Close Menu
    What's Hot

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனே தலையிட வேண்டும்!. பி.ஆர். பாண்டியன்!

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஏடிஜிபி ஜெயராம் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
    தமிழ்நாடு

    ஏடிஜிபி ஜெயராம் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கூடுதல் டிஜிபி ஜெயராம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று தகவல் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஜெயராம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    தமிழக அரசின் வாதம்:

    தமிழக அரசு தரப்பில், “ஜெயராம் தொடர்பான எந்தெந்த வழக்குகள் என்பதை நாங்கள் கூற விரும்பவில்லை. ஆனால், பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் நேரடியாக விசாரணையை எடுத்துக்கொண்டு, சில உத்தரவுகளைப் பிறப்பித்து, நாங்கள் இவ்வாறுதான் செயல்பட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது போல் உள்ளது,” எனக் கூறி அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

    கூடுதல் டிஜிபி ஜெயராம், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை என்றும், அகில இந்திய சேவை விதிகள் அடிப்படையிலான விசாரணையைக் கருத்தில் கொண்டுதான் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.

    ஜெயராம் தரப்பு வாதம்:

    ஜெயராம் தரப்பில், “பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். இது முறையான நடவடிக்கை அல்ல,” என வாதிடப்பட்டது.

    இதையும் படிக்க: ‘தமிழிலும்’ குடமுழுக்கு என்பது அவமானம்!… தமிழக அரசு மீது சீமான் பாய்ச்சல்..

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு:

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வேறு அமர்வு அமைக்க அறிவுறுத்த உள்ளதாகத் தெரிவித்தனர்.

    மேலும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஜெயராம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேறு அமர்வு அமைக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, ஜெயராம் தொடர்பான வழக்குகளின் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ADGP Jayaram CBCID Government Statement High Court Judicial Order Legal Case News supreme court Suspension tamil nadu உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் ஏடிஜிபி ஜெயராம் சட்ட வழக்கு சிபிசிஐடி செய்திகள் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு நீதிமன்ற உத்தரவு பணியிடை நீக்கம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅவதூறு கார்ட்டூன் விவகாரம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீது போலீசில் புகார்
    Next Article ஏடிஜிபி ஜெயராம் கைது நடவடிக்கையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்.. ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என தமிழக அரசு தகவல்…
    Editor TN Talks

    Related Posts

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    May 31, 2026

    மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனே தலையிட வேண்டும்!. பி.ஆர். பாண்டியன்!

    May 31, 2026

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனே தலையிட வேண்டும்!. பி.ஆர். பாண்டியன்!

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.