Author: Editor TN Talks
நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள மனுஷி திரைப்படத்தில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கினால், படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும், படத் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, படத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் எவை என்பது குறித்து மனுதாரருக்கு (வெற்றிமாறன்) தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் தரப்பில்,…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக வாகனங்கள் நகருக்குள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். அதிலும் விடுமுறை நாட்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகளவிலான பக்தர்கள் வருவர். அந்த வகையில் தற்போது திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் சுவாமி தரிசனம் செய்ய பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் ஏ.வ. வேலு தலைமையில் 4 முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளி மாநில வாகனங்கள் மாடவீதிகளில் அனுமதிக்க கூடாது என்றும் பேருந்துகள் மாடவீதிகளில் செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதனால் எந்த பயனும் இல்லாமல் நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி…
கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடாவின் கால்கரி நகருக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு கனடா அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தனது X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடாவின் கால்கரியில் தரையிறங்கினேன். மாநாட்டில் பல்வேறு தலைவர்களை சந்தித்து, முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்து எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன். மேலும், ‘குளோபல் சவுத்’ (Global South) நாடுகளின் முன்னுரிமைகளையும் வலியுறுத்துவேன்” என்று குறிப்பிட்டிருந்தார். Landed in Calgary, Canada, to take part in the G7 Summit. Will be meeting various leaders at the Summit and sharing my thoughts on important global issues. Will also be emphasising the priorities of the Global South. pic.twitter.com/GJegQPilXe —…
இன்றைய அரசியலில் விளம்பரம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதிலும் சமுக வலைதளங்களில் எங்கு யார் என்ன செய்தாலும், என்ன பேசினாலும் அடுத்த நொடி உலகம் மெங்கும் அது பரவும். அதேப் போல் நாம் ஒரு விஷயத்தை காப்பி அடித்து செய்தாலும் கூட, அதனை கண்டுபிடித்து விடும் அளவு இன்றைய இளைஞர்களும், தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆயினும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, வெற்று விளம்ர மாடல் அரசாக திமுக இருந்து வருகிறது என அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை உண்மையாக்கும் பொருட்டு, திமுகவினர் செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பழங்குடி இன மக்களுக்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளின் ஒன்றான தான்சானியாவில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை கையில்…
கடந்த 12-ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் இருந்து மேல் எழும்பிய சில நிமிடங்களில் அங்கிருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் விழுந்து வெடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். ஒரு இந்தியர் மட்டும் உயிர்பிழைத்தார். மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் என மொத்தம் இந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் நாடு முழுவதுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். இதற்காக வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையம் வந்த அவரிடம்…
2026 சட்டமன்ற தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வரும் திமுக. சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2021 தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி சேர்ந்து 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக, பாமக, பாஜக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2021 தேர்தலில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தோல்வியை சந்தித்த 75 தொகுதிகள் மற்றும் வீக்கான தொகுதிகள் என மொத்தம் 100 தொகுதிகளை குறி வைக்கும் திமுக. ஒன் டூ ஒன் சந்திப்பிற்கு 2021 ல் தோல்வியை சந்தித்த சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலில் அழைக்கும் திமுக தலைமை. 2021 ல் கைவிட்டு போன தொகுதியை திமுக வசம் கொண்டு வர களத்தில் அதிரடி வியூகம் அமைக்கும் திமுக.. 2026 ல் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும்…
2025-26 ஆம் கல்வியாண்டிற்கான துணை மருத்துவப் படிப்புகளுக்கான (Paramedical Courses) இணையவழி விண்ணப்ப விநியோகம் நாளை (ஜூன் 17, 2025) தொடங்குகிறது என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூன் 17, 2025 அன்று பிற்பகல் 12:01 மணி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கும். ஜூலை 7, 2025 அன்று மாலை 5 மணி விண்ணப்பப் பதிவுக்கான கடைசி தேதி என்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பாலிவுட் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். நடிப்பு மட்டுமின்றி சில வருடங்களாக தயாரிப்பிலும் கவனம் செலுத்தி இவரது நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ள இந்த படத்தில், அமீர்கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார். அத்தோடு லாகூர் 1947 என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். அதனை தொடர்ந்து தனது நீண்ட நாள் கனவான மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்ற முனைப்பிலும் இருக்கிறாராம். சித்தாரே ஜமீன் பர் படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமீர்கான் பேட்டியளித்த போது, பஹல்காம் தாக்குதல் குறித்தும் பேசியிருந்தார். “ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பஹல்காம் தாக்குதல் கொடூரமானது. அவர்கள் நம் நாட்டிற்குள் நுழைந்து சாதாரண மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர்களின் கோழைத்தனத்தை மட்டுமே காட்டுகிறது. நீங்களோ நானோ…
ஆந்திராவில் ரூ.80ஆயிரம் கடன் வாங்கிய நபரின் இளம் மனைவியை சாலையோர மரத்தில் கட்டி வைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் குப்பம் என்ற பகுதியை சேர்ந்தவர் முனி கந்தப்பா. இவர் தன்னுடைய நண்பரான திம்மராயப்பா என்பவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.80,000 பணத்தை வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளார். மாதம் ரூ.8,000 வட்டியாக கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு முனி கந்தப்பா கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. கூலி வேலை செய்து வரும் திம்மராயப்பா, சில மாதங்கள் வட்டி கட்டி வந்த நிலையில், அவரால் வட்டியும் கட்ட முடியவில்லை, அதேப் போல் அசலையும் திருப்பி செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. பணத்தை கேட்டு முனி கந்தப்பா அழுத்தம் கொடுக்க, மன உளைச்சலில் இருந்த திம்மராயப்பா, தனது மனைவி ஸ்ரீஷா மற்றும் 2 குழந்தைகளை விட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். திம்மராயப்பாவின் மனைவி ஸ்ரீஷா கூலி வேலை செய்து குழந்தைகளை பார்த்துக்…
இந்தியப் பெருங்கடலின் இருவேறு பகுதிகளில், இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு குஜராத் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தெற்கு குஜராத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 5:30 மணியளவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இதேபோல், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கங்கை நதியில் இன்று காலை 5:30 மணியளவில் மற்றொரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இதுவும் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளின் நகர்வுகளையும் வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து…