Author: Editor TN Talks

கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். சம்பவத்தின் பின்னணி: மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில், கோவில் பணியாளர் சக்தீஸ்வரன் முக்கிய சாட்சியாக உள்ளார். தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை தாக்கிய வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்து, அதை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். பாதுகாப்பு கோரிக்கைக்கான காரணம்: இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா என்ற தனிப்படை காவலர் ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அவர் ஏற்கனவே ஜூன் 28 அன்று தன்னை மிரட்டியதாகவும் சக்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது நீதிமன்றத்தில் ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளதால், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

Read More

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இரு மகன்களில் மூத்த மகனான விஜய பிரபாகரன் அரசியலிலும், இளைய மகனான சண்முக பாண்டியன் தந்தையைப் போல் சினிமாவிலும் காலூன்றி வருகின்றனர். 2015ம் ஆண்டில் ’சகாப்தம்’, 2018-ல் ’மதுர வீரன்’ போன்ற படங்களில் நடித்தவர், தொடர்ந்து இயக்குநர் அன்பு இயக்கத்தில் ’படைத்தலைவன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ’கொம்பு சீவி’ என்ற படத்தில் நடித்துள்ளார் சண்முக பாண்டியன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என தொடர்ந்து நகைச்சுவை கலந்த குடும்ப படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பொன்ராம். இவரது இயக்கத்தில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அவருடன் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசயமைத்து…

Read More

“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 1 ஆம் தேதி வைத்தார். இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி பகுதியிலும், அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை கூறி (வீட்டுக்கு வீடு) மக்களை தேடிச் சென்று பரப்புரையை தி.மு.க.வினர் இன்று முதல் 45 நாட்கள் நடத்துகின்றது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடிதோறும் 30 சதவீதம் வாக்காளர்களை தி.மு.க உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்தார். இதையடுத்து, இந்த உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை ஜூலை 1 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நேற்று திமுகவின் நிர்வாக ரீதியான 76 மாவட்டங்களிலும் “ஓரணியில் தமிழ்நாடு” விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று தமிழகம் முழுவதும்…

Read More

இன்றைய காலகட்டத்தில் ஒருவரால் செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது. காலை எழுந்து முதன் முதலில் நாம் காணுவது செல்போனாக தான் இருக்கும். அதேப் போல் இரவு தூங்கும் முன்பு கடைசியாக பார்ப்பதும் செல்போனாக தான் இருக்கும். அப்படியிருக்க ஒருநாள் செல்போனோ அல்லது நெட்வொர்க்கோ இல்லை என்றால் அன்றைய தினம் அனைவருக்கும் பித்து பிடித்தாற் போல் ஆகிவிடும். அப்படியிருக்க, நடிகை சமந்தா 3 நாட்கள் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு இருந்துள்ளாராம். இது குறித்து அவர் பகிர்ந்த கருத்து ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “என் கையில் எப்போதும் வைத்திருக்கும் செல்போன் குறித்து எனக்கு ‘திடீர்’ சிந்தனை எழுந்தது. இதையடுத்து 3 நாட்கள் என் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்தேன். யாருடனும் பேசவில்லை. யாரையும் தொடர்புகொள்ளவும் இல்லை. யாரையும் பார்க்கவும் இல்லை. புத்தகம் படிப்பது, எழுதுவது என எந்த வேலையும் செய்யவில்லை. 3 நாட்கள் என் மூளைக்கு முழு ஓய்வு தந்தேன். இது…

Read More

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுகவின் மாபெரும் வீட்டுக்கு வீடு பரப்புரை இயக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. இந்த பரப்புரையின் ஒரு பகுதியாக, திமுகவினர் தங்கள் சொந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று மக்களைச் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளையும் 100% சென்றடையும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ‘மண், மொழி, மானம் காக்க தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும்’ முன்னெடுப்பாகக் கருதப்படும் இந்த பரப்புரையில், எதிர்க்கட்சியினர் வீடுகளுக்கும் திமுகவினர் இன்று முதல் நேரில் சென்று மக்களைச் சந்திக்கவுள்ளனர். இந்த வீட்டுக்கு வீடு பரப்புரை, வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு மக்களின் ஆதரவைத் திரட்டவும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோயில் நிர்வாகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காவல்துறையினர் விரைந்து செயல்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்ப் படையினர் கோயில் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக ஆய்வு செய்தனர். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனையடுத்து, காவல்துறையினர் இந்த மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையின் முதல் நாள், மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் காலை முதல் இரவு வரை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது. மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று திருப்புவனம் காவல் நிலையம் அருகேயுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் காலை 10:45 மணிக்கு விசாரணையைத் தொடங்கினார். இரவு 10 மணி வரை நீடித்த இந்த விசாரணையில், பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. விசாரணை ஒரு பார்வை: காவல்துறை அதிகாரிகள்: முதலில், திருப்புவனம் ADSP சுகுமாறன் மற்றும் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நகை காணாமல் போனது தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட CSR, FIR ஆவணங்கள் மற்றும் காவல் நிலைய, கோவில் CCTV DVR பதிவுகள்…

Read More

வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினார். அவருக்கு அந்நாட்டு அதிபர் மஹாமாவால் சிறப்பு வரவேற்பு அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினார். அவரை கானா ஜனாதிபதி ஜான் டிராமானி மஹாமோ விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். Landed in Accra, Ghana. I’m honoured by the special gesture of President John Dramani Mahama for welcoming me at the airport. Our nations look forward to working together to strengthen our long-standing relationship and explore fresh avenues for collaboration. 🇮🇳🇬🇭@JDMahama pic.twitter.com/HDONiVt7tr — Narendra Modi (@narendramodi) July 2, 2025 இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினேன். ஜனாதிபதி ஜான் டிராமானி மஹாமோ விமான நிலையத்திற்கே வந்து என்னை வரவேற்றது…

Read More

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமார் இல்லத்திற்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். நகைகள் காணாமல் போனதாக தொடரப்பட்ட புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசார் அடித்ததில் உயிரிழந்தார். ஒட்டுமொத்த மாநிலத்தையும் பரபரப்பாக்கிய இச்சம்பவத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய், இன்று சிவகங்கை மடப்புரத்தில் உள்ள உயிரிழந்த அஜித் வீட்டிற்கு நேரில் சென்றார் அங்கு அஜித்குமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அஜித்குமாரின் தாயார் மாலதியிடம் ஆறுதல் கூறினார். அதேபோன்று அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரிடம் ஆறுதல் கூறிய அவர், 2 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை நிதியுதவியாக வழங்கினார். தேவைப்படும் உதவிகளை தவெக நிர்வாகிகள் செய்வார்கள் என்று நம்பிக்கை தரும் சொற்களை அக்குடும்பத்தினருக்கு விஜய் வழங்கினார். விஜயின் வருகையையொட்டி அந்த இடத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இதனால்…

Read More

பெண்கள் ஒவ்வொருவரும் அரசு தூதுவராக இருந்து மக்களிடையே அரசு திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என காட்பாடியில் துணை முதலமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக நிர்வாகி இல்ல திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், காட்பாடியில் திருமணத்தை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டு பிள்ளையார் சுழி போட்டது காட்பாடி தொகுதி. நான் இங்கு வந்து மணமக்களை வாழ்த்துவதற்கு முழு முதற் காரணம் பொதுச்செயலாளர் துரைமுருகன்தான். இங்கே நிறைய பெண்கள் வந்திருப்பதை பார்க்கிறேன். ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கண்ட கனவு தான் இது. பெண்கள் படிக்கவும் சுதந்திரமாக இருக்கவும் திட்டத்தை தீட்டியவர் கலைஞர். அதனை செய்து காட்டியவர் நமது முதலமைச்சர். பெண்கள் படிக்க வேண்டும் பொருளாதார ரீதியாக வளர வேண்டும். ஓரணியில்…

Read More