Author: Editor TN Talks

வேலூர் மாவட்டத்தில் புதிய மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட வழித்தடங்கள் உட்பட மொத்தம் 18 வழித்தடங்களுக்கான 18 மினி பேருந்துகளை நீர்வளத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று(18.06.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசு பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கிறது. அதனை அரசு அதிகாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். மினி பேருந்துகள் துவக்க விழா தமக்கு அரசு அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை இதனால் நான் இந்த விழாவிற்கு வந்திருக்கவே மாட்டேன். முதல்வர் தொகுதியில் அனைத்து விழாக்களுக்கும் செல்ல வேண்டும் என கூறியதால் வந்தேன். முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி கிடைக்க நடவடிக்கை எடுத்து இருப்பேன் என்று கூறினார். இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்று அதிகாரிகளை எச்சரித்தார். மேலும் ஓட்டுக்காக எல்லா…

Read More

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேத்திகளை கொன்றுவிட்டு, தாய், மகள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65). அவரது மகள் காளீஸ்வரியின் (45) மகள் பவித்ரா (28 ) என்பவருக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக காளீஸ்வரி, சின்ன குழிப்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராக்கு தொடர்பு ஏற்பட்டதால் அந்த நபருடன் 17. 6.2025 அன்று மாலை 6 மணி அளவில் பவித்ரா வீட்டை விட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த பாட்டி செல்லம்மாள்…

Read More

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் ஆர்யா, திரைப்படங்களில் நடிப்பதோடு கடந்த சில வருடங்களாக ’சீ ஷெல்’ (SEA SHELL) என்ற உணவகங்களை நடத்தி வருகிறார். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும், தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட கிளைகளாகவும் இது செயல்பட்டு வருகிறது. கேரளாவிலும் சீ ஷெல் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் செயல்பட்டு வந்த கிளையை ’குன்ஹி மூசா’ என்பவருக்கு நடிகர் ஆர்யா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் வரி ஏய்ப்பு நடந்ததாக கேரள வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள சீ ஷெல் உணவங்களிலும் சோதனை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து கேரள அதிகாரிகள் வேண்டுகோளை ஏற்று தமிழக வருமானவரித்துறையினர் இன்று(18.06.2025) காலை முதல் நடிகர் ஆர்யாவின் வீடு மற்றும் சீ ஷெல் உணவங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை பின்னி சாலையில் உள்ள…

Read More

கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க, சிறப்பு விருந்தினராக இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அண்மையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பின், பிரதமர் மேற்கொண்டுள்ள இந்த சுற்றுப் பயணம், உலக அரசியல் சதுரங்கத்தில் இந்தியா முன்னெடுக்கும் முக்கிய காய்நகர்த்தலாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வியூகம் என்ன?  ஆபரேஷன் சிந்தூரால் அசர வைத்த இந்தியா   இஸ்ரேல் – ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. டிரோன்கள், ஏவுகணைகள் என முற்றிலும் நவீனமாக நிகழும் போரில், இரண்டு நாடுகளுமே சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன. இஸ்ரேலின் அயர்ன் டோம், உலகின் சிறந்த வான்வழிப் பாதுகாப்பு அரண் என்று கருதப்படுகிறது. ஈரானின் ஏவுகணை ஆயுதங்களோ, அதிநவீன தொழில்நுட்பம் மிக்கவை. இவை இரண்டும் போரில் சந்திக்கும்போது இரண்டு நாடுகளிலும் பொதுக் கட்டுமானங்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால், நவீன…

Read More

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் கைவசம் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ’மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து சுதாகொங்கரா இயக்கத்தில் ’பராசக்தி’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை முடித்து விட்டு ’குட் நைட்’ படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான பந்தத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக விஜய்க்கு ’ஜில்லா’ படத்தில் மோகன்லால் தந்தையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மங்களதேவி கண்ணகி டிரஸ்ட்டின் செயலர் ராஜகணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை பதிவு செய்யப்பட்ட தன்னார்வல தொண்டு நிறுவனம். கடந்த 26 ஆண்டுகளாக மங்களதேவி கண்ணகி கோவிலின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கார்த்திகேயன் என்பவர் சட்ட விரோதமாக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து சித்ரா பௌர்ணமி திருவிழாவின் போது அன்னதானம் வழங்குவதாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்டவிரோதமாக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் அன்னதானம் வழங்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்காக விண்ணப்பித்த எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் சட்டவிரோதமாக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது.…

Read More

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது. இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து, நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது. இந்தக் கணக்கெடுப்பு. இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டில் சமூக நீதிக்கான எங்களுடைய முழுமுதல் கோரிக்கையாக இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதை ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் ஒன்றிய அரசு. மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு சாதிவாரித்…

Read More

பல்வேறு பணிகளுக்காக சிவகங்கை சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கை மாவட்ட விவசாய பாசனத்துக்கு ஆதாரமாக உள்ள வைகை ஆற்றில் இருந்து பிரியும் கானூர் – பழையனூர் உள்ளிட்ட 17 கண்மாய்களுக்கு முறையாக தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.40.27 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். இந்தத் திட்டம் நிறைவுற்ற பின், 7 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு பயன் பெறும். ஆகவே, இந்தத் திட்டத்தை உரிய காலத்திற்குள் முடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், தடுப்பணை தரமாகக் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுரை வழங்கினார். தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கழக முன்னோடிகளில் முக்கியமானவரான அண்ணன் சாத்தையாவின் இல்லத்திற்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார். அண்மையில் மறைந்த அவருடைய துணைவியார்…

Read More

வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என, இரு பிரிவினருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள 18 திவ்யதேசங்களில் ஒன்றான சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீபப்பிரகாசர் கோவில் விழாக்களின் போது, கோவிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாழி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்த கோவில் செயல் அலுவலர் உத்தரவை எதிர்த்து, தென்கலை பிரிவைச் சேர்ந்த ஸ்ரீரங்காச்சாரி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, கோவிலில் தென்கலை மந்திரம் பாட அனுமதியளித்து 1915 ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 1918 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் மனுதாரர்கள்…

Read More

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல் ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா இருவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும், உச்சநீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன், அவரின்…

Read More