Author: Editor TN Talks

புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து பரிந்துரைக்கும்போது குற்றப் பின்னணி இல்லாதவர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளவும், குற்ற வழக்கில் நிர்வாகிகள் சிக்கினால் தலைமைக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். திருச்சி , தஞ்சை, சேலம் , கோவை உட்பட அதிமுகவின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருப்பது குறித்தும் , பூத் கமிட்டி பணிகளை முடிக்காத மாவட்ட நிர்வாகிகள் இன்னும் 15 நாட்களுக்குள் அவற்றை நிறைவு செய்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து புகைப்படம் எடுத்து கட்சித் தலைமைக்கு…

Read More

மாம்பழ விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக மத்திய அரசிடம் சமபங்கு நஷ்டஈட்டு தொகை கேட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி கூறியுள்ளார். டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் சக்ரபாணி இன்று மத்திய வேளாண்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு.., தமிழ்நாட்டில் மாம்பழம் உற்பத்தில் கடந்த ஆண்ட விட 3 மடங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது, இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, எனவே விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வீழ்ச்சியை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு பாதி விலையை ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டுள்ளளோம். மாம்பழ கூழ் மீது 12% ஜி.எஸ்.டி. உள்ளது அதனை 5 சதவிதமாக குறைக்க வலியுறுத்தியுள்ளோம். நெல்லுக்கான ஆதார விலையை அதிகரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். குறுவை பருவத்தில் நெல் கொள்முதலை 19 லட்சம் டன்னாக உயர்த்த கோரிக்கை வைத்தோம். பாசிப்பயிறு கொள்முதல் கால…

Read More

தமிழக அரசின் பட்ஜெட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியிருந்தது. இதன்படி 8 ஜிபி ரேம் (டிடிஆர்-4), 256 ஜிபி ஹார்டு டிஸ்க் (எஸ்எஸ்டி), 14 அல்லது 15.6 இன்ச் திரை, ஐ3 இன்டெல் அல்லது ஏஎம்டி பிராசசர், புளூடூத் 5.0, விண்டோஸ் 11 ஓஎஸ், 720பி ஹெச்டி கேமரா, ஒரு வருட உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களுடன் ‘தமிழக அரசு மடிக்கணினி’ என்ற வாசகமும் இதில் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெண்டர் வரும் ஜூலை 9ம் தேதி திறக்கப்பட…

Read More

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளது. வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வு ரத்து, ஆண்டுக்கு 6% வரி உயர்வை கைவிடுதல், அபராத வரி விதிப்பதைத் தடுத்தல், சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை சீரமைத்து மனித உயிர்களை காத்தல், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 200 பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசுக்கும் கோவை மாநகராட்சிக்கும் எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நான்கு ஆண்டுகால மௌனமும் தற்போதைய போராட்டமும்: திமுக கூட்டணியில் இருந்த கடந்த நான்கு ஆண்டுகளாக, திமுக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஆதரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென நடைபெற்றுள்ள இந்த முற்றுகைப் போராட்டம் அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.…

Read More

வால்பாறையில் சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது தொடர்பான கேள்விக்கு, யானைகள் – விலங்குகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது சகஜம் தான், உரிய இழப்பீடு தருகிறோம் என்ற அமைச்சர் ராஜகண்ணப்பனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு யானை முகாம்களை சேர்ந்த 4 யானை பாகன்களுக்கும் 11 பயிற்சியாளர்களுக்கும் தமிழக அரசு சார்பில் தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகள் பராமரிப்பு மையத்தில் சிறப்பு பயிற்சியளிக்கபட்டது. இந்நிலையில் பயிற்சி முடித்து திரும்பியவர்களை சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேரில் சந்தித்து வாழ்த்தி சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர் உயிரியல் பூங்காவில் உள்ள தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய போராட்டங்கள் நடத்த தேவையில்லை என்றும், அனைவரையும் நிரந்தரம் செய்ய முடியாவிட்டாலும், அரசு நிதி நிலை மற்றும் பணியாளர் தேவையை பொறுத்து தேவையானவர்களை தகுதியின் அடிப்படையில் நிரந்தரம் செய்யபடுவார்கள் என்றும் தேர்தலுக்குள்…

Read More

நான் என்ன செத்தா போய்விட்டேன், எனக்கு எற்கு கூட்டுப் பிரார்த்தனை என்று சேலம் பாமக எம்எல்ஏ அருள் விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் அருள், இனி கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளராகப் பணியாற்றுவார் என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நியமனம், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அருள், சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி…

Read More

அனுமதி இன்றி எடுத்த விடுப்புக்கு, நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றிய இளங்கோவன், 2006 முதல் 2008 வரை 117 நாட்கள் விடுப்பு எடுத்து சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏழு முறை பயணம் செய்ததாகவும், முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்ததுடன் ஒரு லட்சத்து 2916 ரூபாய் ஊதியமாக பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இளங்கோவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மனுதாரர் இளங்கோவன் விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளதால், அதனை அனுமதியின்றி விடுப்பு எடுத்ததாக கருத முடியாது…

Read More

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பற்றி அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க சார்பாக வழக்கறிஞர் பால் கனகராஜ் மற்றும் வினோஜ் பி செல்வம் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால் கனகராஜ், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை இரண்டு முறை அருவறுக்க தக்க வகையில் ஆ.ராசா பேசியுள்ளார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். இவர்களின் நோக்கம் என்னவென்றால் கடந்த 22 ம் தேதி மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு மிக பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடைபெற்றது. இதை திசை திருப்ப வேண்டுமென என்பதை நோக்கமாக வைத்து தான் இது போன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் சாணக்கிய தண்மை மிகுந்த ஒருவரை எப்படி இது போன்ற கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேச முடியும். இதற்கு ஆ.ராசா…

Read More

முருகன் மாநாட்டால் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை… எப்போதும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்தே பேச வேண்டுமா? எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது என பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் காட்டத்துடன் கூறினார். நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் 50 ஆண்டு நிறைவு நாளையொட்டி கோவை, பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலையில் பட்ட அனுபவங்களை மறந்து விட்டார். அதனால் தான் ஜனநாயகரீதியான எதிர்ப்புகளை கூட நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார். சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் அதற்கு உதாரணம். திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை போய்க் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ ? என்று எண்ணத் தோன்றுகிறது. தனது அரசின் தோல்விகளை…

Read More

இந்தியாவின் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, தற்போது பான் இந்தியா ஹீரோயினாக வலம்வந்து கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ’குபேரா’ படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக ’அனிமல், புஷ்பா 2’ ஆகிய படங்களிலும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அந்தப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியான ’குபேரா’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. கடந்த 20-ம் தேதி வெளியான ’குபேரா’ படம் இதுவரை ரூ.50கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜூனா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில்…

Read More