Author: Editor TN Talks
தமிழ்நாடு அரசின் முக்கியப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களான ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களுக்கு முழுமையான தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெற, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இதுவரை இருந்தது. தற்போது இந்த நிபந்தனை திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களுக்கு முழுவதுமாகத் தளர்த்தப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது பாலினச் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்மையில் நடைபெற்ற முருகன் மாநாடு முடிந்த கையோடு டெல்லி சென்றுள்ளார். அங்கு, விரைவில் நியமிக்கப்பட உள்ள மாநில நிர்வாகிகள் மற்றும் பிற அணி செயலாளர்களின் பட்டியலை டெல்லி தலைமை அலுவலகத்தில் வழங்கி ஆலோசனை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம், தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அமைப்புச் செயல்பாடுகள் மற்றும் நியமனங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான்-அமெரிக்கா மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் வான்பரப்பு மூடப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, கத்தார், ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான்பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன. இதன் காரணமாக விமான சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கத்தார் ஏர்லைன்ஸ் தனது அனைத்து விமான சேவைகளையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது. இதன் விளைவாக, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 6 புறப்பாடு விமானங்களும், 5 வருகை விமானங்களும் அடங்கும். ரத்து செய்யப்பட்ட விமானங்கள்: புறப்பாடு விமானங்கள் (6): குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (நேற்று இரவு 11 மணி) மஸ்கட் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (நள்ளிரவு 11.45 மணி) அபுதாபி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (இன்று அதிகாலை…
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் போர் நிறுத்தம் வெளியாகும் என செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். “இஸ்ரேல்தான் ஈரான் மீது போரைத் தொடங்கியது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறோம். தற்போதைக்கு போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தியதால், நாங்களும் நிறுத்திவிட்டோம்,” என்று அராக்சி கூறினார். As Iran has repeatedly made clear: Israel launched war on Iran, not the other way around. As of now, there is NO “agreement” on any ceasefire or cessation of military operations. However, provided that the Israeli regime…
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகச் சரிந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், போர் பதற்றத்தால் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறையத் தொடங்கியது. உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய், ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 5% சரிந்து, ஒரு பேரலுக்கு $68 ஆகக் குறைந்தது. இது போர் தொடங்கிய ஜூன் 12 ஆம் தேதியிலிருந்த விலையைவிடக் குறைவாகும். அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, திங்கட்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கப் பங்குச் சந்தையும் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
ஈரான் – இஸ்ரேலுக்கு இடையேயான தாக்குதலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்கில் ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தங்கள் அணு ஆயுத திட்டம் அமைதி நோக்கத்துக்கானவை என ஈரான் சமாதானம் கூறி வருகிறது. எனினும் அதனை உலக நாடுகள் நம்புவதாக இல்லை. ஈரானை அணு ஆயுதம் தயாரிக்காமல் நிறுத்தி வைக்க அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அதேநேரம் ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு விசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சத்தை பெற்றிருந்தது. ஆகையால் அடுத்தப் படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டராக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவரது 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியான முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் மற்றும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ’சிக்கிட்டு’ என்ற பாடல் வரும் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு…
கேரளா, குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருந்த 5 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று(23.06.2025) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கேரளாவில், நிலம்பூர் தொகுதியில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ பி.வி.அன்வர், முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் களமிறங்கின. பதவியை ராஜினாமா செய்த அன்வர், சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த தொகுதியில் நடந்த தேர்தல் முடிவில், ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் தோல்வியை தழுவினார். அவரை விட 11,077 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன் வெற்றி பெற்றார். குஜராத் மாநிலம் விசாவதர் தொகுதியில் ஆம்…
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக தேசிய தேர்வு முகமையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. நீட் மதிப்பெண்களில் முறைகேடு செய்து, “குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற பணக் காரணங்களை கருத்தில் கொள்ளாமல்” உதவியதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் NTA (தேசிய தேர்வு நிறுவனம்) அதிகாரிகள் மீது CBI வழக்குப் பதிவு செய்துள்ளது. NEET UG மதிப்பெண்களில் முறைகேடு செய்த 90 லட்சம் பேருக்கு, பணம் செலுத்தினால், முறைகேடு செய்யப்பட்ட மதிப்பெண்கள் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரை தேடிவருவதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் ”நீட்…
எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கார்கே பிரதமர் மோடியை சாடியுள்ளார். கர்நாடக மாநிலம் ராய்சூரில் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களிடம் உரையாற்றினார். அப்போது, சமீபத்தில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை கொன்றது. பாதுகாப்புப்படையின் தாக்குதலை சிலர் தங்கள் தனிப்பட்ட புகழாக எடுத்துக்கொள்கின்றனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அவர் பீகார் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார். நாடும், ராணுவ வீரர்களும் ஒருபக்கம் போராடிக்கொண்டிருந்தபோது பிரதமர் மோடி மறுபக்கம் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துவிட்டு அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால் நாட்டின் தலைவர்கள், மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்’…