கிருஷ்ணா தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் எனக்கு சில உடல் நல கோளாறுகள் உள்ளது அதன் காரணமாக என்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது என தெரிவித்தார். ஆனால் நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020 ஆம் ஆண்டு…
கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கு.. மார்க்சிஸ்ட் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவின் பெரிய கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கிடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எங்களது கொடியை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிறுவி உள்ளோம். உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் எங்களது கட்சி கொடிக் கம்பங்களை அந்தந்த மாவட்டங்களில், அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றனர். இது எங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது. ஆகவே, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தோம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி…